புத்துணர்வூட்டும் ஜிலீர் எலுமிச்சை ஃப்ரூட் ஃபேஸியல்...

புத்துணர்வூட்டும் ஜிலீர் எலுமிச்சை ஃப்ரூட் ஃபேஸியல்...

மாதக் கடைசி என்றால் 10 ரூபாயில் மூன்றோ, நான்கோ எலுமிச்சம்பழங்களை வாங்கி வைத்துக் கொண்டு அவற்றிலும் கூட ஃப்ரூட் ஃபேஸியல் செய்து கொள்ளலாம். 

பொதுவாக ஃப்ரூட் ஃபேஸியல் செய்ய நமது பர்ஸ் கனத்தையும், அந்த நேரத்து பொருளாதார நிலவரத்தையும் பொறுத்து ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, பப்பாளி, மலை நெல்லிக்காய், வாழைப்பழம், கிர்ணிப்பழம், என எந்த வகைப் பழங்களையும் பயன்படுத்தலாம். மாதக் கடைசி என்றால் 10 ரூபாயில் மூன்றோ, நான்கோ எலுமிச்சம்பழங்களை வாங்கி வைத்துக் கொண்டு அவற்றிலும் கூட ஃப்ரூட் ஃபேஸியல் செய்து கொள்ளலாம். 

எந்தப் பழங்களை ஃபேஸியல் செய்யப் பயன்படுத்தப் போகிறோம் என்பதைப் பொறுத்து அவற்றின் இடுபொருட்களும் மாறும். அதை மட்டும் கொஞ்சம் கவனமாகப் பின்பற்றினால்னல்லது.

இப்போது புத்துணர்வூட்டும் ஜிலீர் எலுமிச்சை ஃபேஸியல் எப்படிச் செய்து கொள்வது என்று பார்ப்போமா?

தேவையான பொருட்கள்:

1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு
காய்ச்சாத பால்: 1/2 ஸ்பூன்
தூள் உப்பு: ஒரு சிட்டிகை
பஞ்சு: 1 சின்ன துண்டு

எப்படிச் செய்வது ஃபேஸியல்?

ஒரு சின்ன பவுலில் 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1/2 ஸ்பூன் பால் மற்றும் 1 சிட்டிகை தூள் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பின்பு இந்தக் கலவையை பஞ்சு முழுவதுமாக உறியுமாறு அதில் முக்கி எடுத்து முகத்தில் தாடைப் பகுதியிலிருந்து மேல் நோக்கி 10 நிமிடங்களுக்கு சற்று மென்மையாக அழுத்தி மசாஜ் செய்யவும். மற்ற அனைத்து ஃபேஸியல்களைப் போலவே இதற்கும் கண்களைத் தவிர்த்து விடலாம். 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி காட்டன் துவாலையால் மென்மையாகத் துடைக்கவும்.

இந்த ஃபேஸியலை வாரம் இருமுறை வீட்டு வேலைகளுக்கு நடுவில் கிடைக்கும் சின்ன ஓய்வு நேரங்களில் செய்து முடிக்கலாம் என்பது தான் இதன் ஸ்பெஷாலிட்டி. இதற்காக பார்லருக்கு அலைய வேண்டியதில்லை. வீட்டிற்கும் பியூட்டிஸியனை அழைக்கத் தேவையில்லை. தன் கையே தனக்குதவி என்பதற்கேற்ப இது ரொம்ப ஸிம்பிள் டிப்ஸ். நமக்கும் அடடா ஃபேஸியல் பண்ணிக்கொள்ள நேரம் கிடைக்கவில்லையே எனும் சுய அங்கலாய்ப்பு குறையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com