சொன்னாதான் தெரியணும் வயசு!

அது என்னமோ போங்க, இந்த பொம்பளைங்கக் கிட்ட இருக்கிற ஒரு மோசமான விஷயம்
சொன்னாதான் தெரியணும் வயசு!

அது என்னமோ போங்க, இந்த பொம்பளைங்கக் கிட்ட இருக்கிற ஒரு மோசமான விஷயம் என்ன தெரியுமா? ரெண்டு புள்ளைங்க பொறந்த உடனே தனக்கு வயசு ஆயிட்டதா நினைச்சுக்கிறாங்க. அதனாலே ரொம்ப அக்கறை எடுத்துகிடாம ஏனோ தானோ அப்படீன்னு எல்லா விஷயத்திலும் ஒரு மேம்புல் மேயற குணம் வந்துடுது. எப்படீ? அப்படீன்னு கேக்கறீங்களா? சொல்றேன்.. கேளுங்க.

  • ரெண்டு குழந்தைகளாச்சு. என்னை யார் பாக்கப் போறாங்க? அப்படீன்னு கேட்டுக்கிட்டு பச்சப் புடவைக்கு சிகப்பு ரவிக்கையையும், நீலப் புடவைக்கு மஞ்சள் ரவிக்கையையும் ராமராஜன் ஸ்டைலில் போட்டுக்கிட்டு திரியறது. ஏங்க ஏன்? கொஞ்சம் மாச்சிங்காகத் தான் போடறது.
  • கண்ணாடி போட்டுக்கறது அழகில்லைன்னு சொல்ல வரலை. ஆனா அந்தக் கண்ணாடி பிரேமை கொஞ்சம் நல்லாத்தான் முகத்திற்கு ஏதுவானதாக வாங்கிக்கிலாம் இல்ல? அது மட்டும் இல்லை மூக்கிற்கு மேல நல்ல பொருந்தி நிக்கறாப்பல போட்டுக்கலாம் இல்லே?
  • நகமும் சதையும் மாதிரி பொம்பளைங்களும் ஹாண்ட் பேக்கும். ரொம்ப காசு போட்டுத்தான் ஹாண்ட் பேக் வாங்கணும்னு இல்லீங்க. பளிச்சின்னு பார்வைக்கு இருகிறாப்பல வாங்கணும். வழவழன்னு இருக்கிற பேக் வாங்கினால், உங்களுக்கு டேஸ்ட்டு கம்மியாயிடுச்சுன்னு தெரிவிச்சுடும். நல்லா தோல் நிறம், கொஞ்சம் சொரசொர பேக் ஓ.கே. ட்ரை பண்ணுங்க.
  • அடுத்தது, செருப்பு. அழகா கட்டை விரலுக்கு மோதிர வளையம் வைச்சு பார்க்க கம்பீரமா இருகிறார்ப் போல செருப்பு போடுங்க. சம்பந்தம் இல்லாத கலர்லே செருப்பு மாதிரி மாடல்ல பளபளன்னு கண்ணையே பிடுங்கி போடுராப்போல செருப்பு போட்டுக்குவானேன்? அதுவும் போட்டு மாதிரி முன்னையும் பின்னையும் வளைஞ்சு சீசா விளையாடுறாபோல போட்டுக்கலேன்னு யாரு அழுதா? காலுக்கேத்தாபோலே போட்டாலே நச்சுன்னு இருக்குமில்ல?
  • எல்லாத்தையும் விட ரொம்ப கொடுமை இந்த அன்னக்கிளி கொண்டை. போட்ட குடுமியை அவுக்கிறது இல்லை என்று ஒரு வைராக்கியம். சாணக்கியன் முடிய மாட்டேன் என்றான். நீங்க குடுமியை அவுக்க மாட்டேன்னு பிடிவாதமா இருந்தா யார்தான் என்ன செய்ய முடியும்? அந்த அலங்காரத்தோடு பால், காய் வாங்க ரோடுக்குப் போயிடறீங்க. என்னத்தச் சொல்ல? போங்க.

இதெல்லாம் நாமே நம்மை குறைச்சு மிதிப்பீடு பண்றதால உண்டாகிற கொளாறுங்க. நமெக்கென்ன குறைச்சல்? நாமும் டாப் டக்கர் ஆகத்தான் இந்த வயசுக்கு இருக்கோம்னு நினைச்சுக்குங்க. அப்புறம் பாருங்க. உங்க வயசை நீங்க சொன்னால்தான் தெரியும்.

அதிக விலை கொடுத்துதான் பொருட்களை வாங்க வேணுங்கிறது இல்லை. வாங்கற பொருட்களை நேர்த்தியா உபயோகப்படுத்தத் தெரியணும். ஒண்ணு புரிஞ்சுக்கோங்க. உங்க வீட்டுக்காரருக்கு உங்களைப் பார்த்தா போர் அடிக்கக் கூடாதுன்னு ஞாபகம் வச்சுக்கிட்டா சரி. புரியுதா?

பெஸ்ட் ஆஃப் லக்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com