ஜெயலலிதா சொன்ன கிளியோபாட்ரா ஸ்டைல் அழகு குறிப்புகள்!

“கிளியோபாட்ரா பாலில் குளித்தது போல நான் உடல் முழுக்க வெண்ணெய் தடவி சிறிது நேரம் ஊறிய பின்னர் பயத்தம் மாவு பொடியால் நன்றாகத் தேய்த்துக் குளிப்பேன், இதனால் மேனி அழகு மென்மையாவதுடன் பொலிவாகவும் இருக்கும
ஜெயலலிதா சொன்ன கிளியோபாட்ரா ஸ்டைல் அழகு குறிப்புகள்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு தன்னை அழகு படுத்திக் கொள்வதில் சிறு வயது முதலே மிகுந்த ஆர்வமிருந்தது. பள்ளிக்காலத்தில் ஒரு முறை நடிகையாக இருந்த தனது அம்மா சந்தியாவின் மேக்கப் கிட்டில் இருந்த பொருட்களை அம்மாவுக்குத் தெரியாமல் எடுத்துப் பயன்படுத்தி, அவரது கடும் கோபத்துக்கு ஆளனவர் ஜெ. ஆனால் பிற்காலத்தில் அவரது மேக் அப் ஆர்வத்துக்கு காலம் மிகச் சிறந்த பதில் அளித்ததின் விளைவு தான் தமிழ் திரையுலகில் 70 களின் பியூட்டி குயின் பட்டம். கிட்டத்தட்ட 140 திரைப்படங்களுக்கும் மேலாக தென்னிந்திய திரைப்படங்களில் குறிப்பாக தமிழில் கோலோச்சிய ஜெ, தான் பங்கேற்ற அத்தனை திரைப்படங்களிலும் தனது காஸ்டியூம்கள், மேக் அப், அக்சஸரிஸ் என்று சொல்லப்படக் கூடிய ஆபரணங்கள் போன்றவற்றின் அழகியலுக்காக ரசிக, ரசிகைகளால் பெரிதும் கொண்டாடப் பட்டார் என்றால் அது மிகையில்லை. இதோ அவரே பிரபல தமிழ் வார இதழ் ஒன்றுக்காக 70 களில் அளித்த அழகுக் குறிப்பு ஒன்றை இப்போது காண்போம். இதை அவர் அப்போது ‘கிளியோபாட்ரா ஸ்டைல்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கிளியோபாட்ரா ஸ்டைல்:

எகிப்திய அழகி கிளியோபாட்ரா உலகம் முழுக்க இன்றளவிலும் தனது அழகுக்காக மேற்கோள் காட்டப்படுகிறார். அவரது பெயரால் ஜெ சொன்ன அழகு குறிப்பு;

“கிளியோபாட்ரா பாலில் குளித்தது போல நான் உடல் முழுக்க வெண்ணெய் தடவி சிறிது நேரம் ஊறிய பின்னர் பயத்தம் மாவு பொடியால் நன்றாகத் தேய்த்துக் குளிப்பேன், இதனால் மேனி அழகு மென்மையாவதுடன் பொலிவாகவும் இருக்கும். அதோடு முகம் பொலிவாக இருக்க வேண்டுமென்றால் விளக்கெண்ணெய் தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து இதே போல பயத்த மாவால் நன்கு தேய்த்துக் கழுவுவேன்” இதனால் முகம் பளிச்சென்று ஆகி விடும். அது மட்டுமல்ல மனதை எப்போதும் கவலைகளின்றி வைத்துக் கொள்ள முயற்சிப்பேன், மனதில் கவலைகள் இல்லாமலிருந்தால் முகமும், உடலும் எப்போதும் பொலிவாகவே இருக்கும்” 

இது தான் ஜெ பகிர்ந்து கொண்ட கிளியோபாட்ரா ஸ்டைல் அழகு குறிப்பு. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com