கார்ன் சில்க் டீ!

கார்ன் சில்க் டீ!

கார்ன் சில்க்கில் இருக்கும் செலினியம் எனும் மூலப் பொருள் கேன்சர் சிகிச்சையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த செலினியம் கேன்சர் உண்டாக்கும் செல்களின் அதி தீவிர பெருக்கத்தை கட்டுப்படுத்தும்.

கார்ன் சில்க் என்றதும் சைனா சில்க், ரா சில்க் போல இது ஏதோ ஒரு வகை பட்டு நூல் என்று நினைத்து விட வேண்டாம். கார்ன் சில்க் என்றால் மக்காச் சோளத்தை தோல் உரிக்கும் உரிக்கும் போது சோளத்துக்கும் தோலுக்கும் நடுவில் மஞ்சள் நிறத்தில் நூல் நூலாய் பட்டுக் குஞ்சம் மாதிரி ஒரு வஸ்து இருக்குமே, வழக்கமாக தோலோடு அதைப் பிய்த்து எறிந்து விட்டு சோளத்தை அவிப்போம். சோளத்தில் இருக்கும் அந்தப் பட்டுக் குஞ்சலத்தை தான் கார்ன் சில்க் என்கிறார்கள் ஆங்கிலத்தில். நமக்கு தெரியாத விசயம் ஒன்றுண்டு இதில்... இந்த கார்ன் சில்க் அப்படி வீணாக்க வேண்டிய பொருள் அல்லவாம். அதிலிருக்கும் மருத்துவ பலன்களைப் பட்டியலிட்டால் இன்னொரு முறை சோளம் அவிக்கும் போது நாம் கார்ன் சில்க்கை வீணே தூர எறிய நமக்கு மனமிருக்காது. டீ தயாரிக்க பேபி கார்ன் சில்க் சரி வராது, அதில் முழு பலன்கள் கிடைக்காது, டீ தயாரிக்க எப்போதுமே முற்றி விளைந்த கார்னிலிருந்து தான் சில்க் எடுக்க வேண்டும். சரி இனி டீ எப்படி போட்டுக் குடிப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

நன்கு காய்ந்த கார்ன் சில்க்: 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர்: 250 மில்லி லிட்டர்
தேன்: 1 டீஸ்பூன்
புதினா: 1 அல்லது 2 இலைகள்

செய்முறை: 

ஒரு கனமான பாத்திரத்தில் 250 மில்லி லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் கார்ன் சில்க்கை போட்டு மூழ்க வைத்து பாத்திரத்தை மூடியிட்டு ஸ்டவ்வை சிம்மில் வைத்து கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாகக் கொதித்து மூன்றில் ஒரு பங்காக வற்றியதும் ஸ்டவ்வை அணைத்து விட்டு, வற்றிய கார்ன் சில்க் டிகாக்ஸனில் 250 மில்லி லிட்டர் அளவை ஈடு செய்வது போல மீண்டும் கொதிக்க வைத்த தண்ணீர் கலந்து சூடாக டீ கெட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளவும். தேவைப்படும் போது அதில் ஒரு கப் டீ எடுத்து 1 டீஸ்பூன் தேன், ஒன்றிரண்டு புதினா இலைகள் சேர்த்து வாசமாக கார்ன் சில்க் டீ அருந்தலாம்.

பலன்கள்:

  • கார்ன் சில்க் டீ அருந்துவதால் நீரழிவு நோயை கட்டுக்குள் வைக்கலாம். ஏனெனில் கார்ன் சில்க் டிகாக்ஸனுக்கு ரத்தத்தில் இருக்கும் குளுகோஸ் அளவை கட்டுப்படுத்தும் திறன் உண்டு.
  • வாழைத்தண்டு, முள்ளங்கி போல கார்ன் சில்க் டீக்கு சிறுநீரகக் கல்லை கரைக்கும் திறன் உண்டு.
  • முடி உதிர்வதைக் கட்டுப்படுத்தி, தலை முடிக்கு திடமளிக்கவும் உதவுமாம்.
  • கார்ன் சில்க்கில் இருக்கும் செலினியம் எனும் மூலப் பொருள் கேன்சர் சிகிச்சையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த செலினியத்துக்கு கேன்சர் உண்டாக்கும் செல்களின் அதி தீவிர பெருக்கத்தை கட்டுப்படுத்தும் திறன் உண்டு.
  • உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறனும் இதற்கு உண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com