அடடா, கிராமர் செக் பண்றதே இல்லையா? அதிபர் ட்ரம்பை கலாய்த்த இங்கிலீஷ் டீச்சர்!

படித்துப் பார்த்த ஆங்கில ஆசிரியைக்கு ஒரே ஷாக். ஒரு அதிபர் இப்படியா படித்துப் பார்க்காமல் தனக்குரிய கடிதத்தில் கையெழுத்திடுவது? கடிதத்தில் முழுக்க முழுக்க இலக்கணப் பிழைகள் நிரம்பி வழிகின்றன
அடடா, கிராமர் செக் பண்றதே இல்லையா? அதிபர் ட்ரம்பை கலாய்த்த இங்கிலீஷ் டீச்சர்!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு அட்லாண்டாவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியை ஒருவர் ஃபிப்ரவரி மாதத்தில் ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். எதைப் பற்றி என்றால், கடந்த ஃபிப்ரவரி மாதத்தில் ஃப்ளோரிடா, பார்க்லேண்ட் பள்ளியில் சுட்டுக் கொல்லப்பட்ட 17 மாணவர்களது குடும்பங்களையும் அதிபர் ட்ரம்பு சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என அவர் விரும்பினார். எனவே தன் எண்ணத்தை ஒரு கடிதமாக்கி அதை அதிபர் ட்ரம்புக்கு அனுப்பி வைத்தார். சுட்டுக் கொல்லப்பட்ட ஒவ்வொரு மாணவரது குடும்பத்தையும் தனித்தனியாகச் சந்தித்து ஆறுதல் கூற வேண்டியதும், மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதின் பின்னணிக்கான உண்மையான காரணங்களைக் கண்டறிய விசாரணையை முடுக்கி விடுவதும் அதிபர் ட்ரம்பின் தலையாய கடமை என அந்த ஆசிரியை நினைத்தார். அந்த எண்ணத்தில் தான் அவர் ட்ரம்புக்கு கடிதம் எழுதியது. ஆசிரியை எழுதிய கடிதத்துக்கு ட்ரம்பின் வெள்ளை மாளிகை தரப்பிலிருந்து பதில் கடிதமும் வந்தது.

அந்தக் கடிதம், ஆசிரியையின் எதிர்பார்ப்பை ஏமாற்றத்தில் மூழ்கடித்தது. அதிபர் ட்ரம்ப் தரப்பில், நிகழ்ந்த் துப்பாக்கிச் சூடு குறித்த விசாரணை விளக்கங்கள் அளிக்கும் முயற்சி இருந்ததே தவிர, தமது நாட்டு மக்கள், மாணவர்களது கொலையை உருக்கமாக அணுகும் பாவனை இல்லை. அதோடு கடிதம் முழுக்க திருத்தம் செய்யவே முடியாத அளவுக்கு ஏகப்பட்ட இலக்கணப் பிழைகள் வேறு!

அதை படித்துப் பார்த்த ஆங்கில ஆசிரியைக்கு ஒரே ஷாக். ஒரு அதிபர் இப்படியா படித்துப் பார்க்காமல் தனக்குரிய கடிதத்தில் கையெழுத்திடுவது? கடிதத்தில் முழுக்க முழுக்க இலக்கணப் பிழைகள் நிரம்பி வழிகின்றன. இப்படியும் ஒரு அதிபர் இருக்கலாமா? இதை சும்மா விடக்கூடாது, ட்ரம்புக்கு ஒரு பாடம் கற்பித்தே ஆக வேண்டும். என்று முடிவு செய்து வெள்ளை மாளிகை லட்சினையிட்ட அந்தக் கடிதத்தை தன் கையால் இலக்கணத் திருத்தம் செய்து அதை முகநூலிலும் வெளியிட்ட பின்னர்  அக்கடிதத்தை ட்ரம்புக்கும் அனுப்பி வைத்திருக்கிறார்.

அந்தக் கடிதம் இது தான்...

இலக்கணப் பிழைகள் நிறைந்த இந்தக் கடிதத்தை முகநூலில் வெளியிட்ட ஆங்கில ஆசிரியை நியூயார்க் டைம்ஸ்க்கு தானளித்த விளக்கத்தில், எத்தனையோ அரசியல்வாதிகளுக்கு நான் இதற்கு முன்பு இதே விதமான கடிதங்களை அனுப்பியிருக்கிறேன். அதில் செளத் கரோலினாவின் குடியரசுத் தலைவரான லிண்ட்சே ஆபிரஹாம் எனக்கு அனுப்பியிருந்த பதில் கடிதங்களில் இலக்கண அழகைப் பார்த்தால் எனக்கு அவரைக் காட்டிலும் அவரது கடிதங்களே மிகுந்த முக்கியத்துவம் கொண்டவையாகத் தெரிகின்றன. அந்த அளவுக்கு மொழி மீது மிகுந்த ஆளுமைத் திறன் கொண்ட தலைவர்கள் எழுதிய கடிதங்கள் பல என்னிடம் இருக்கின்றன. ஆனாலும், இந்த அளவுக்கு மோசமான இலக்கணத்துடனான கடிதத்தை எந்த அரசியல்வாதியிடமிருந்தும் நான் இதுவரை பெற்றதில்லை. ட்ரம்பின் ஆங்கில இலக்கண அறிவு மிக, மிக மோசம்! என வெறுப்புடன் கலாய்த்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com