சிவப்பழகைப் பெற 5 விஷயங்களை கடைப்பிடியுங்கள்!

கருப்புதான் இந்த மண்ணின் நிறம் என்றாலும் சிவப்புக்கு கொடி பிடிப்பவர்கள்தான் அனேகம்.
சிவப்பழகைப் பெற 5 விஷயங்களை கடைப்பிடியுங்கள்!

கருப்புதான் இந்த மண்ணின் நிறம் என்றாலும் சிவப்புக்கு கொடி பிடிப்பவர்கள்தான் அனேகம். எந்த நிறமாக இருந்தாலும் பளிச்சென்று இருப்பதுதான் அழகு. பளிச் அழகைப் பெற சில டிப்ஸ் இதோ :

முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி புத்துணர்வுடன் கூடிய அழகை அதிகரிக்க, 2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர், 1/2 ஸ்பூன் பார்லி பவுடர் பால் கலந்து முகத்தில் தேய்க்கவும். சிறிது நேரம் இந்த பேக்கை முகத்தில் வைத்திருந்துவிட்டு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். தொடர்ந்து இதனை செய்துவந்தால் சருமம் பொலிவடையும்.

கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம் இரண்டு, உலர் திராட்சை 10 இவற்றை வெந்நீரில் ஊற வைக்கவும். அதன் பின் விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிதளவு பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளவும். இதை முகத்திற்கு ஃபேஸ் பேக்காகப் போட்டுக் சுமார் 20 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி விடவும். 

கோதுமை மாவில் சிறிதளவு வெண்ணையை கலந்து முகம் மற்றும் கழுத்தைச் சுற்றிப் பூசி வர வேண்டும். நன்றாக ஊறிய பின் 20 நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும். இப்படி தொடர்ந்து தினமும் செய்து வந்தால் முகம் மற்றும் கழுத்தில் உள்ள கருமை மறைந்து விடும்.

சிலருக்கு முகம் பளிச்சென்று இருந்தாலும் கண்களுக்கு கீழ் கருவளையம் தோன்றியிருக்கும். இரவில் சரியான தூக்கம் இல்லாமல் போனால் கண்களில் கரு வளையம் தோன்றும். தினமும் குறைந்தது எட்டு மணி நேரமாவது உறக்கம் அழகுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்துக்கும் தேவை.

இதனை போக்க, முதலில் வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்து விழுதாக அரைத்து கொள்ளவும். ஒரு மெல்லிய வெள்ளை துணியை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து, அதன் மேல் அரைத்த கலவையை வைத்து சிறிது நேரம் படுக்க வேண்டும். இப்படி முப்பது நிமிடம் இருக்க வேண்டும். 

தக்காளி, ஆப்பிள், மற்றும் தர்பூசணி ஆகியவற்றின் விழுதினை  சம அளவு எடுத்து, பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகத்தில் உள்ள அழுக்கு நீங்கி, பொலிவுடன் இருக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com