இவரின் உண்மை வயது 41 என்றால் நம்பமுடிகிறதா?

டீன் ஏஜ் பெண் போல இருக்கும் லூரி ஸுவின் வயது ஆகஸ்டில் வரவிருக்கும் அவரது பிறந்த நாளில் 42 ஆகிவிடும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
இவரின் உண்மை வயது 41 என்றால் நம்பமுடிகிறதா?

டீன் ஏஜ் பெண் போல இருக்கும் லூரி ஸுவின் வயது ஆகஸ்டில் வரவிருக்கும் அவரது பிறந்த நாளில் 42 ஆகிவிடும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

தைவானைச் சேர்ந்த இந்தப் பதுமைப் போன்ற பெண் வலைத்தளத்தில் இளமை ததும்பும் தனது போட்டோக்களை பதிவிட்டு வைரலாகி வருகிறார். தனது இளமையான தோற்றப் பொலிவால் ஆயிரக்கணக்கான ரசிகர்களைத் தினந்தோறும் குவித்து வருகிறார். எல்லா இளம் பெண்களும் தானே போட்டோக்களை ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராம்களில் பதிவிடுகின்றனர், இதில் லூரி செய்வதில் என்ன தனித்தன்மை என்று யோசிக்கிறீர்களா? மற்ற பெண்கள் ஏற்கனவே இளம் பெண்கள் ஆனால் லூரி இளமையைத் தக்க வைத்த நடுத்தர வயது பெண். லூரியின் உண்மை வயது 41 என்று சத்தியம் செய்தால் கூடஅவரது ரசிகர்கள் நம்ப மாட்டார்கள்.  

லூரி இண்டீரியர் டிசைனராக பணிபுரிந்து வருகிறார். அவரது 35 வயது தங்கை ஷரோன் ஸு ஒரு நடிகை. 2015- ஆம் வருடம் ஷரோனுடன் ஒரு கலை நிகழ்ச்சிக்குச் சென்றார் லூரி. அதையடுத்து ஆகஸ்ட் மாதம் வந்த தனது பிறந்த நாளைக் கொண்டாடிய போட்டோக்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். இவை இரண்டும் உடனே வைரலாகிவிட்டது. காரணம் லூரியின் வயதுக்கும் அவரது தோற்றத்துக்கும் சம்மந்தமே இருக்கவில்லை. 41 வயது என்று பேஸ்புக் சொன்னாலும் அவர் டீன் ஏஜ் பெண்ணைப் போல பேரழகுடன் இருந்தார். சின்னதாக கூட ஒரு சுருக்கம் அவர் முகத்தில் இல்லை. தவிர அவரது சருமம் மாசு மருவில்லாமல் மிகவும் இளமையுடன் இருந்தது. அவரது உடைகளும், ஸ்டைலும் கூட சிறிய பெண் போலவே இருந்ததால் அனைவரின் மனத்தையும் உடனடியாக கொள்ளை கொண்டுவிட்டார்.

லூரி தனது இளமை அழகின் ரகசியம் தினமும் நிறைய தண்ணீர் குடிப்பதும், அதிகமாக காய்கறிகளைச் சாப்பிடுவதும் தான் என்கிறார். மேலும் சைவ உணவையே விரும்பிச் சாப்பிடுகிறார். பாக் சொய் என்ற தைவானிய உணவு அவருக்கு மிகவும் பிரியமானது. மசாலா, காரம், கொழுப்புச் சத்து நிறைந்த ஜன்க் உணவு இவற்றை அறவே தவிர்த்து விட்டவர் லூரி.

தினமும் தன்னுடைய சருமத்தை பாதுகாக்கிறார் லூரி. போதுமான அளவுக்கு நீர்ச்சத்து இருந்தால் போதும் சருமத்துக்கு வேறு எந்த அழகு சாதனப் பொருட்களும் தேவையில்லை. சுருக்கம் இல்லாமல் முகம் பொலிவுடன் இருக்க தண்ணீர் தான் பெஸ்ட் என்கிறார் இவர். வெயில் காலத்தின் போது நிச்சயம் சன் ஸ்க்ரீன் பயன்படுத்துவேன். சூரியக் கதிர் தோலுக்கு பெரிய எதிரி. சருமம் டான் ஆவதுடன் வறட்சியுடன் காணப்படும். சின்ன சின்ன சுருக்கங்களும் வரலாம். எனவே இதனைத் தவிர்க்க சன் ஸ்க்ரீன் போடுவேன். பாலைத் தவிர்த்து ப்ளாக் காபி குடிப்பேன். தவிர நிறைய பழங்கள், பழச்சாறுகள், தண்ணீர் என்று உணவில் நீர்ச்சத்து சரியான விகிதத்தில் இருக்க கவனம் எடுத்துக் கொள்வேன்’ என்று கூறினார்.

இவைத் தவிர உங்கள் அழகின் ரகசியம் என்னவென்று ஒரு பத்திரிகை லூரியை கேட்டபோது, உணவுச் சத்து நிபுணரின் பரிந்துரைப்படி சருமப் பாதுகாப்புக்காக வைட்டமின் சி மற்றும் கொலாஜன் மாத்திரைகளை தினமும் சாப்பிடுவதாக ஒப்புக் கொண்டார் லூரி. இதனால் எப்போதும் தன் சருமம் பளபளப்பாக இருக்கிறது என்றும் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com