மென்மையான சருமத்தை பெற

உங்களுடைய சருமம்  எந்த வகை என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அதற்கேற்ற
மென்மையான சருமத்தை பெற

* உங்களுடைய சருமம்  எந்த வகை என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அதற்கேற்ற சரும பராமரிப்பு தயாரிப்புகளை  தேர்ந்தெடுங்கள். உங்கள் சருமம் எந்த வகை என்பது தெரியவில்லையா? பரவாயில்லை. ஆரோக்கியமான சருமத்திற்கு ஆழ்ந்து சுத்தம் செய்யும் கிரீம்களை பயன்படுத்துங்கள். எந்த கிரீமாக இருந்தாலும் அவை உங்கள் சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்துமா என்பதை கண்டறிய முதலில் முழங்கையில் சிறிதளவு தடவி நாள் முழுக்க அப்படியே விட்டுவையுங்கள். ஆல்கஹால் கலவை வேண்டாம். எந்தவித பாதிப்பும் இல்லையென்றால் ஓகே.

* எண்ணெய் பசையுள்ள சருமமாக இருப்பின்  ஆல்கஹால்  கலந்த கிரீம்களை தவிர்ப்பது நல்லது. "ஆல்கஹால்'  உடலில் உள்ள வியர்வையை வெளியேற்ற கூடியதாகும். ஆல்கஹால் கலந்த கிரீம்களை பயன்படுத்துவது சருமத்தில் உள்ள வியர்வை சுரப்பிகள் அடைபட வாய்ப்புள்ளது. எண்ணெய் பசையுள்ள சருமமாக இருப்பின் நீங்கள் பயன்படுத்தும் கிரீமில் என்னென்ன வேதி பொருட்கள்  கலந்துள்ளன என்பதை வாங்குவதற்கு முன் பரிசீலனை செய்வது நல்லது.

* உங்கள் கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் குறித்து நீங்கள் சிறப்பு கவனம் எடுப்பது நல்லது. ஏனெனில் அப்பகுதி மிருதுவானதோடு உணர்வு மிக்கவை ஆகும். கண்களின் கீழே தொங்கும் சதை மற்றும் தெளிவாக தெரியும் கருவளையத்தையும் போக்க ஜெல் அடிப்படையிலான சில கிரீம்கள் உள்ளன. இவை கண்களின் கீழ் உள்ள சுருக்கத்தை போக்கும் அல்லது தற்காலிமாக நீக்கும்.

* பகல் நேரத்தில் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகள் இரவில் நிவர்த்தியாக வாய்ப்புள்ளது. இது போன்ற சந்தர்ப்பத்தில் சிறந்த கிரீம்களை இரவில் பயன்படுத்தினால் உங்கள் சருமம் நீண்ட காலம் வனப்புடன் காட்சிதரும்.

* முகத்தில் வெயில் அதிகமாக படும் என்பதால் அதிக சுருக்கங்களும், வயதான தோற்றத்தையும் ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம். சூரியனிடமிருந்து வெளிப்படும் அல்ட்ரா வயலெட்'  கதிர்கள் சருமத்தில் உள்ள நார் தன்மையை குறைத்து எரிச்சலையும், தோலை உரிக்கும் தன்மையையும் ஏற்படுத்தும். அதனால் உதடுகளை பாதுகாக்கும் கிரீம்கள், லிப்ஸ்டிக்குகளை பயன்படுத்துவதோடு, வெயில் படாமல் முகத்தை மறைப்பது நல்லது.

* இதுபோன்ற சரும கிரீம்களை பயன்படுத்துவதற்கு முன் சரும நிபுணர்களை கலந்தாலோசிப்பது நல்லது. அவர்கள் உங்கள் சருமத்தின் தன்மை, எந்த வகையானது என்பதை தெரிவிப்பதோடு, அதற்கேற்ற கிரீம்களை பரிந்துரை செய்ய வாய்ப்புள்ளது.
- பூர்ணிமா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com