கார சாரமான பேபி உருளைக்கிழங்கு ரெசிபி!

உருளைக் கிழங்கில் செய்த உணவுகள் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
கார சாரமான பேபி உருளைக்கிழங்கு ரெசிபி!

உருளைக் கிழங்கில் செய்த உணவுகள் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் சிறிய அளவிலான பேபி உருளை என்றால் அவர்கள் மறு வார்த்தைப் பேசாமல் சாப்பிட்டுவிடுவார்கள். குளிர்காலத்தில் பேபி உருளைக்கிழங்குகளின் சீசன் என்பதால், இந்த மாதத்தில் பேபி உருளையை வெரைட்டியாகச் சமைத்து அவர்களுக்குத் தரலாம். 

தேவையான பொருட்கள் :

பேபி பொட்டேடோ - 200 கிராம்
குடை மிளகாய் - 1
இஞ்சி-பூண்டு விழுது - 1 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி சாஸ் - 50 கிராம்
இடித்த மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு - 10 கிராம்
மைதா மாவு - 50 கிராம்
கார்ன்ஃப்ளார் - 100 கிராம்
வெங்காயத்தாள் - 10 கிராம்
தக்காளி - 1
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :

தக்காளி, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வெங்காயத்தை சதுரமாக வெட்டிகொள்ளவும். இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

குடைமிளகாயை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பேபி பொட்டேடோவை நன்றாக கழுவிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மைதா, கார்ன்ஃப்ளார், உப்பு, இஞ்சி, பூண்டு விழுது, சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து, அதனுடன் பேபி பொட்டேடோவை சேர்த்து பிசறி சிறிது நேரம் ஊற வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ஊற வைத்துள்ள பேபி உருளைக்கிழங்கைப் போட்டு பொரித்தெடுக்கவும்.

இன்னொரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய இஞ்சி, பூண்டு, பெரிய வெங்காயம், குடைமிளகாய் போட்டு வதக்கவும்.

அனைத்தும் சிறிது வதங்கியதும் இதில் சிறிது தண்ணீர் சேர்த்து தக்காளி சாஸ், இடித்த மிளகாய்த்தூள், உப்பு, சர்க்கரை, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.

கடைசியாக பொரித்த உருளை, தக்காளி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி பரிமாறவும்.

குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் மிகவும் விரும்பி சாப்பிடும் சைட் டிஷ் இது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com