நாவூறும் ஒரு சுவையான ரெஸிபி! பன்னீர் புலாவ் வித் ஆலு 

பாஸ்மதி அரிசியை கழுவி 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
நாவூறும் ஒரு சுவையான ரெஸிபி! பன்னீர் புலாவ் வித் ஆலு 

தேவையான பொருட்கள் :
 

பாஸ்மதி அரிசி - 1 கப்,
உருளைக்கிழங்கு - 200 கிராம்
பன்னீர் - 15 துண்டுகள்,
தக்காளி - 2,
பெரிய வெங்காயம் - 2,
பச்சைமிளகாய் - 2,
முந்திரி பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
சாட் மசாலா  - 1/2 டீஸ்பூன்,
பட்டை - சிறிது, கிராம்பு - 2,
சோம்பு - 1 டீஸ்பூன்,
பிரிஞ்சி இலை - 1,
நெய் - 2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

பாஸ்மதி அரிசியை கழுவி 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

தண்ணீரை வடிகட்டி, வெறும் வாணலியில் லேசாக வறுத்துக் கொள்ளவும்.

உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கவும். பன்னீரை துண்டுகளாக  நறுக்கிக் கொள்ளவும்.

லேசாக வறுத்த பாஸ்மதி அரிசியை தேவையான அளவு நீர் விட்டு உதிரியாக வடித்து கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பன்னீர், நறுக்கிய உருளைக்கிழங்கைப் போட்டு பொரிக்கவும்.

வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் ஆகியவற்றை சிறிதும் தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் சிறிதளவு மற்றும் நெய்யை விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சு இலை, சோம்பு போட்டு தாளிக்கவும்.

இந்தக் கலவையில் அரைத்த வெங்காயம், தக்காளி விழுது, உப்பு சேர்த்து வதக்கவும்.

இவை நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறி மிதமான தணலில் வைக்கவும்.

ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது பொரித்த பன்னீர், உருளைக்கிழங்கு துண்டுகளை போட்டு கிளறி இறக்கவும்.

கடைசியாக இதில் உதிரியாக வடித்த சாதத்தை போட்டு கிளறி இறக்கவும்.

சுவையான பன்னீர் புலாவ் வித் ஆலு ரெடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com