தலைநகரில் கேள்விக்குறியாகும் பெண்கள் பாதுகாப்பு! - Dinamani - Tamil Daily News

தலைநகரில் கேள்விக்குறியாகும் பெண்கள் பாதுகாப்பு!

First Published : 18 December 2012 01:18 PM IST

"நள்ளிரவில் கழுத்து நிறைய நகைகளுடன் என்றைக்கு ஒரு பெண் தனியாக அச்சமின்றி தெருவில் நடந்து செல்ல முடிகிறதோ, அன்றைக்குத்தான் உண்மையான சுதந்திரம்

கிடைத்ததாகச் சொல்ல முடியும்'' என்று கூறினார் தேசப்பிதா மகாத்மா காந்தி.

ஆனால் மத்திய, மாநில போலீஸôர் பாதுகாப்பு அதிகம் நிறைந்த நாட்டின் தலைநகரான தில்லியில் இரவில் பெண்கள் தனியாக மட்டுமல்ல, துணையுடன்கூட செல்ல முடியாத  பாதுகாப்பற்ற நிலை தொடர்கிறது.

ஞாயிற்றுக்கிழமை இரவு, தனது நண்பருடன் பஸ்ஸில் சென்ற கல்லூரி மாணவி ஒரு கும்பலால் தாக்கப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் இதை நிதர்சனமாக்கியுள்ளது.

பெண் முதல்வரைக் கொண்ட தில்லியில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்வது குறித்து பெண்ணிய ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

நாட்டின் தலைநகர் அந்தஸ்து மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா, வர்த்தகம், கல்வி, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஏராளமானோர் வந்து செல்லும் பெருநகராக தில்லி விளங்குகிறது.

ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சம்பவம் தங்களின் அச்சத்தை அதிகரித்துள்ளதாக, பன்னாட்டு நிறுவனங்கள், வெளியூர்களில் இருந்து தில்லியில் தங்கிப் படிக்கும் மாணவிகள் கூறுகின்றனர். 

கடந்த ஆண்டு தில்லி காவல் துறை வெளியிட்ட புள்ளிவிவரப்படி, தில்லியில் 18 மணி நேரத்திற்கு ஒரு பாலியல் பலாத்கார சம்பவமும், 14 மணி நேரத்திற்கு ஒரு பெண் மானபங்கப்படுத்தப்படுவதாகவும் நடைபெறுகிறது. 

சில மாதங்களுக்கு முன், கேளிக்கை விடுதியில் ஒரு பெண் மானபங்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதற்கு முன்னதாக, கால் சென்டரில் பணியாற்றிய பெண் இரவு நேரத்தில் பணி முடிந்து காரில் வீடு திரும்பிய சமயத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளானார். 2010-ம் ஆண்டில் மட்டும், தேசிய தலைநகர் வலயத்தில் 414 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாயின.

அதாவது, சராசரியாக ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு பாலியல் பலாத்கார சம்பவம் என்ற அளவில் மோசமான நிலை. நாட்டில் உள்ள 35 பெரிய நகரங்கள் எவற்றிலும் இந்த  அளவுக்கு பாலியல் பலாத்கார சம்பவங்கள் நிகழவில்லை.

தில்லியில் ஸ்பெயின், ருவாண்டா, நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்களும் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டது குறிப்பிடத்தக்கது.

A+ A A-

இந்த பகுதியில் மேலும்

கருத்துகள்(1)

இப்போதுள்ள நிலையில், தங்கம் விற்கும் விலையில், முன்பு காந்தி அடிகள் சொன்னது போலே ராத்திரியில் நகைகளுடன் யாரும் செல்ல முடியாது. அப்படி சென்றால் அவர்களுக்கு பாதுகாப்பும் கிடையாது. நம்மை படைத்த கடவுள் மட்டுமே நம்மை காக்க முடியும். இது தான் நிதர்சனமான உண்மை. ஜெயப்ரகாஷ். சிவகாசி. தமிழ்நாடு. (உதாரணம்: தமிழ்நாட்டில் ஒவ்வொரு அரசியல் தலைவர்களின் பிறந்த நாளன்று, கைதிககளை விடுவிக்கும் திட்டம் நடக்கிறது, இதனால் தான் அங்கு சட்டம் ஒழுங்கு சீர் குலைகிறது. )

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
கருத்தை பதிவு செய்க
*
1000 ஏதாவதொன்று

வாசகரின் கருத்துகள் தணிக்கைக்கு உட்பட்டவை

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.