லஷ்மண் ஸ்ருதி நடத்தும் ‘சென்னையில் திருவையாறு’ 

லஷ்மண் ஸ்ருதி இசைக்குழுவினர், ‘சென்னையில் திருவையாறு’ என்ற பெயரில், மார்கழி 
லஷ்மண் ஸ்ருதி நடத்தும் ‘சென்னையில் திருவையாறு’ 

லஷ்மண் ஸ்ருதி இசைக்குழுவினர், ‘சென்னையில் திருவையாறு’ என்ற பெயரில், மார்கழி மாத இசை நிகழ்ச்சியை, கடந்த 12 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.

தற்போது இதன் 13-ஆம் ஆண்டு துவக்க விழா, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் வரும் டிசம்பர் 18-ம் தேதி மாலை 6 மணிக்கு துவங்க இருக்கிறது.

அனைவராலும் திருவையாறுக்குச் சென்று இசை விழாவில் கலந்து கொள்ள முடியாது. அக்குறையை போக்கவும், சென்னைவாசிகள் பயன்பெறும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் இவ்விழாவை வருகின்றனர் விழாவின் அமைப்பாளர்களான லஷ்மண் ஸ்ருதி. அவ்வகையில் இந்த இசை உற்சவம் டிசம்பர் 18-ம் தேதி முதல் டிசம்பர் 25 வரை எட்டு நாட்கள் சென்னையில் நடைபெறவிருக்கிறது. தவிர, தினமும் வாய்ப்பாட்டு, பரதநாட்டியம், நடனம் உள்ளிட்ட பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.

பிரபல இசைக் கலைஞர்கள் முதல் புதியவர்கள் வரை பங்கேற்கிறார்கள். தொடர்ந்து எட்டு நாட்கள் 60 நிகழ்ச்சிகளை தினமும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அனைவரும் ரசித்து மகிழலாம். இந்நிகழ்ச்சியை திரைப்பட இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா தொடங்கி வைக்கிறார். முன்னணி கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானி இசைக் கலைஞர்கள் பலர் பங்கேற்க உள்ள இந்த உற்சவத்தில், 500 பாடகர்கள் பஞ்சரத்ன கிருதியைப் பாடுவதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  

டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவுக்கு மரியாதை

தொடக்க விழாவை முன்னிட்டு பத்மவிபூஷன் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவின் நினைவாகவும் அவருக்கு மரியாதை செய்யும் வகையாகவும், அவரது மெழுகுச் சிலை திறந்து வைக்கப்பட்டு, 8 நாட்கள் காமராஜர் அரங்க வளாகத்தில் வைக்கப்படும்.

இலவச பேருந்து

இசை நிகழ்ச்சி முடிந்ததும் ரசிகர்கள் அவரவர் வீடுகளுக்கு பத்திரமாகத் திரும்பிச் செல்ல காமராஜர் அரங்கத்திலிருந்து சோழிங்க நல்லூர், திருவான்மியூர், மேடவாக்கம், தாம்பரம், குன்றத்தூர், பூந்தமல்லி, ஆவடி, ரெட் ஹில்ஸ், திருவற்றியூர், பாரிமுனை, பெரம்பூர், மைலாப்பூர் ஆகிய இடங்கள் உள்ளிட்ட சென்னையின் முக்கியப் பகுதிகளுக்கு இரவு 7.15 முதல் இலவசமாகப் பேருந்து இயக்கப்படும்.

பம்பர் பரிசுகள்

எட்டு நாட்கள் நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சியில் தொடர்ந்து கலந்து கொண்டவர்களில் ஒருவர் தேர்ந்தெடுத்து, அமெரிக்காவுக்குச் சென்று வருவதற்கான இலவச விமான டிக்கெட்டுகளை கும்பகோணம் அரசு ஜுவல்லர்ஸ் வழங்க இருக்கிறார்கள். 

சீனியர் சிட்டிசன்களுக்கு மரியாதை 

இந்த ஆண்டு மூத்த குடிமக்களுக்கு மரியாதை செய்யும் வகையில், முதியோர் இல்லங்களிலிருந்து 500 முதியவர்களுக்கு காலை 7 மணி நிகழ்ச்சியை தினமும் கண்டு களிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாம சங்கீர்த்தனம், உபன்யாஸம், மற்றும் பக்திப் பாடல்களை கேட்பது ஆகியவை மறக்க முடியாத தெய்விக அனுபவமாக மலரும். இதற்காக விரிவான ஏற்பாடுகளை நிகழ்ச்சி நிர்வாகத்தினர் மேற்கொண்டுள்ளனர். இலவச போக்குவரத்து மற்றும் காலை உணவு, காபி மற்றும் தேனீர் அரங்கில் வழங்கப்படும். மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஒவ்வொருக்கும் சில அத்தியாவசிய மருந்துகள், சோப்பு, சீப்பு, கண்ணாடி, துண்டு, நோட்டுப் புத்தகம், பேனா, முதலுதவிப் பெட்டி ஆகியவை உள்ளிட்ட ஒரு பரிசுப் பை வழங்கப்படும்.

அரங்கத்தில் இவலச மருத்துவ முகாம், இசைக்கருவிகள் விற்பனை, அறிவுத் திறன் போட்டி, உணவுத் திருவிழா ஆகியவை நடைபெறவுள்ளது.

உணவு விழா

'சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ரசிகர்களை மகிழ்விக்க, உணவுத் திருவிழாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இசை விழாவுடன் சேர்ந்து, அதே வளாகத்திற்குள் விதவிதமான உணவு வகைகள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இயற்கை உணவு உள்ளிட்ட பலவேறு உணவுக் கடைகள், முன்னணி சமையல் கலைஞர்களின் கைவண்ணத்தில் ருசியான உணவு வகைகள், வெஜிடபுள் கார்விங், ஐஸ் கார்விங் உள்ளிட்ட சில சமையல் போட்டிகள் என தனித்துவமான உணவுத் திருவிழாவாக இது நடைபெற உள்ளது. நம்ம வீட்டுக் கல்யாணம் எனும் உணவு அரங்கில் ஐயப்ப பக்தர்களுக்கு 50% சிறப்பு தள்ளுபடி உண்டு.

காய்கறிகளால் வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்டமான மூவர்ணக் கொடி

பாரத மாதாவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக 50 அடி அகலமும் 24 அடி உயரமும் கொண்ட, காய்கறிகளால் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்டமான மூவர்ணக் கொடி உணவு வளாக அரங்கத்தின் நுழைவாயிலில் ஏற்றப்படும்.

ரூஃப் டாப் கார்டன்

மொட்டைமாடி தோட்டக் கலையின் முக்கியத்துவத்தை பிரபலப்படுத்தும் வகையில் இந்த ஆண்டு 10 அடி உயரம் 40 அடி அகலம் மற்றும் 40 அடி பரப்பளவில் ரூஃப் டாப் கார்டனை வடிவமைத்துள்ளார்கள். மாடி / கூரை தோட்ட வளர்ப்பை வலியுறுத்தும் விதமாக கண்ணைக் கவரும் வண்ணம் அது இருக்கும். மேலும் தோட்டக் கலை வல்லுநர்களிடம் சந்தேகங்களைப் பற்றி விவாதிக்கலாம்.  

நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகிழ அனைவருக்கும் ஒரு நல்வாய்ப்பாக இது அமைவது உறுதி. 

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள www.lakshmansruthi.com ஆகிய இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் :

தொலைபேசி எண்கள் - 044-48562170, 88070 44521 
மெயில் ஐடி - ct@lakshmansruthi.com 
இணைய தளம் : www.lakshmansruthi.com / www.chennaiyilthiruvaiyaru.com
முகநூல் - https://www.facebook.com/Chennaiyilthiruvaiyaruofficial

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com