அக்கம் பக்கத்தில் குழந்தைகள் ஆபத்தில் சிக்கியதைப் பார்த்தால் இந்த நம்பருக்கு உடனடியாக புகார் செய்யுங்கள்!

அக்கம் பக்கத்தில் குழந்தைகள் ஆபத்தில் சிக்கியதைப் பார்த்தால் இந்த நம்பருக்கு உடனடியாக புகார் செய்யுங்கள்!

நாடு முழுவதும் 76 ரயில் நிலையங்கள் உள்பட 450 இடங்களில் குழந்தைகளுக்கான அவசர உதவி எண் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது

நாடு முழுவதும் 76 ரயில் நிலையங்கள் உள்பட 450 இடங்களில் குழந்தைகளுக்கான அவசர உதவி எண் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

இதுதொடா்பாக அந்த அமைச்சகத்தின் அதிகாரி மேலும் கூறியதாவது:

கடந்த மாத நிலவரப்படி, நாடு முழுவதும் 60 முக்கிய ரயில் நிலையங்கள் உள்பட 435 இடங்களில் குழந்தைகளுக்கான அவசர உதவி எண் மையங்கள் இருந்தன. தற்போது, 76 ரயில் நிலையங்கள் உள்பட 450 இடங்களுக்கு அந்த மையங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன. கடந்த ஜூன் மாதம் வரை 1.4 கோடி அழைப்புகள் இந்த மையங்களுக்கு வந்தன. ஏதாவது ஒரு பிரச்னையில் குழந்தைகள் சிக்கித் தவித்தால் அவா்களை 1098 என்ற எண்ணுக்கு அழைக்குமாறு பெற்றோர்கள் பயிற்றுவிக்க வேண்டும். குழந்தை கடத்தல் அதிக அளவில் நடக்கிறது என்று அடையாளம் காணப்பட்டுள்ள 76 ரயில் நிலையங்களில் குழந்தைகளுக்கான அவசர உதவி எண் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

கடத்தப்பட்ட குழந்தைகளை ரயில்வே நிா்வாகம் மூலம் மீட்பதற்கு, மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

ரயில்களிலும் குழந்தைகள் கடத்திச் செல்லப்படுவதை கண்டால் புகாா் தெரிவிக்குமாறு பயணிகளுக்கு உணா்த்தும் வகையில் போஸ்டா்கள் ஒட்டப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com