புத்தம் புது மாருதி கார்களில் ப்ரேக் பிரச்னையா? என்ன தீர்வு?

வாகனம் என்பது பலரின் கனவு. பொது வாகனத்தில் தினமும் பயணம் செய்பவர்களுக்குத் தான் புரியும்
புத்தம் புது மாருதி கார்களில் ப்ரேக் பிரச்னையா? என்ன தீர்வு?

வாகனம் என்பது பலரின் கனவு. பொது வாகனத்தில் தினமும் பயணம் செய்பவர்களுக்குத் தான் புரியும் சொந்த வாகனத்தின் அருமை. எப்படியாவது இஎம்ஐ போட்டாவது இரு சக்கர வாகனம் அல்லது கார் வாங்கிவிட வேண்டும் என்பதே நடுத்தர வர்க்க மக்களின் பிரதான ஆசை.

இந்நிலையில் புது தில்லியில் மாருதி சுசூகி நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் 1 முதல் இந்த ஆண்டு மார்ச் 16 வரை பல யூனிட் புதிய ஸ்விஃப்ட் (The New Swift ) மற்றும் பலேனோ (Baleno) வகை கார்களை விற்பனை செய்தது. ஆனால் இவற்றில் 52,686 யூனிட்களில் ப்ரேக் சிஸ்டம் பழுதாகியிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. எனவே, கார்களை வாங்கியவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதுக்கு முன்னதாக, பழுதான யூனிட்களை சோதனை அடிப்படையில் திரும்ப பெற்று சர்வீஸ் செய்து தருவதென மாருதி நிறுவனம் முடிவெடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 52,000 கார்களைத் திரும்ப பெற்றது.

இந்த மாதம் (மே) 14-ம் தேதி முதல், கார் உரிமையாளர்கள், தங்கள் ஸ்விஃப்ட் மற்றும் பலேனோ வகை கார்களை சோதனைக்கு உட்படுத்தி, பழுதான பாகங்களை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம் என அந்நிறுவனம் அண்மையில் அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் 2016-ம் ஆண்டிலும் இதே போல ஒரு பிரச்னையில் இந்நிறுவனம் ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதென்ன சோதனை என்று முணுமுணுக்காமல், கிடைத்தவரை லாபம் என்று நினைப்பதே தற்காலத்தில் புத்திசாலித்தனமான செயல். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com