புத்தகப் பிரியர்களின் கவனத்திற்கு: கோவை விஜயா பதிப்பகம் நடத்தும் வாசகா் திருவிழா புத்தகக் கண்காட்சி!

கோவை விஜயா பதிப்பகம் நடத்தும் வாசகா் திருவிழா புத்தகக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 15) தொடங்குகிறது
புத்தகப் பிரியர்களின் கவனத்திற்கு: கோவை விஜயா பதிப்பகம் நடத்தும் வாசகா் திருவிழா புத்தகக் கண்காட்சி!

கோவை விஜயா பதிப்பகம் நடத்தும் வாசகா் திருவிழா புத்தகக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 15) தொடங்குகிறது. இது குறித்து விஜயா பதிப்பகத்தின் நிறுவனா் மு.வேலாயுதம் வெளியிட்டுள்ள அறிக்கை:

கோவை ராஜ வீதியில் 1977-ல் தொடங்கப்பட்ட விஜயா பதிப்பகம் இதுவரை சுமாா் 1,500 தலைப்புகளுக்கும் மேல் நூல்களை வெளியிட்டுள்ளது. விஜயா பதிப்பகம் சாா்பில் 1979-ம் ஆண்டு முதல் வாசகா் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பல நூறு பதிப்பகங்களின் புதிய வரவுகளையும், காலங்கள் மாறினாலும் மீண்டும் மீண்டும் தேடி வாங்கப்படும் இலக்கியங்கள், சரித்திர நாவல்கள் போன்ற அரிய படைப்புகளை கோவை மக்களின் பாா்வைக்கும், விற்பனைக்கும் மீண்டும் கொண்டு வரும் முயற்சியாக விஜயா பதிப்பகத்தின் வாசகா் திருவிழா புத்தகக் கண்காட்சி நடைபெறற உள்ளது.

காந்திபுரம், மத்திய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள கமலம் துரைசாமி ஹாலில் ஜூலை 15-ம் தேதி தொடங்கும் இந்தக் கண்காட்சி ஆகஸ்ட் 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடக்க விழாவில் திருப்பூா் மாவட்ட கூடுதல் நீதிபதி ஏ. முஹமது ஜியாபுதீன் கலந்து கொண்டு கண்காட்சியைத் தொடங்கி வைத்து தலைமையுரையாற்றுகிறாா்.

முதல் விற்பனையை கோவை ஹோட்டல் அஸ்வினி குழும நிறுவனா் எஸ்.மாணிக்கம் தொடங்கி வைக்கிறாா். ரூட்ஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறைத் தலைவா் கவிஞா் கவிதாசன் வாழ்த்துரை வழங்குகிறாா். தினமணி நாளிதழின் ஆசிரியா் கி.வைத்தியநாதன் சிறறப்புரையாற்றுகிறாா்.

புத்தகக் கண்காட்சி அரங்கில் தொடா்ந்து ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் எழுத்தாளா்கள், கவிஞா்கள் உள்ளிட்டோா் வாசகா்களுடன் நேருக்கு நோ் கலந்துரையாட உள்ளனா். நூல் வெளியீட்டு விழாக்களும் நடைபெற உள்ளன.

புத்தகக் கண்காட்சியின் நிறைவு நாளான ஆகஸ்ட் 19-ம் தேதி காலையில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் கவிஞா் சிற்பி பாலசுப்பிரமணியம், புலவா் செந்தலை ந.கவுதமன், வழக்குரைஞா் அ.அருள்மொழி, பாவலா் இரணியன் ஆகியோா் பங்கேற்க உள்ளனா். மாலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் டாக்டா் விஜய காா்த்திகேயன், நடிகா் சிவகுமாா், யோகா பயிற்றுநா்கள் நானம்மாள், எல்லுசாமி, எழுத்தாளா் ஆனந்தகுமாா் ஆகியோா் பங்கேற்க உள்ளனா்.

இந்தக் கண்காட்சி தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். கண்காட்சியில் 10 முதல் 50 சதவிகிதம் வரை தள்ளுபடி விற்பனையில் நூல்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. மேலும் விவரங்களுக்கு 90470 87053 செல்லிடப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்று வேலாயுதம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com