உங்களுக்கு கதகளி பயிற்சி பெற ஆர்வம் உள்ளதா? இதைப் படியுங்கள் முதலில்!

திருவனந்தபுரத்தில் பெற்றோருடன் வசித்து வந்த லலிதாவுக்கு சிறுவயது முதலே, கேரளாவின் பாரம்பரிய
உங்களுக்கு கதகளி பயிற்சி பெற ஆர்வம் உள்ளதா? இதைப் படியுங்கள் முதலில்!

திருவனந்தபுரத்தில் பெற்றோருடன் வசித்து வந்த லலிதாவுக்கு சிறுவயது முதலே, கேரளாவின் பாரம்பரிய நடனமான கதகளி மீது தீராத ஆர்வமிருந்ததால், தானும் கதகளியை முறையாக கற்றிருந்தார். 17-ஆவது வயதில் கே.ஜி.தாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டபின் கேரளாவைவிட்டு கணவருடன் வெளியேற வேண்டியதாயிற்று. இவரது கணவர் ஒரு தலைமைப் பொறியாளர் என்பதால் ஒடிசா, டெல்லி, புணே, பாக்தாத், திரிபோலி என பல இடங்களுக்கு மாற்றலாகி கொண்டிருந்தார். இந்தியாவில் தங்கும் போதெல்லாம் கதகளி நிகழ்ச்சியை நடத்த லலிதாதாஸ் தவறுவதில்லை. சில சமயங்களில் ஆர்வம் காரணமாக கதகளி நடன நிகழ்ச்சியைக்காண பல தடவை கேரளா சென்றதும் உண்டு.

1999-ஆம் ஆண்டு கணவர் காலமான பின்பு, அடிக்கடி கேரளா சென்று கதகளி நடனத்தை பார்த்துவிடுவது லலிதாவுக்கு சிரமமாக இருந்தது. பெங்களூரில் தன் மகளும், எழுத்தாளருமான மீனா தாஸ் வீட்டில் தங்கியிருந்த லலிதா தாஸ், ஒருநாள் தன் இயலாமையை மகள் மீனாதாஸ் மற்றும் அவரது கணவர் நாராயணனிடம் கூறியபோது, பெங்களூரிலேயே "கதகளி' பயிற்சி மையமொன்றை தொடங்கினால் என்ன என்ற யோசனை சொன்னனர். 2009-ஆம் ஆண்டு "பெங்களூரு கிளப் ஃபார் கதகளி அண்ட் த ஆர்ட்ஸ்' என்ற அமைப்பு உருவாயிற்று.

மலையாளிகள் மட்டுமன்றி கன்னடர், தெலுங்கர், தமிழர் என பிற சமூகத்தினரும் கதகளி பயிற்சி பெற வேண்டுமென்ற எண்ணத்தில் துவங்கப்பட்ட இந்த அமைப்பில் எதிர்பார்த்ததை விட நிறைய பேர் பயிற்சி பெற தொடங்கினர். கதகளி நடனத்துடன் குச்சிப்புடி, பரதநாட்டியம், மோகினியாட்டம் போன்ற பிற நடனங்களும் கற்று தரப்பட்டன. தன்னுடைய தாய்க்கு உதவும் பொருட்டு லலிதா தாஸின் மகள் மீனாதாஸ் கதகளி நடன அடிப்படையிலேயே இதிகாச கதைகளை நாட்டிய நடாகமாக வடிவமைத்து தந்ததோடு, தானும் மேடையேறி ஆடத் தொடங்கினார். இதனால் கதகளி நடன பயிற்சியளிக்கும் முதல் பெண்மணி என்ற பெருமை லலிதா தாஸþக்கு கிடைத்தது. 'கதகளி' பயிற்சி மையத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்த காரணம் என்ன என்பதை லலிதா தாúஸ (81) கூறுகிறார்:

சிறுவயது முதலே "கதகளி' நடனத்தில் ஈடுபாடு கொண்ட நான், தற்போது வயது முதிர்வு காரணமாக கேரளா செல்ல முடியாது என்ற காரணத்தால் பெங்களூரிலேயே என் மகள் உதவியுடன் கதகளி பயிற்சி மையமொன்றை தொடங்கினேன். எனக்காக என் மகள் மீனா தாஸ், கர்ணன், வால்மீகி பிரதிபா, சிலப்பதிகாரம் போன்ற இதிகாசங்களை நாட்டிய நாடகமாக வடிவமைத்து கொடுத்தார். கதகளி நாட்டிய அடிப்படையில் இவைகளை நடத்த கேரளாவிலிருந்தே 55 பேரை வரவழைத்து மேடை ஏற்றினேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த மூன்று நாட்டிய நாடகங்களையும் பெங்களூரில் மட்டுமின்றி பல்வேறு நகரங்களிலும் நடத்தியுள்ளேன். இதற்காக "சமன்வே கலாஸ்ரீ விருது' உள்பட எட்டு விருதுகள் கிடைத்துள்ளன. இந்த நாட்டிய நாடகத்திற்காக உடைகளை கலா மண்டலம் கோபி வடிவமைத்து கொடுத்ததோடு, நாடகத்திலும் நடித்து வருகிறார்.

கதகளி பயிற்சி பெற நல்ல இசை, இசைக்கேற்ப முகபாவம், நடிப்பு முக்கியம். கதகளி கலைஞர்கள் வெளிபடுத்தும் கண்ணசைவுகள், முத்திரைகள் மூலமாகவே பார்வையாளர்கள் கதையை புரிந்து கொள்ளலாம். கதகளிக்காகவே தங்களை அர்ப்பணித்து கொண்ட கலைஞர்களும் உண்டு. நிறைய பொது நிகழ்ச்சிகள், சபாக்களில்இருந்து இந்த நாட்டிய நாடகங்களை நடத்த வாய்ப்புகள் வருகின்றன. என் ஆயுள் உள்ளவரை ஆண்டுக்கு ஐந்து அல்லது ஆறு முறையாவது இந்த நாட்டிய நாடகத்தை மேடை ஏற்ற வேண்டுமென்பதே என் கனவாக உள்ளது' என்கிறார் லலிதா தாஸ்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com