தமிழகத்தில் தனது தடங்களை இரு மடங்காக்க விரும்பும் VLCC! 

இந்தியாவில் அழகு மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு சேவையில் மிகப்பெரிய அளவிலும், மிக நீண்ட செயல்பாடுகளையும் மேற்கொண்டு வரும் நிறுவனங்களில் விஎல்சிசி ஒன்றாகும்
தமிழகத்தில் தனது தடங்களை இரு மடங்காக்க விரும்பும் VLCC! 

இந்தியாவின் அழகு மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு பிராண்டான விஎல்சிசி நாட்டின் தென்கோடி மாநிலமான தமிழகத்தில் தனது தடத்தை இரண்டு மடங்காக விரிவுபடுத்துவதற்கான திட்டமிடுதல் குறித்த அறிவிப்பை வெளியிடுகிறது. விஎல்சிசி நிறுவனமானது இப்போது மாநிலத்தில் 11 ஆரோக்கிய பராமரிப்பு மையங்களையும், 2 அழகு மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு சார்ந்த நிறுவனங்களையும் நடத்தி வருகிறது.

விஎல்சிசி நிறுவனத்தின் நிறுவனர் வந்தனாலுத்ரா கூறுகையில்,

தமிழகம் எங்களுக்கு மிகவும் முக்கியமான சந்தையாகும். அழகு, ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கிய பராமரிப்புக்கான பிரிவை மேலும் மேல்நோக்கிக் கொண்டு செல்வதில் நாங்கள் மிகுந்த மிகழ்ச்சி அடைகிறோம். எங்களது நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில் 10 சதவீதம் அளவுக்கு தமிழகத்தின் பங்காகும். மேலும், நாட்டில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் தமிழகமும் ஒன்றாக எங்களுக்குத் திகழ்கிறது. இப்போது எங்களது நிறுவனத்தின் விரிவுபடுத்த வேண்டும் என்கிற இந்தத் திட்டமானது, மேலும் மேலும்அதிகமான வாடிக்கையாளர்களை சென்று சேர வேண்டும் என்ற எங்களது குறிக்கோள், திட்டமிடலின் ஒரு அங்கமாகும். அழகு மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு என்கிற வளர்ந்து வரும் சந்தையில் நாங்கள் மேலும் வலுவாக பிடித்து பற்றிக்கொண்டு மேம்படுவதற்கு இது ஒரு முயற்சியாகும்.

இந்தியாவில் அழகு மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு சேவையில் மிகப்பெரிய அளவிலும், மிக நீண்ட செயல்பாடுகளையும் மேற்கொண்டு வரும் நிறுவனங்களில் விஎல்சிசி ஒன்றாகும். நிறுவனத்தை விரிவுபடுத்தும் பணியானது வரும் நிதியாண்டிலும் தொடரும். புதிய மையங்களை ஏற்கெனவே உள்ள சந்தைகளிலும், புதிய சந்தைகளிலும் திறக்க உள்ளோம். அதாவது, இந்த விரிவுபடுத்தும் திட்டமானது, வாடிக்கையாளர்களுக்கு மிகவும் நெருக்கமாக, அவர்களை நெருங்கிச் சென்று சேவை அளிக்கும் வகையில் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழகமானது 78 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டமாநிலமாகும். அதேசமயம், உடல்பருமன் என்கிற வரிசைப்பட்டியலில் முன்னணியில் உள்ளது. இந்தியாவில் அதிக உடல்எடை அல்லது உடல்பருமன் கொண்ட மக்களின் வரிசையில் தமிழகம் நான்காவது இடத்தில் இருக்கிறது. மாநிலத்தில் 20 சதவீத ஆண்கள், அதிக உடல்பருமன் அல்லது உடல் எடையுடனும், பெண்கள் 25 சதவீதம் பேரும்இருக்கின்றனர். மேலும், மாநிலத்தி்ன் மொத்த மக்கள்தொகையில் கால் பங்குபேர், சர்க்கரை நோயுடன் காணப்படுகிறார்கள். 10 பேரில் மூன்று பேருக்கு உயர் ரத்தஅழுத்தம் இருக்கிறது. கடந்த சில மாதங்களில் மாநிலத்தில் உள்ள 3.6 கோடிக்கும் அதிகமான 30 வயதைத் தாண்டிய மக்களிடம் எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில், 23 சதவீதத்துக்கும் அதிகமான ஆண்களிடமும், 20 சதவீதத்துக்கும் அதிகமான பெண்களிடமும் உயர்ரத்த அழுத்தம் காணப்படுகிறது.
விஎல்சிசி நிறுவனமானது உடல் எடையைக் குறைக்க அறிவியல் பூர்வமான தீர்வுகளைத் தருகிறது. மேலும், அழகு, உடலை கட்டாக வைக்கவும், ஆரோக்கியமாக வைத்திருக்கவும் சிகிச்சைப் பூர்வமான வழிமுறைகளைத் தருகிறது. உடலுக்கு மிகப்பெரிய அளவில் தீங்கு விளைவிக்கக்கூடிய கொழுப்புசேராமல் தடுப்பதற்கான, கர்வ் எக்ஸ்பெர்ட் 3டி பவர்ஷார்ப்பர் போன்ற அதி நவீனகருவிகளை விஎல்சிசி அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், கடந்த ஆண்டில் புதிய 3டி வகை பவர் டோஸ் சிகிச்சைமுறைகள், 3டி டம்மிட்ரீட்மென்ட், உடலை அழகாகவும், கட்டாகவும் வைப்பதற்கான 3டி கான்ட்டூரிங், ஸ்கல்ப்ட், பிர்மர் போன்ற நவீன அம்சங்களை விஎல்சிசி அறிமுகப்படுத்தியுள்ளது. எங்களது வாடிக்கையாளர்கள் அவற்றை பார்த்து, அனுபவித்து அதனை தொடர்ந்து பின்பற்றும் வகையில் அவை தயாரிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.

விஎல்சிசி நிறுவனமானது குரஹானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இது, 1989 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. உடல் எடையைக் குறைக்கவும், அழகு, ஆரோக்கிய பராமரிப்புக்கான நிறுவனமாகவும் இந்தியதுணைகண்டத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது விஎல்சிசி. இப்போது 150 நகரங்களில் 330 இடங்களில் மையங்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.தெற்காசியா, தென்கிழக்குஆசியா, அரபுபிரதேசம்என 13 நாடுகளில் கிளைபரப்பி இயங்கிவருகிறது. இலங்கை, வங்கதேசம், நேபாளம், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஐக்கியஅரபு அமீரகம், ஓமன், பஹ்ரெய்ன், கத்தார், குவைத், கென்யா உள்ளிட்ட நாடுகளும் அதில் அடங்கும். மேலும், விவரங்களுக்கு www.vlccwellness.com என்ற இணையதள முகவரிக்குச் சென்று பார்வையிடலாம்.

ஊடகத்தொடர்புக்கு...
சந்தோஷ்மல்லையா
98416 38757

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com