வாண்டுகளுக்குப் பிடித்த வீகன் டயட் என்றால் அது காலிஃப்ளவர் பாப் கார்ன்!

குழந்தைகள் மிச்சம் வைக்காமல் சாப்பிட வேண்டுமானால், அந்த உணவு வகைகள் அவர்களுக்கு பிடித்திருக்க வேண்டும். அந்த வரிசையில் இன்று கிரிஸ்பியான மொறு மொறு கால்ஃபிளவர் பாப் கார்ன் செய்து பழகலாம்.
வாண்டுகளுக்குப் பிடித்த வீகன் டயட் என்றால் அது காலிஃப்ளவர் பாப் கார்ன்!

பல சமயங்களில் பள்ளிக்குக் கிளம்பியாக வேண்டிய காலை நேரங்களில் சில குழந்தைகள் சாப்பிட அடம்பிடிப்பார்கள். முழுமையான காலை உணவை எடுத்துக் கொள்ளாமல், எத்தனை சுவையான டிஃபனையும் கூட அரைகுறையாக உண்டு நிராகரிப்பார்கள். இதனால் அவர்களது எனர்ஜி லெவல் ஒரே சீராக இருப்பதில்லை. காலையில் பள்ளிப்பேருந்தில் ஏறி பள்ளிக்குச் சென்று இறங்கி 2 மணி நேரம் கழிவதற்குள் அவர்களை சோர்வு ஆட்கொண்டு விடும், அப்புறம் தூங்கி வழியத் தொடங்கி விடுவார்கள். மாலையில் அவர்களை பிக் அப் செய்து கொள்ளச் செல்லும் போது ஆசிரியைகளிடமிருந்து பிறகு பெற்றோருக்குத்தான் வகையாக டோஸ் கிடைக்கும். ‘உங்கள் குழந்தை ஏன் எப்போது பார்த்தாலும் சோர்வாகவே இருக்கின்றான்(ள்)!!! என்று அவர்கள் கேட்கையில் வழக்கம் போல ‘அவன்(ள்) சரியாகச் சாப்பிடுவதே இல்லை. எப்போது பார்த்தாலும் சாப்பிடச் சொன்னால் எங்களைப் படுத்தி எடுக்கிறான்(ள்) என்றா இன்னும் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறீர்கள்?!

ஏன் நமது துறு துறு வாண்டுகளுக்காக, அவர்களுக்குப் பிடித்த புதுப்புது மொறு, மொறு ரெசிப்பிகளை நாம் கண்டடைந்தால் என்ன கெட்டு விடப் போகிறது?! குழந்தைகள் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டுத் தீர்த்தால் அது எப்போதுமே அம்மாக்களுக்கு மகிழ்ச்சிக்குரிய பெரிய காரணி தான். குழந்தைகள் மிச்சம் வைக்காமல் சாப்பிட வேண்டுமானால், அந்த உணவு வகைகள் அவர்களுக்கு பிடித்திருக்க வேண்டும். அந்த வரிசையில் இன்று கிரிஸ்பியான மொறு மொறு கால்ஃபிளவர் பாப் கார்ன் செய்து பழகலாம்.

தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர்- 1 (சின்னச் சின்னப்பூக்களாக தனித்தனியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்)
சோளமாவு- 3/4 கப்
ஹாட் சாஸ்- 2 டேபிள் ஸ்பூன்
மோர்- 1 கப்
பிரெட் தூள்- 2 கப்
உப்பு- தேவையான அளவு
கொத்துமல்லி இழைகள்- ஒரு கைப்பிடி அளவு ( பாப் கார்னை அலங்கரித்துப் பரிமாற பயன்படுத்தலாம்)
சமையல் எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை: 

ஒரு பெரிய கிண்ணத்தில் சோளமாவு, ஹாட் சாஸ், மோர், உப்பு போன்றவற்றை மேலே குறிப்பிட்டுள்ள அளவுகளில் கலந்து நன்கு மிக்ஸ் செய்யவும். சிறு கட்டிகள் கூட இன்றி கலவை நன்றாக மிக்ஸ் ஆனதும் சின்னச் சின்னப் பூக்களாக தனித்தனியாக நறுக்கிச் சுத்தம் செய்து வைக்கப்பட்டுள்ள காலிஃபிளவரை உதிரி, உதிரியாகாந்தக் கலவையில் சேர்த்து நன்றாகக் கலவை காலிஃபிளவரில் ஒட்டிய பிறகு அதை எடுத்து மீண்டும் பிரெட் தூளில் நன்கு புரட்டி சிறிது, சிறிதாக கொதிக்கும் சமையல் எண்ணெயில் விட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். இப்போது கால் ஃபிளவர் பாப் கார்ன் ரெடி. ரெடியான காலிஃபிளவர் பாப்கார்ன் மேல் சிறு சிறு இழைகளாக நறுக்கப்பட்ட கொத்துமல்லித்தளை கொண்டு அலங்கரித்து பரிமாறலாம். எப்போதுமே காலிஃபிளவர் பாப் கார்னுக்கு ஃபிளேவர் சேர்த்த கெட்டித்தயிர் அருமையான காம்பினேஷன். கெட்டித்தயிர் மிகச்சிறந்த மைக்ரோ நியூட்ரியண்ட்ஸும் கூட என்பதால் குழந்தைகளுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கதை தான்!
 

Images: delish.com.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com