நக அழகுக் கலை கற்க வேண்டுமா?

அழகு கலையில் சிகை அலங்காரம், முக அலங்காரம், கை மற்றும் கால்களில் மெஹந்தி போடுதல் உள்ளிட்ட
நக அழகுக் கலை கற்க வேண்டுமா?

அழகு கலையில் சிகை அலங்காரம், முக அலங்காரம், கை மற்றும் கால்களில் மெஹந்தி போடுதல் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் உள்ளன. அழகுக் கலை நிபுணர்கள் அத்தொழிலில் நல்ல வருவாய் ஈட்டுகின்றனர். அத்தகைய அழகுக் கலையின் ஒரு பகுதியாக தற்போது நக அழகுக் கலை என்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. கை விரல்களில் உள்ள நகங்களில் பல வண்ணங்கள் தீட்டி அழகு படுத்துவது நக அழகுக் கலை எனப்படுகிறது.

தற்போது நக அழகுக் கலை பிரசித்தி பெற்று வருவதால் அந்த தொழிலில் ஈடுபட பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் பெரிய அழகு கலை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளும் உள்ளன. குறிப்பாக பெண்கள் இத்தொழிலில் ஈடுபட மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். அதற்கு நக அழகுக் கலை தொடர்பான குறுகிய கால படிப்பு அல்லது பயிற்சிகளைப் பெற வேண்டியுள்ளது. பயிற்சி பெற்றவர்கள் பெரிய அழகுக் கலை நிறுவனங்களில் பணிபுரியவும் செய்கின்றனர்.

நக அழகுக் கலை பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள்:
Nail Lounge Academy  - http://www.nailloungeacademy.com/courses.html
THE VLCC INSTITUTE  - https://www.vlccinstitute.com/
Zuri Academy- www.zuriacademy.com/nail/
Orane beauty institute-https://www.oranebeautyinstitute.com/certificate-in-3d-nail-art/
Nail spa academy - http://www.nailspaindia.com/nail_spa_academy.html
- எம்.அருண்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com