மிளகு ரசத்துக்கு தொட்டுக் கொள்ள அபார சுவையுடன் பிரண்டைத் துவையல்!

கிராமங்களில் பள்ளி செல்லும் சிறு குழந்தைகளுக்கு வயிற்று உப்பிசம் இருந்தால், சாதத்துடன் வெறும் மிளகு ரசம் ஊற்றிப் பிசைந்து தொட்டுக் கொள்ள பிரண்டைத் துவையல் வைத்துத் தருவார்கள்.
மிளகு ரசத்துக்கு தொட்டுக் கொள்ள அபார சுவையுடன் பிரண்டைத் துவையல்!

தேவையானவை:

இளம் தண்டுப் பிரண்டை: 2 கட்டு
உளுந்தம் பருப்பு: 1 டேபிள் ஸ்பூன்
குடம் புளி/ நாட்டுப் புளி: 1 நெல்லிக்காய் அளவு
சிவப்பு நீட்டு மிளகாய் வத்தல்: 10/ 12
இஞ்சி: 1 துண்டு
பூண்டு: 4/ 5 பல்
பெருங்காயத்தூள்: 1 சிட்டிகை
கல் உப்பு: தேவையான அளவு
பனை வெல்லம்: 1 நெல்லிக்காய் அளவு
செக்கிலாட்டிய நல்லெண்ணெய்: 1 டேபிள் ஸ்பூன்
கடுகு உளுந்தம் பருப்பு: தாளிக்க

செய்முறை:

பிரண்டையை கணு நீக்கி நன்கு சுத்தம் செய்ய வேண்டும். இல்லா விட்டால் துவையல் செய்து சாப்பிடும் போது போது பற்களில் நார் சிக்கிக் கொண்டே இருக்கும். எனவே கணு நீக்கி தோல் சீவி, நாரை உறித்து சுத்தமாக்கி சிறு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு வாணலியை சூடாக்கி 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, எண்ணெய் சூடானதும் முதலில் 1 டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பை போட்டு சிவக்க வறுக்கவும், உளுந்துடன் 1 துண்டு இஞ்சி மற்றும் நான்கைந்து உறித்த பூண்டுப் பற்களை சேர்த்து, இஞ்சி பூண்டு வதங்கியதும் அதனுடன் 10 அல்லது 12 நீட்டு மிளகாய் வத்தலைப் போட்டு வறுக்கவும். பின்னர் இவற்றுடன் பனை வெல்லம் சேர்த்து வெல்லம் கரைந்ததும்  தேவையான அளவு கல் உப்பு சேர்த்து கிளறி விட்டு இறக்கவும். கலவை சற்று ஆறிய பின் அவற்றை மிக்ஸியில் இட்டு நீர் சேர்க்காமல் அரைக்கவும். பிரண்டை நஙு அரைக்காவிட்டால் பற்களில் சிக்கும். எனவே நைஸாக அரைத்தெடுத்து ஒரு சில்வர் கிண்ணத்தில் வழித்தெடுக்கவும். கடைசியாக வாணலியில் 1 டேபிள் ஸ்போன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுந்து தாளித்து அரைத்து வைத்த துவையலில் கொட்டி. எண்ணெய் சூடு இறங்கியதும் ஒரு கண்ணாடி ஜாரில் எடுத்து வைத்துக் கொண்டு 10 நாட்கள் வரை வைத்துச் சாப்பிடலாம். கெடாது.

பிரண்டையால் என்ன பலன்?

கிராமங்களில் பள்ளி செல்லும் சிறு குழந்தைகளுக்கு வயிற்று உப்பிசம் இருந்தால், சாதத்துடன் வெறும் மிளகு ரசம் ஊற்றிப் பிசைந்து தொட்டுக் கொள்ள பிரண்டைத் துவையல் வைத்துத் தருவார்கள். மறுநாளே வயிற்று உப்பிசம் போன இடம் தெரியாமல் மறைந்து விடும். அதோடு பசியே இல்லாமல் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கும் சாப்பிட வைக்க பாட்டியமார்கள் இதே பிரண்டைத் துவையல் டெக்னிக் தான் பின்பற்றூவார்கள். இனிப்பும், புளிப்பும் சுள்ளென்ற காரமுமாக பிரண்டைத் துவையல் இருந்தால் ரசம் சாதமும், மோர் சாதமும் கொண்டா.. கொண்டா என்று தொண்டைக்குள் இறங்கும். பிரண்டைத் துவையலை வீட்டில் செய்து சாப்பிட்டால் உங்களுக்கும் தெரிந்து விடப் போகிறது. 

Image courtsy: Google

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com