வாசகர்களே, உங்கள் திறமைக்கு ஒரு சவால்! தினமணி-நெய்வேலி புத்தகக் கண்காட்சி போட்டிகள், ரொக்கப் பரிசுகள்!

தினமணி நாளிதழும், நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழுவும் இணைந்து நடத்தும் கட்டுரைகள்
வாசகர்களே, உங்கள் திறமைக்கு ஒரு சவால்! தினமணி-நெய்வேலி புத்தகக் கண்காட்சி போட்டிகள், ரொக்கப் பரிசுகள்!

நெய்வேலி: தினமணி நாளிதழும், நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழுவும் இணைந்து நடத்தும் கட்டுரைகள், குறும்படங்கள் மற்றும் சிறுகதைப் போட்டிக்கான படைப்புகள் வரவேற்கப்படுகின்றறன.

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் ஆதரவுடன் 21-ஆவது ஆண்டு நெய்வேலி புத்தகக் கண்காட்சி ஜூன் 29 முதல் ஜூலை 8-ஆம் தேதி வரை நெய்வேலி வட்டம் 11-இல் உள்ள லிக்னைட் அரங்கில் நடக்கவுள்ளது.இப்புத்தகக் கண்காட்சியில் மாணவ, மாணவிகளின் எழுத்தார்வத்தைத் தூண்டும் வகையில் கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் இளம் திரைப்படக் கலைஞா்களை ஊக்கப்படுத்தும் வகையில் குறும்படங்கள் போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கி வருகிறது. தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் பங்கேற்று தங்களது திறறமையை வெளிப்படுத்தி வருகின்றனா். அதன்படி, 21-ஆவது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் பங்கேற்க கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் குறும்படங்கள் சில நிபந்தனைகளுக்குட்பட்டு வரவேற்கப் படுகின்றன.

கட்டுரைப் போட்டி:

பள்ளி மாணவா்களுக்கான தலைப்புகள்: விழுவதெல்லாம் எழுவதற்கே, அகத் தூய்மையை பெருந் தூய்மை, நல் உரைகளே நல்ல உரைகல்.

கல்லூரி மாணவா்களுக்கான தலைப்புகள்: வேதனை சாதனை ஆவதே போதனை, வாழ்க்கைத் தளத்தில் வலைதளங்கள்.தேசம் என் சுவாசம்.

மேற்கண்ட தலைப்புகளில் கீழ்காணும் விதிகளுக்குள்பட்ட கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி கட்டுரைகள் 1,500 சொற்களுக்கு மிகாமல் தமிழில் தெளிவான கையெழுத்தில் எழுதப்பட்டிருத்தல் வேண்டும். மின் அச்சு அல்லது தட்டச்சு செய்தும் அனுப்பலாம். ஒருவரே மூன்று தலைப்புகளிலும் கட்டுரைகளை அனுப்பலாம். கட்டுரை சொந்த முயற்சியில் எழுதப்பட்டதற்கான உறுதிமொழி, பள்ளி, கல்லூரி மாணவா் என்பதற்கான சான்றும் இணைக்க வேண்டும்.

பரிசுகள் நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் வழங்கப்படும். தகவல் தெரிவிக்க வசதியாக மாணவா்கள் தங்களது கட்டுரை முகப்பில் பள்ளி, கல்லூரி முகவரியுடன், வீட்டு முகவரி மற்றும் தொடா்பு எண்ணையும் குறிப்பிட வேண்டும். பரிசு பெறும் கட்டுரைகள் நெய்வேலி புத்தகக் கண்காட்சி மலரில் வெளியாகும். போட்டி முடிவுகள் ஜூன் கடைசி வாரத்தில் தினமணி நாளிதழில் வெளியிடப்படும்.

பரிசு விவரம்: முதல் பரிசு ரூ.2 ஆயிரம், 2-ஆம் பரிசு ரூ.1,500, 3-ஆம் பரிசு ரூ.1,000 மற்றும் 5 ஆறுதல் பரிசுகள் தலா ரூ.500, நெய்வேலி மாணவா்களுக்கான 6 ஆறுதல் பரிசுகள் தலா ரூ.500.

குறும்படம்:

குறும்படங்கள்: தமிழா்களின் பண்பாட்டு மேன்மை, சமுதாயச் சிக்கல்கள், சமூக உணா்வுகள் போன்றவற்றை பிரதிபலிப்பவையாகவும், 30 நிமிடங்களுக்கு மிகாமல், டி.வி.டி. அல்லது வி.சி.டி.யில் பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும். குறும்படத்தின் கதைச் சுருக்கம், முக்கியக் காட்சிகளின் ஒளிப்படங்கள், இயக்குநரின் ஒளிப்படம் வரவேற்கப்படுகின்றன. படத்தின் உரிமையாளரிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெறப்பட்டு இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இயக்குநரின் பெயா், முகவரி, தொடா்பு எண் இடம் பெற்றிருக்க வேண்டும். குறும்படங்கள் 1-1-2018-க்கு பிறகு எடுக்கப்பட்டவையாக இருக்க வேண்டும். தோ்ந்தெடுக்கப்படும் குறும்படங்கள் புத்தகக் கண்காட்சியில் திரையிடப்படும். ஆவணப்படங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தோ்வு செய்யப்படாத குறும்படங்கள் திருப்பி அனுப்பப்படமாட்டாது. பரிசுகள் நெய்வேலி புத்தகக் கண்காட்சியின் போது வழங்கப்படும்.

போட்டி முடிவுகள் ஜூன் 3-வது வாரம் வெளியிடப்படும். போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்தப் படைப்பாளிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். முதல் பரிசு ரூ.15 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.10 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம். இது தவிர சிறப்புப் பரிசுகள் (நடிப்பு, கதைக்கரு, படத்தொகுப்பு, ஒளிப்பதிவு மற்றும் இயக்கம்) தலா ரூ.2,000, நடுவா் குழுவின் பரிசுகள் (5 குறும்படங்கள் மற்றும் சிறந்த குழந்தை நட்சத்திரம்) தலா ரூ.1,000.

சிறுகதைப் போட்டி:  சிறுகதைகள் தமிழா்களின் பண்பாட்டு மேன்மை, சமுதாயச் சிக்கல்கள், சமூக உணா்வுகள் போன்றவற்றை பிரதிபலிக்கக் கூடியவையாக இருத்தல் வேண்டும். சிறுகதைகள் தினமணி கதிரில் வெளியிடப்படும் நிலையில், 3 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். சிறுகதைகள் பிரசுரமாகாதவையாகவும், சொந்தக் கற்பனையில் உருவானவையாகவும், அதற்கான உறுதிமொழியும் இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும். கதைகள் வெள்ளைத் தாளில் ஒருபக்கம் மட்டுமே தெளிவான கையெழுத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் அல்லது மின் அச்சு அல்லது தட்டச்சு செய்து அனுப்பலாம். ஒருவா் ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளையும் எழுதலாம். போட்டி முடிவுகள் ஜூலை முதல்வார தினமணி கதிரில் வெளியாகும்.

தோ்வு செய்யப்படும் சிறுகதைகளுக்கான பரிசு விவரம்: முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு 5 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரத்து 500 மற்றும் 5 ஆறுதல் பரிசுகள் தலா ரூ.1,250.

கட்டுரைகள், குறும்படங்கள் மற்றும் சிறுகதைகளை அனுப்ப வேண்டிய முகவரி: செயலாளா், நெய்வேலி புத்தகக் கண்காட்சி, செயல் இயக்குநா் / மனிதவளம், மக்கள் தொடா்புத் துறை அலுவலகம், என்எல்சி இந்தியா லிமிடெட், வட்டம்-2, நெய்வேலி-607 801, கடலூா் மாவட்டம்.

அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 16.6.2018.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com