புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் வைக்கச் சென்றவர் லாரி மோதி சாவு - Dinamani - Tamil Daily News

புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் வைக்கச் சென்றவர் லாரி மோதி சாவு

First Published : 05 September 2013 03:39 PM IST

விழுப்புரம் மாவட்டம் எலவனாசூர்கோட்டை அருகே வியாழக்கிழமை புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் வைக்கச் சென்றவர் மீது லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி வட்டம் தியாகதுருகம் ஒன்றியம் குன்னியூரைச் சேர்ந்த கலியன் மகன் முருகன்(45). விவசாயியான இவர், இவரது மகன் நரசிம்மன்(12), உறவினர் ரங்கநாதன்(30) ஆகிய மூவரும் ஒரு மோட்டார் பைக்கில் புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்கு தனது உறவினர் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பிதழ் வைக்கச் சென்றுள்ளனர். அவர்கள் எலவனாசூர்கோட்டை அருகே செல்லும்போது கள்ளக்குறிச்சியிலிருந்து உளுந்தூர்பேட்டையை நோக்கி வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில் பைக்கில் சென்ற கலியன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதில் மேலும் முருகன் மகன் நரசிம்மன் மற்றும் அவரது உறவினர் ரங்கநாதன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், தனிப்பிரிவு ஏட்டு தன்ராஜ் மற்றும் எலவனாசூர்கோட்டை போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

A+ A A-

இந்த பகுதியில் மேலும்

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க
*
1000 ஏதாவதொன்று

வாசகரின் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட்டவை

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.