பட்சணம் செய்யப் போறீங்களா? அப்போ படிங்க... இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவலாம்!

லட்டு, ரவா லட்டு, பொட்டுக் கடலை மாவு உருண்டை போன்றவற்றை பிடிக்கும் போது கையில் சிறிது நெய்தடவிக் கொண்டு பிடித்தால் நன்கு பிடிக்க வருவதுடன் மணமாகவும் இருக்கும்
பட்சணம் செய்யப் போறீங்களா? அப்போ படிங்க... இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவலாம்!
  • பொடியாக நறுக்கிய புதினா சேர்த்துப் பிசைந்து தட்டை தட்ட  ருசி கூடும். நல்ல மணமாகவும் இருக்கும்.
  • தேன் குழல் செய்யும்போது நீருக்குப் பதில் தேங்காய்ப் பால் சேர்த்துச் செய்ய சுவை கூடுதலாக இருக்கும்.
  • எந்த பட்சணம் செய்வதாக இருந்தாலும் அதன் மொறுமொறுப்புக்கு வெண்ணெய் சேர்த்தால் உத்திரவாதம் தரும். சீக்கிரம் பட்சணங்கள் நமத்தும் போகாது.
  • மைக்ரோ அவனில் உட்புறப் பகுதியைச் சுத்தப்படுத்த ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் அரை மூடி எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து அவனில் இரண்டு நிமிடங்கள் வைத்து எடுத்துத் துடைக்க பளிச்சென்று     இருக்கும்.
  • காரம் சேர்த்து செய்யும் பட்சணத்துக்கு காரப்பொடி போடாமல், பச்சைமிளகாயுடன், ஓரிரு காய்ந்த மிளகாயைச் சேர்த்து அரைத்து, வடிகட்டி, அந்தத் தண்ணீரைப் பயன்படுத்திச் செய்தால் பட்சணம் நல்ல   நிறமாக இருக்கும்.
  • வெண்ணெய் சேர்த்து செய்யும் பலகாரங்களுக்கு மாவுடன் வெண்ணெய்யை நன்கு கலந்தபின் தண்ணீர்விட்டுப் பிசைய வேண்டும்.
  • பட்சணங்கள் செய்ய பயன்படுத்தும் பெருங்காய நீர் மீந்துவிட்டால் ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • லட்டு, ரவா லட்டு, பொட்டுக் கடலை மாவு உருண்டை போன்றவற்றை பிடிக்கும் போது கையில் சிறிது நெய்தடவிக் கொண்டு பிடித்தால் நன்கு பிடிக்க வருவதுடன் மணமாகவும் இருக்கும்.
  •   குலோப்ஜாமூன் பாகு மீந்து விட்டால் அதில் மைதா மாவை சிறிது சிறிதாகச் சேர்த்து பிசைந்து சப்பாத்தி போல திரட்டி சதுர துண்டுகளாக வெட்டி எண்ணெயில் பொரித்தெடுத்தால் சுவையான, மணமான   பிஸ்கெட் தயார்.
  •  ரசத்தில் மண்டி மீந்துவிட்டதா? பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி, வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு சேர்த்துத் தாளித்து, நறுக்கி   வைத்ததைப் போட்டு நன்கு வதக்கவும். பின்னர் மிஞ்சிய ரசத்தை ஊற்றி சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். அரிசி அல்லது கடலைமாவு, வெல்லம் ஆகியவற்றையும் போட்டு அடிப்பிடிக்காமல்   கிளறி இறக்கினால் அருமையான தொக்கு ரெடி. இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி போன்ற பலகாரங்களுக்கு இந்த தொக்கு நல்ல "காம்பினேஷன்'.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com