ருசியான ஊறுகாய் போடுவது எப்படி?

ஊறுகாய் தயாரிப்பது எளிமையானது ஆனால் அதைப் பராமரிப்பது சற்றுக் கடினம் தான்.
ருசியான ஊறுகாய் போடுவது எப்படி?

ஊறுகாய் தயாரிப்பது எளிமையானது ஆனால் அதைப் பராமரிப்பது சற்றுக் கடினம் தான். சீக்கிரம் கெட்டுப் போய்விடும். சின்னச் சின்ன விஷயங்களை கவனம் வைத்தால் அற்புத சுவையுள்ள ஊறுகாய்களை தயாரித்து, அதன் தன்மை மாறாமல் நீண்ட நாட்கள் வைத்துப் ருசிக்கலாம்.

ஊறுகாய்   தாளிக்கும் போது  அதற்குரிய  பொருட்களுடன் சிறிது  எள்ளையும் வறுத்துப் பொடி செய்து போட்டால் ஊறுகாய் வாசனை மிகுந்து இருக்கும்.  அதுமட்டுமல்லாமல் ஊறுகாய் சீக்கிரம் கெட்டும் போகாது.

வெயில் காலத்தில் ஊறுகாயைத் தயாரித்து வைத்துக் கொண்டால், அந்த வருடம் முழுவதும் அதைப் பயன்படுத்தலாம்.

உப்பும் உரைப்பும் தான் ஊறுகாயின் பிரதான காரணி. ஊறுகாய் தயாரிப்பதற்குப் பொடி உப்பை விட கல் உப்பே சிறந்தது. தேவைப்பட்டால் கல் உப்பை மிக்ஸியில் நன்றாகப் பொடித்தும் பயன்படுத்தலாம்.  

ஊறுகாய் விரைவில் கெட்டுப் போக முதல் காரணம் ஈரத்தன்மை தான். ஊறுகாயை நன்கு உலர்ந்த ஜாடியில் அல்லது பாட்டிலில் பத்திரப்படுத்த வேண்டும்.  ஒவ்வொருமுறை அதன் எடுக்கும்போதும் மரத்தாலான ஸ்பூன் உபயோகப்படுத்தவேண்டும். கைகளால் தொடக் கூடாது. அப்படியே கையால் எடுக்க நேர்ந்தால், ஈரக்கையில் தொடாமல் நன்றாக உலர்ந்த கைகளால் எடுக்க வேண்டும்.

ஊறுகாய் தயாரிக்கும் போது அதன் நிறம் முக்கியம். மிளகாய் மற்றும் புளி புதியதாக பளிச் நிறத்தில் இருந்தால், ஊறுகாயும் நல்ல நிறத்தில் இருக்கும். கறுத்து நிறம் மாறி விடாது.

ஊறுகாயைத் தாளிப்பதற்கு நல்லெண்ணெயைப் பயன்படுத்த வேண்டும்.

ஊறுகாயை பாட்டிலில் ஊற்றிய பின், மேலே சிறிதளவு எண்ணெய் நின்றால் ஊறுகாய் கெடாமல் நீண்ட நாட்கள் அப்படியே இருக்கும்.

ஜாடியில் அல்லது பாட்டிலில் ஊறுகாயை பத்திரப்படுத்தும் போது விளிம்பு வரை போட்டு நிரப்பக் கூடாது. ஒரு இஞ்ச் அளவேனும் வெற்றிடம் விட வேண்டும்.

எலுமிச்சை ஊறுகாய் தயாரிக்கும் போது, மெல்லிய தோலுள்ள பழங்களைத் தேர்ந்தெடுத்துப் போடவும். காரணம் அவற்றில்தான் அதிகளவு சாறு இருக்கும்.

நெல்லிக்காய் ஊறுகாய் தயாரிக்கும் போது அரி நெல்லிக்காயை நன்கு அலசி அதனுடைய மேற்பரப்பு உலர்ந்தவுடன் துணியில் லேசாக துடைத்து விட்டு உப்பில் ஊற விடவும்.

பூண்டு ஊறுகாய் தயாரிக்கும்போது, சிறிதளவு பூண்டை விழுதாக அரைத்துக் சேர்த்தால், நல்ல மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.

ஆவக்காய் ஊறுகாயை தயாரிக்கும் போது மாங்காய் புதியதாக இருந்தால், நன்றாக வரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com