பொன்னிறத் தேனீர் தயாரிக்க தெரியுமா உங்களுக்கு?!

வெறும் மூன்று நிமிடங்கள் மட்டும் போதும் இல்லா விட்டால் தேனீரின் பொன்னிறம் மாறி விடக்கூடும். வடிகட்டிய தேனீரை இப்போது அருந்தலாம்.
பொன்னிறத் தேனீர் தயாரிக்க தெரியுமா உங்களுக்கு?!

உங்களுக்குத் தேனீர் தயரிக்க தெரிந்திருக்கலாம். ஆனால் அது நமது அம்மாக்களும், பாட்டிகளும் கற்றுத் தந்த வழக்கமான முறையாக இருக்கும். தேனீர் தயாரிப்பதென்றால் என்ன செய்வீர்கள்? முதலில் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் தேயிலைத் தூளைக் கொட்டி அதை நன்கு கொதிக்க விட்டு வடிகட்டி தேவைப்பட்டால் பால் சேர்த்தும், சேர்க்காமலும் சர்க்கரை சேர்த்து தேனீர் தயாரிப்பது தானே வழக்கம். சிலர் பாலுடன் தேயிலையைக் கொதிக்க வைத்து சுண்டக் காய்ச்சி 2 கப் பால் 1 கப்பாக வற்றும் வரை காத்திருந்து கள்ளிச்சொட்டு போல திக்காக தேனீர் தயாரிப்பார்கள். இதில் இஞ்சியும், ஏலமும் கலந்தால் மணம் எட்டு ஊருக்கு சேதி சொல்லும். இந்த வகையில் தேனீர் தயாரிக்க எப்படியும் 15 நிமிடங்களாவது ஆகலாம். ஆனால் அருமையான டீ தயாரிக்க வெறும் மூன்று நிமிடங்கள் மட்டுமே போதுமென்கிறார் ஒருவர். அது எப்படி?

தேவையான பொருட்கள்:

சூப்பர் பிரீமியம் தேயிலைத் தூள்: 1 டீஸ்பூன்
நன்கு கொதித்துக் கொண்டிருக்கும் தண்ணீர்: 1 கப்
சர்க்கரை: 1 அல்லது 2 டீஸ்பூன்
ஏலம்: 2

தயாரிப்பு முறை:

முதலில் நன்கு கொதிக்க வைத்த தண்ணீரை ஒரு கப்பில் எடுத்துக் கொண்டு அதில் 1 டீஸ்பூன் தேயிலைத் தூளைக் கொட்டி 3 நிமிடங்களுக்கு ஒரு தட்டால் இறுக மூடி வைக்கவும். பிறகு மூடியைத் திறந்து தேவையான அளவு சர்க்கரை கலந்து ஸ்பூனால் கிளறி விட்டு கரைத்து வடிகட்டவும். வெறும் மூன்று நிமிடங்கள் மட்டும் போதும் இல்லா விட்டால் தேனீரின் பொன்னிறம் மாறி விடக்கூடும். வடிகட்டிய தேனீரை இப்போது அருந்தலாம். இது தான் மலையாளிகளின் கட்டன் சாயா. பெரும்பாலும் பால் சேர்க்காமல் அருந்துவதே நன்றாகத் தான் இருக்கிறது. நமக்கு பால் சேர்க்க வேண்டுமெனில் கொதித்துக் கொண்டிருக்கும் பாலில் ஒரு கப் எடுத்து அதில் மேலே சொன்னவாறு தேயிலைத் தூள் சேர்த்து 3 நிமிடங்களுக்கு தேயிலை வாசம் வெளியேறாமல் மூடி வைத்து பின்னர் வடிகட்டினால் அந்த தேனீர் பொன்னிறமாக இல்லாவிட்டாலும் கூட சுவையும், மணமும் கியாரண்டி என்கிறார் மூணாறில் டீ ஷாப் வைத்திருக்கும் வேலுசாமி.

தேயிலை சேர்த்ததும் மூடி வைப்பதில் இருக்கும் ரகசியம் அதன் மணம் கப்பை விட்டு வெளியேறி விடக் கூடாது என்பதால் தான். இப்படி தேனீர் தயாரித்து அருந்திப் பாருங்கள். நிஜமாகவே அதன் சுவையும், மணமும் அலாதியாகத் தான் இருக்கிறது.

Image courtsy: google

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com