சம்மருக்கு ரெஸ்டாரெண்ட் ஸ்பெஷல் ‘வெர்ஜின் மொஜிட்டோ’ வை வீட்டிலும் செய்து அருந்தலாம்!

ரெஸ்டாரெண்டுகளில் இவற்றின் விலை 150 ரூபாய். வீட்டில் செய்தால் வெறும் 20 ரூபாய் கூட ஆகாது. ஸ்ப்ரைட் அல்லது லைம் சோடா வாங்கி ஃப்ரிஜ்ஜில் வைத்துக் கொண்டால் தேவையான போது இஷ்டம் போல ஜில்லென்று வெர்ஜின் மொஜ
சம்மருக்கு ரெஸ்டாரெண்ட் ஸ்பெஷல் ‘வெர்ஜின் மொஜிட்டோ’ வை வீட்டிலும் செய்து அருந்தலாம்!

தேவையானவை:
புதினா இலைகள்: 5 அல்லது 6
ஐஸ் கியூப்கள்: 15
சர்க்கரை: 2 டீஸ்பூன்
எலுமிச்சை- அரை மூடி
ஸ்ப்ரைட் அல்லது லைம் சோடா: 300 மில்லி.

அலங்கரிக்க:
எலுமிச்சை: 1 ஸ்லைஸ்
புதினா: ஒரு சின்ன ஆர்க்

செய்முறை:

நேற்று நுங்கம்பாக்கம் பார்பிக்யூ நேஷன் ரெஸ்டாரெண்டில் வெர்ஜின் மொஜிட்டொ அருந்தியதில் இருந்து அதை ஏன் வீட்டிலேயே செய்து சாப்பிடக் கூடாது என்று தோன்றியது. செய்து சாப்பிட என்ன தடை இருந்து விடப் போகிறது. ஆஃப்டர் ஆல் நம்மிடம் வீட்டில் எப்போது ஃப்ரிஜ்ஜை குடைந்தாலும் வெறும் ஐந்தாறு புதினா இலைகள், எலுமிச்சை, சோடா கிடைக்காமல் போய் விடுமா என்ன? அப்படியே கிடைக்காவிட்டாலும் கூட அவை ஒன்றும் பிரமாதமான விலையில் இருந்து விடப் போவதில்லை. அதனால் பக்கத்து வீட்டில் எட்டி ஒரு கை புதினாவும், ஒரு எலுமிச்சையும் கடன் வாங்கிக் கொள்ளலாம். சரி இனி செய்முறையைப் பார்க்கலாம்.

சாஃப்ட் ட்ரிங்ஸ் அல்லது குளிர் பான வகையறாக்களை பரிமாறுவதற்கென்றே வீட்டில் உயரமான பெரிய கண்ணாடி டம்ளர்கள் வைத்திருப்போமே, அதை வெளியில் எடுங்கள். டம்ளரில் முதலில் நாஙைந்து புதினா இலைகளைப் போட வேண்டும். கூடவே அரை எலுமிச்சையை குவார்ட்டர் பீஸ்களாக கட் செய்து புதினா இலைகளின் மீது போடலாம். பின்னர் ஃப்ரிஜ்ஜில் இருந்து 15 ஐஸ் கியூப்களை வெளியில் எடுத்து கிச்சன் டவலில் கொட்டிக் கொண்டு அதை வீட்டில் இஞ்சி நசுக்க வைத்திருக்கும் சின்ன கல்லால் நசுக்கவும். இப்போது ஐஸ் கியூப்கள் ஐஸ் துகள்களாக மாறி இருக்கும். அதை அப்படியே கண்ணாடி டம்ளரில் இருக்கும் புதினா, எலுமிச்சை கலவையின் மீது கொட்டி, இரண்டு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து  பூரிக்கட்டையின் பின் புறத்தால் மெதுவாக நசுக்கவும். சர்க்கரை கலந்ததும் இப்படி நசுக்குவதால் புதினா, எலுமிச்சை நன்கு கலந்து அருமையான ஃப்ளேவரில் மணம் நாசியை நெருடும். பிறகு நசுக்குவதை நிறுத்தி வீட்டில் ஸ்ப்ரைட் இருந்தால் அதை டம்ளரில் முக்கால் பாகத்துக்கு நிரப்பி நன்கு கலக்கவும். ஸ்பிரைட் தான் கலக்க வேண்டும் என்றில்லை. செவன் அப் அல்லது லைம் சோடாவும் கலக்கலாம், இப்போது கண்ணாடி டம்ளரின் வாய்பகுதியில் ஸ்லைஸ் செய்யப்பட்ட எலுமிச்சையை அலங்காரமாக சொருகி டம்ளரின் மேல் பகுதியில் ஓரிரு புதினா இலைகளை மிதக்க விட்டுப் பரிமாறலாம். அருமையான ஃபிளேவரில் ரெஸ்டாரெண்டுகளில் பரிமாறப்படும் வெர்ஜின் மொஜிட்டோ இப்போது நம் வீட்டு சாப்பாட்டு மேஜையிலும் ரெடி. 

வெயில் நேரத்தில் அருந்தலாம். வார இறுதி அசைவச் சமையல் கொண்டாட்டங்களின் போது வீட்டிலேயே இப்படி ஃப்ரெஷ்ஷாக ‘வெர்ஜின் மொஜிட்டோ’ செய்து அருந்தலாம். ரெஸ்டாரெண்டுகளில் இவற்றின் விலை 150 ரூபாய். வீட்டில் செய்தால் வெறும் 20 ரூபாய் கூட ஆகாது. ஸ்ப்ரைட் அல்லது லைம் சோடா வாங்கி ஃப்ரிஜ்ஜில் வைத்துக் கொண்டால் தேவையான போது இஷ்டம் போல ஜில்லென்று வெர்ஜின் மொஜிட்டோ செய்து அருந்தலாம்.

நோட்:

குழந்தைகள் சோடா போன்ற நிறமற்ற வெர்ஜின் மொஜிட்டோவை விரும்பவில்லை எனில் ஸ்ப்ரைட்டுக்கு பதிலாக கோக் அல்லது பெப்ஸி அல்லது ஃபேண்டா கலந்தும் இதை தயாரிக்கலாம். கருப்பு அல்லது ஆரஞ்சு நிறத்திரவம் குழந்தைகளைக் கவரக் கூடும்! குழந்தைகளுக்கு அடிக்கடி இவற்றை செய்து தரத் தேவையில்லை. எப்போதாவது பார்ட்டிகளில் மட்டும் இவற்றைத் தரலாம். மற்றபடி ஃப்ரெஷ் ஃப்ரூட் ஜீஸ்களே அவர்களுக்கு ஏற்றவை.

வீட்டிலேயே வெர்ஜின் மொஜிட்டோ செய்வதற்கான யூ டியூப் வீடியோ லிங்க்;

Video Courtsy: Youtube.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com