ஒரியா ஸ்பெஷல் ‘சென்ன போடா’ மில்க் கேக் ரெஸிப்பி!

இந்த ஒரியா ஸ்பெஷல் ஸ்னாக்ஸில் பால் தான் முக்கியமான இன்கிரடியண்ட்... அதோடு உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் சேர்க்கையில் அதை சாப்பிடும் குழந்தைகளின் எனர்ஜி லெவல் குறையாமல் காக்கும் வேலையை
ஒரியா ஸ்பெஷல் ‘சென்ன போடா’ மில்க் கேக் ரெஸிப்பி!

நம் தேன் தமிழ்நாட்டில் ஸ்னாக்ஸ் வெரைட்டிகளுக்குப் பஞ்சமே இல்லை. ஆனால், அதையே தொடர்ந்து ருசிப்பதைக் காட்டிலும் நமது அண்டை மாநிலங்களிலும் என்னென்ன விதமான ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்னாக்ஸ் ரெஸிப்பிகள் இருக்கின்றன என்று தெரிந்து வைத்துக் கொண்டு அவ்வப்போது அதை செய்து கொடுத்தோமானால் குழந்தைகள் பெருமையாக அவற்றைப் பள்ளியில் தங்களது நண்பர்களுடன் சேர்ந்து உண்பார்கள். இல்லையேல் ‘அட இன்னைக்கும் அதே ஸ்னாக்ஸ் தானா? உங்களுக்கு வேறெதுவும் செய்யவே தெரியாதாம்மா?! ச்சே சுத்த போர்’ எனும் முணுமுணுப்புகளைக் கேட்க வேண்டியிருக்கும். சும்மா ஒரு சேஞ்சுக்கு இப்படிப் பட்ட ஈஸியான ரெஸிப்பிகளையும் தெரிந்து வைத்துக் கொண்டு சமைத்துக் கொடுத்தீர்களெனில் அப்புறம் குழந்தைகள் முன்னிலையில் தினமொரு ஸ்பெஷல் செய்து கொடுத்து பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்...

பால் - 1 லிட்டர்
எலுமிச்சம் பழம்
பாம்பே ரவை
உலர் திராட்சை மற்றும் பழங்கள்
சர்க்கரை

செய்முறை: 

1 லிட்டர் பாலை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் ஏற்றி கொதிக்க விடவும். பால் பொங்கி வருகையில் அடுப்பை சிம்மில் வைத்து பாலை 20 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு அதன் மேல் எலுமிச்சம் பழம் பிழிந்து நன்கு கலக்கி விடவும். கொதிக்கும் பாலில் எலுமிச்சையைப் பிழிந்தால் பாலில் நீர் தனியாகவும், பால் கட்டி தனியாகவும் பிரிந்து வரும். அப்போது இறக்கி அதை 10 நிமிடங்கள் ஆற விட்டு வடிகட்டவும். கிடைக்கக் கூடிய பாலாடைக் கட்டியை ஒரு பெளலில் எடுத்துக் கொண்டு அதை 10 நிமிடங்கள் ஆற விடவும்.

பின்னர் அதனுடன் கால் கப் சர்க்கரை, 2 டேபிள் ஸ்பூன் பாம்பே ரவை கலந்து ஸ்பூனால் நன்கு கிளறிக் கொண்டு அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து மீண்டும் கிளறவும். அதனுடன் உலர்ந்த பழங்கள், முந்திரியும் சேர்த்து மீண்டும் கிளறவும்.

இப்போது குக்கரை எடுத்து அதில் சற்று உப்பு சேர்த்து அடுப்பில் ஏற்றி குக்கரை சூடாக்கவும். ஒரு சிறிய பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதன் அடிப்பாகத்தில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி நன்கு படரத் தேய்த்து விடவும். பின்னர் முன்னரே தயாராக உள்ள பாலாடைக்கட்டி, பாம்பே ரவா + உலர் பழக் கலவையை இந்தப் பாத்திரத்தில் கொட்டவும். பிறகு அந்தப் பாத்திரத்தை முன்னதாகச் சூடேற்றியுள்ள குக்கருக்குள் வைத்து மூடவும். அரைமணி நேரம் கழித்து  குக்கரைத் திறந்து உள்ளே தயாராக இருக்கும் சென்னா போடாவை வெளியில் எடுக்கவும். அதை 10 நிமிடங்கள் ஆற விட்டு மிருதுவாகக் கத்தியால் கீறி வெளியில் எடுத்து அலங்காரமான தட்டில் வைத்து மேலே முந்திரி மற்றும் பிஸ்தா நொறுக்குகள் தூவிப் பரிமாறலாம்.

சுவைக்கு சுவையும் ஆச்சு. குழந்தைகளுக்கும், குடும்பத்தினருக்கும் புது விதமான ஸ்வீட் சாப்பிட்ட திருப்தியும் ஆச்சு.

இந்த ஒரியா ஸ்பெஷல் ஸ்னாக்ஸில் பால் தான் முக்கியமான இன்கிரடியண்ட்... அதோடு உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் சேர்க்கையில் அதை சாப்பிடும் குழந்தைகளின் எனர்ஜி லெவல் குறையாமல் காக்கும் வேலையை இந்த ஸ்னாக்ஸ் செய்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com