குழி வெட்டப்பட்டது தேங்காய்க்கா? நரபலிக்கா?! மாந்த்ரீகத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது!

மக்களின் புகாரை ஏற்றுக் கொண்டு செவிட்டிகல்லு கிராமத்துக்கு விரைந்த காவல்துறையினர் அங்கு மாந்த்ரீகச் செயல்களில் ஈடுபட்டிருந்த நபர்களை கையும் களவுமாகப் பிடித்தனர்.
குழி வெட்டப்பட்டது தேங்காய்க்கா? நரபலிக்கா?! மாந்த்ரீகத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் மாந்திரீக செயல்களில் ஈடுபட்ட 7 பேர் கைது. திங்களன்று ஆந்திர மாநிலம் விஜயவாடாவிற்கு அருகில் இருக்கும் கஞ்சிகசேர்லா மண்டலத்தைச் சேர்ந்த செவிட்டிகல்லு கிராமத்தில் பிளாக் மேஜிக் என்று சொல்லத்தக்க மாந்திரீகச் செயல்களில் ஈடுபடுவதாகக் கூறி காவல்துறையினரிடம் 7 நபர்களின் மீது பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். கிராம மக்களின் புகாரை ஏற்றுக் கொண்டு செவிட்டிகல்லு கிராமத்துக்கு விரைந்த காவல்துறையினர் அங்கு மாந்த்ரீகச் செயல்களில் ஈடுபட்டிருந்த நபர்களை கையும் களவுமாகப் பிடித்தனர். பிடிபட்டவர்களில் ஒருவரான தோட்டா ஸ்ரீனிவாஸ் என்பவர் தனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக உறவினர்களின் ஆலோசனையைக் கேட்டு இப்படியான மாந்திரீகச் செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. வீட்டின் அருகில் குழி வெட்டி அதில் தேங்காய் கிடைத்தால் தனக்கு நல்ல வேலை கிடைக்கும் என உறவினர் கூறியதால் அதை நம்பியே தான் இத்தகைய செயலில் ஈடுபட்டதாக தோட்டா ஸ்ரீனிவாஸ் காவல்துறை விசாரணையில் தெரிவித்திருக்கிறார்.

காவல்துறையினர் கிராமத்தை அடைந்து சோதனையில் ஈடுபட்ட சமயத்தில், ஸ்ரீனிவாஸ் தனது மாந்திரீக நம்பிக்கையின் அடிப்படையில் சுமார் 11 அடி குழியொன்றை வெட்டியிருந்தார். அதுவரை தேங்காய் கிடைத்தபாடில்லை. அவர் மேலும், மேலும் குழியின் ஆழத்தை அதிகப்படுத்திக் கொண்டே சென்ற போது கிராம மக்களுக்கு இவர்கள் நரபலி கொடுக்கத்தான் குழி வெட்டிக் கொண்டிருக்கிறார்களோ என்ற அச்ச உணர்வு எழுந்ததால் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்கள். அதனடிப்படையில் தான் தோட்டா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட 7 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

மந்திரத்தில் மாங்காய் பழுக்கும்...
கெட்பவன் கேனையாக இருந்தால் கேப்பையில் நெய் வடியும் கதை தான்....

இந்தக் காலத்தில் குழி வெட்டி அதில் தேங்காய் கிடைத்தால் நல்ல வேலை கிடைத்து தன் வாழ்க்கை சீராகும் என ஒரு 23 வயது இளைஞர் நம்புவது!

உண்மையில் குழி வெட்டப்பட்டது தேங்காய்க்கா? நரபலிக்கா? என விசாரணையின் இறுதியில் தெரிய வரலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com