உழைப்பாளர் தினம் : கருணாநிதி வாழ்த்துச் செய்தி - Dinamani - Tamil Daily News

உழைப்பாளர் தினம் : கருணாநிதி வாழ்த்துச் செய்தி

First Published : 30 April 2013 11:43 AM IST

மே 1ம் தேதி உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி விடுக்கும் மே தின வாழ்த்துச் செய்தியில், உலக மக்கள் அனைவரும் உண்ணவும், உடுக்கவும், ஒய்யாரமாக வாழவும் தேவைப்படும் ஒவ்வொரு பொருளையும் குருதியை வியர்வையாய்ச் சிந்தி உடலை உருக்கும் உழைப்பினால் உருவாக்கித் தந்திடும் உத்தமர்களாம் தொழிலாளர்களின் நலம்நாடும் உன்னத திருநாள் மே நாள்!

“காண்ப தெல்லாம் தொழிலாளி செய்தான்

அவன் காணத் தகுந்தது வறுமையாம்!

பூணத் தகுந்தது பொறுமையாம்!”

- எனும் புரட்சிக் கவிஞரின் வைர வரிகளைக் கேட்டுக்கேட்டுத்  தொழிலாளர்களோடு தொழிலாளியாகக் கலந்து அவர்கள் மீது வாஞ்சையை வளர்த்துக் கொண்டு, அவர்தம் வாழ்க்கை மேம்பாட்டிற்காக இளமைக் காலம் தொட்டு தொய்வின்றிப் பாடுபடுபவன் என்னும் உணர்வோடு தொழிலாளர் சமுதாயத் தோழர்களுக்கு எனது உளமார்ந்த தோழர்களுக்கு எனது உளமார்ந்த மே தின நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.!

திமுக ஆட்சி காலத்தில் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பயன்பெறக் குடியிருப்பு,  தொழில் – விபத்து நிவாரண நிதி; விபத்து நிவாரண நிதி; தொழிலாளர் கல்வி நிலையம் போன்றவைகள் ஏற்படுத்தப்பட்டமை; 1990ஆம் ஆண்டு மே தின நூற்றாண்டு போன்றவைகள் ஏற்படுத்தப்பட்டமை;  1990ஆம் ஆண்டு மே தின நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை நேப்பியர் பூங்காவிற்கு, “மே தினப் பூங்கா” எனப் பெயரிட்டு அங்கு மே தின நினைவுச் சின்னம் அமைத்தமை;  நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இலவச நிலம்; விவசாயக் கூலிகளாகவும், தொழிலாளர் குடும்பங்களுக்கு இலவச நிலம்; உழைப்பாளிகளாகவும் திகழும் ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு 6000 ரூபாய் நிதிஉதவி; உழைப்பாளிகளின் பொது அறிவு வளர்ச்சிக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள்; தொழிலாளர் குடும்பங்களின் பசிப்பிணி போக்கிட ரூபாய்க்கு 1கிலோ அரிசி; எரிவாயு இணைப்புடன் கூடிய இலவச எரிவாயு அடுப்புகள்; குடிசைகள் இல்லா கிராமங்கள், குடிசைப்பகுதிகள் இல்லா நகரங்கள் கொண்ட தமிழகம் காண “வீடு வழங்கும் திட்டம்; என எண்ணிலாத் திட்டங்களை எல்லாம் உருவாக்கி வெற்றிகரமாகச் செயல்படுத்தி, ஏழை எளிய பாட்டாளி மக்களின் வாழ்வு செழிக்க வழிவகுத்த நிகழ்வுகளையெல்லாம் நினைவுகூர்ந்து;

எதிர்காலம் இந்த ஏழைத் தொழிலாளர்களின் வாழ்வில் வளம் சேர்க்கும் எனும் தெளிவான நம்பிக்கையோடு தொழிலாளர் சமுதாயத்திற்கு எனது இதயம் கனிந்த மே தின நல்வாழ்த்துகளை

மீண்டும் உரித்தாக்கி மகிழ்கிறேன் என்று கூறியுள்ளார்.

A+ A A-

இந்த பகுதியில் மேலும்

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க
*
1000 ஏதாவதொன்று

வாசகரின் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட்டவை

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.