சிவகாமியின் ‘ஆனந்தாயி’ நாவல் குறித்த அறிமுகம்!

சிவகாமியின் ‘ஆனந்தாயி’ நாவல் குறித்த அறிமுகம்!

சிவகாமியின் படைப்புகளில் அவரது மாஸ்டர் பீஸாக இந்த ‘ஆனந்தாயி’ நாவலைக் கருதுகிறேன். பாமாவுக்கு ஒரு ‘கருக்கு’ போல சிவகாமிக்கு ‘ஆனந்தாயி’!

ஒவ்வொரு எழுத்தாளருக்கும் அவரது படைப்புகளில் ஏதாவது ஒரு அவரது மாஸ்டர் பீஸாகக் கொண்டாடப்படும். அந்த வகையில் ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், எழுத்தாளருமான சிவகாமியின் படைப்புகளில் அவரது மாஸ்டர் பீஸாக இந்த ‘ஆனந்தாயி’ நாவலைக் கருதுகிறேன். பாமாவுக்கு ஒரு ‘கருக்கு’ போல சிவகாமிக்கு ‘ஆனந்தாயி’!

இந்த நாவலில் ‘ஆனந்தாயி’ படும் துயரங்களைக் காண்கையில் கிட்டத்தட்ட ஆனந்தாயியின் வாழ்வை ஒத்த மற்றொரு கதாபாத்திரமும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலாது. அது கண்மணி குணசேகரனின் ‘அஞ்சலை’ இந்தப் பெண்கள் படும்பாடு இருக்கிறதே.. அப்பப்பா! ச்சீ...ச்சீ இதென்ன வாழ்க்கை, இதற்காகத் தான் பெண்ணென்று பிறந்தோமா? என்றிருக்கும். ஆனாலும் அப்படி நினைப்பவர்கள் இந்தியப் பெண்களின் இன்னும் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் ஜாதி ரீதியாகவும் சரி, பொருளாதார ரீதியாகவும் சரி கீழ்த்தட்டில் வாழ நிர்பந்திக்கப்பட்ட பெண்களின் உலகைப் பற்றிய ஞானம் ஒரு சிறிதும் இல்லாதவர்கள் என்று தான் எண்ணியாக வேண்டும். மேற்சொன்ன நாவல்களில் வரும் பெண் கதாபாத்திரங்கள் சலிப்பும், துயரும் மிகுந்த தங்களது வாழ்க்கையை எப்படி வாழ்ந்து தீர்க்கிறார்கள் என்பது தான் கதையோட்டத்தில் நம்மை ஈர்க்கும் சுவாரஸ்யக் கண்ணி.தீவிர வாசிப்பு ஆர்வம் இருப்பவர்கள் வாழ்வில் ஒருமுறையேனும் வாசிக்க வேண்டிய தமிழ்நாவல்களில் மேற்கூறிய மூன்றும் உண்டு.

சிவகாமி 1980களின் மத்தியில் எழுதத் தொடங்கியவர்,இன்னும் பலரையும் பரவலாகச் சென்றடையக் காணோம்.ஆனால் கல்லூரி விடுமுறையில் அம்மாவின் பள்ளி நூலகத்தில் இந்த நாவலை வாசிக்கையில் எனக்கு மிகப் பிடித்திருந்தது இந்த நாவல். 
 
எழுத்தாளர் சிவகாமி  குறித்த அறிமுகத்திற்கு...

//1980களின் மத்தியில் எழுதத் தொடங்கியவர். தலித்தியம், பெண்ணியம் சார்ந்து செயல்பட்டவர். பழையன கழிதலும், ஆனந்தாயி அவருடைய நூல்கள். தமிழில் எழுத்து பற்றிய புனைவு எனப்படும் ப.க.ஆ.கு. இவருடையதாகும். குறுக்கு வெட்டு, சிவகாமி சிறுகதைகள் போன்ற படைப்புகளும் உண்டு. ஊடாக என்னும் குறும்படத்தை இயக்கியிருக்கிறார். முன்பு கோடாங்கி என்றும் இப்போது புதிய கோடாங்கி என்றும் வெளியாகும் பத்திரிகையின் பின்னணியாய் இருந்து இயங்கிவருபவர். கவிதைகளும் எழுதியுள்ளார். கருத்தம்மா, முனிமா போன்ற பெயர்களிலும் படைப்புகள் வெளியாகியுள்ளன. இவருடைய நாவல் அண்மையில் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது//

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com