வேலைக்குப் போகவே வெறுப்பா இருக்கா? அப்போ இப்படி செஞ்சு பாருங்க!

பிடிச்ச வேலைக்கு போறதுல எவ்வளவு சந்தோஷம் இருக்கோ அதே அளவு சந்தோஷம் செய்ற வேலையை பிடிச்சு செய்றதுலையும் இருக்கு.
வேலைக்குப் போகவே வெறுப்பா இருக்கா? அப்போ இப்படி செஞ்சு பாருங்க!

“ஐயோ... நாளைக்கு திங்கட் கிழமையா!?... இந்த வீக்கெண்டும் எப்படி போச்சுனே தெரியலையே... காலையில எழுந்து ஆஃபிஸ் வேற போகனும்...!” அப்படினு ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக் கிழமை தூங்குறதுக்கு முன்னாடி சலிச்சிக்கிற பார்ட்டியா நீங்க? இதோ உங்களுக்கு சில டிப்ஸ்!

அதிகமா ஸ்ட்ரெஸ் தராத, சந்தோஷமான வேலைச் சூழலே எல்லோருக்கும் பிடிச்ச ஒண்ணு. குறிப்பா செய்ற வேலையை நாம் விரும்பி நேசிச்சு செய்ய வைக்கும் ஒரு மந்திரமும் இதுதான். பிடிச்ச வேலைக்கு போறதுல எவ்வளவு சந்தோஷம் இருக்கோ அதே அளவு சந்தோஷம் செய்ற வேலையை பிடிச்சு செய்றதுலையும் இருக்கு. அதுக்கு முக்கியம் உங்களுக்கு பிடிச்சா மாதிரியான ஒரு வொர்க்கிங் என்விரான்மெண்ட். அத எப்படி உருவாக்குறதுனு கேக்குறீங்களா? அது ரொம்ப சிம்பிள் தாங்க, எப்படினு சொல்றேன் வாங்க.
 

  1. நீங்க வேல செய்ற இடத்த சுத்தி கலஞ்சி கிடக்குற ஆஃபிஸ் பைல்ஸ், டாக்குமெண்ட்ஸ், ஐடி கார்ட், அப்லிகேஷன் ஃபார்ம்ஸ் இதையெல்லாம் எடுத்து ஓரம் கட்டி வெச்சிட்டு உங்களுக்கு சந்தோஷம் தர பிடிச்ச புகைப்படங்களையோ, இல்ல லாஃபிங் புத்தா மாதிரியான சின்ன சிலைகளையோ, ஊக்குவிக்கிற உத்வேக படுத்துற மாதிரியான வாசகங்களையொ அடிக்கடி உங்க கண்ணுல பட்றா மாதிரி வைங்க. இது உங்கள சுத்தி இருக்க வெறுமையா போக்கி நீங்க அத பாக்கும் போதெல்லாம் உங்க முகத்துல ஒரு சின்ன சிரிப்பை கொண்டு வரும்.
     
  2. உங்க டெஸ்க்ல பொன்சாய் மாதிரியான சின்ன சின்ன செடிகளை வைப்பது சுத்தமான இயற்கை காற்றை உங்களைச் சுவாசிக்க வைக்கும். இதனால ஒரு விதமான மன அமைதி உங்களுக்கு கிடைக்கறதோட, மன அழுத்தத்தைக் குறைத்து உங்களோட  ரத்த அழுத்தம் போன்றவற்றை சீர் செய்து, வேலையில் அதிகம் கவனம் செலுத்த வைக்கும்.
     
  3. உங்களது வேலையிலோ அல்லது உடன் பணி செய்வோருடனோ ஏதேனும் பிரச்னை இருந்தால் அதை மனதிலேயே வைத்துக் கொள்ளாமல் வெளிப்படையாகப் பேசி விடுவது தேவையில்லாத மன சுமையை குறைக்கும். பேசும் போது பிரச்னையை வளர்க்கும் நோக்கம் இல்லாமல் பரந்த மனப்பான்மையுடன் பேசுவது வேலையிடத்தில் உங்களது மரியாதையை உயர்த்தும். அது உங்களது பாஸாகவே இருந்தாலும் சரி.
     
  4. 8 மணி நேரமும் ஒரே இடத்தில் உக்காந்திருக்காமல் வேலைக்கு நடுவில் குறைந்தது ஒரு 15 நிமிடமாவது ஓய்வு எடுங்கள். ஓய்வு என்பது கண்களை மூடித் தூங்குவது இல்லை மனசுக்கு பிடிச்சா மாதிரியான பாடல் எதாவது கேட்பது, ஒரு சின்ன வாக் போறது அப்படினு நாள் முழுவதும் பிசியா வேலை செய்ற மூளைக்குக் கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்க. இதனால் உங்க மூள ஓவரா சூடாகி தேவை இல்லாத அழுத்தத்தை உங்களுக்கு ஏற்படுத்தாது.
     


இந்த மாதிரி சின்ன சின்ன மாற்றங்கள் செய்றதால வேலைக்கு போறத நினைச்சாலே கடுப்பாகுற நீங்க, இனி திங்கட் கிழமையில கூட சந்தோஷமா வேலைக்குப் போய், வார கடைசி வரும்போது இந்த வாரம் நல்ல வேலை செஞ்சோம் அப்படிங்கிற மன நிறைவோட வீக்கெண்டஸ எஞ்சாய் பன்னுங்க.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com