மொறு மொறுவென வடை தயாரிப்பது எப்படி?

நெல்லிக்காய்களை வேக வைத்து, கொட்டைகளை நீக்கி, மிக்ஸியில் விழுதாக அரைத்து
மொறு மொறுவென வடை தயாரிப்பது எப்படி?

நெல்லிக்காய்களை வேக வைத்து, கொட்டைகளை நீக்கி, மிக்ஸியில் விழுதாக அரைத்து அதை வடகம் மாவில் சேர்த்து வடகம் செய்தால் வித்தியாசமான சுவையில் சத்தான வடகம்  ரெடி.

கோதுமை மாவுடன் ஒரு தேக்கரண்டி கார்ன்ஃப்ளார் மாவு , ஒரு தேக்கரண்டி பாம்பே ரவை, ஒரு தேக்கரண்டி எண்ணெய்ச் சேர்த்துப் பிசைந்து ஊற வைக்காமல்  உடனே பூரி  செய்தால் பூரி உப்பலாக, மொறு மொறுப்பாகவும் இருக்கும்.

மோர்க்குழம்புக்கு அரைக்கும்போது சீரகத்துடன் ஒரு தேக்கரண்டி ஓமத்தையும் சேர்த்து அரைத்துச் செய்தால் மோர்க் குழம்பு சூப்பராக இருக்கும்.

பொடியாக நறுக்கிய வெண்டைக்காய் துண்டுகளை எண்ணெய்யில் பொரித்து, அதை மோர்க் குழம்பில் போட்டு மோர்க்குழம்பு செய்தால் அசத்தலாக இருக்கும்.

வடைக்கு அரைத்த மாவை சிறிது நேரம்  ஃப்ரிட்ஜில் வைத்து, பிறகு வடை செய்தால்  மொறு மொறு வடை கிடைக்கும்.

-  எம்.ஏ.நிவேதா

பால் திரிந்துவிட்டால்  கீழே கொட்டாமல் அப்படியே ஆற வைத்து, தயிரில் ஊற்றினால் உண்பதற்கு ருசியாக இருக்கும்.

தோசை மொறு மொறுப்பாக இருக்க சிறிதளவு வெந்தயத்தை ஊற வைத்து மாவுடன் சேர்த்து அரைக்க வேண்டும்.

ரசம் மீந்துவிட்டால் துவரம் பருப்பை வேக வைத்து மசித்து ரசத்துடன் சேர்த்தால் சுவையான சாம்பாராக ஆகிவிடும். 
  -  எல்.நஞ்சன்

வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி தயிர், வெல்லம் கலந்து சாப்பிட்டு வர தொண்டை வலி நீங்கும்.

ஐந்து சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய்யில் வதக்கி வெறும் வயிற்றில் உண்டு வர நரம்புத்தளர்ச்சி குணமாகும்.

வெங்காயச் சாற்றை நீராகாரத்துடன் சேர்த்துக் குடித்து வர நீர்க் கடுப்பு குணமாகும். 

வெங்காயத் துண்டுகளுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து சாப்பிட்டு வர வாயுக் கோளாறுகள் நீங்கும்.

வெங்காயச் சாற்றை மோருடன் கலக்கிக் குடித்து வர வறட்டு இருமல் குணமாகும்.
(எளிய செலவில் வெங்காய வைத்தியம்' நூலிலிருந்து)

-  நெ.இராமன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com