நாக்கு ருசிக்க ஆந்திர ஸ்பெஷல் ஸ்பைஸி சிக்கன் ஊறுகாய் செய்வது எப்படி?

இதை சாதத்துக்கும் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம் அல்லது இட்லி, தோசை, சப்பாத்தி, ப்ரெட், ரொட்டி என எல்லாவற்றுக்கும் தொட்டுக் கொண்டோ, ஸ்டஃப் செய்து வைத்தோ சாப்பிடலாம். காரம், சாரமாக அபார ருசியுடன் இருக்கும
நாக்கு ருசிக்க ஆந்திர ஸ்பெஷல் ஸ்பைஸி சிக்கன் ஊறுகாய் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

  • கோழிக்கறி - 1 கிலோ
  • பூண்டு - 1/4 கிலோ
  • இஞ்சி - 4 அல்லது 5 பெரிய துண்டு
  • புளி - 1/2 கிலோ
  • மஞ்சள் தூள் -1 டேபிள் ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் - ஒரு கைப்பிடி
  • மல்லித்தூள் - 1 கைப்பிடி
  • கடுகுத்தூள் - 1 கைப்பிடி
  • சீரகத்தூள் - 1 கைப்பிடி
  • நல்லெண்ணெய் - 1/4 லிட்டர்
  • தண்ணீர் - ஒரு சொம்பு நிறைய

செய்முறை: 

கோழிக்கறியை தோல் நீக்கி நன்கு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பெரிய இரும்பு வாணலியை அடுப்பில் ஏற்றி, 1 சொம்புத் தண்ணீர் விட்டு சுத்தம் செய்த கோழிக்கறித்துண்டுகளை அதில் இட்டு நன்கு வேக வைக்கவும். கோழிக்கறி நன்றாக வெந்தபின்பும் அதில் ஊற்றிய தண்ணீர் நன்கு சுண்டி கோழிக்கறி தண்ணீரை முழுவதுமாக இழுத்துக் கொண்ட பின் நீரின்றி நன்கு வெந்த கோழிக்கறியைத் தனியே ஒரு கோப்பையில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

1/2 கிலோ புளியை தண்ணீரில் ஊற வைத்து எடுத்து அதை மண் வாணலியில் போட்டு சூடாக்கவும். புளிக்கரைசல் நன்கு சூடானதும் அதை இறக்கி வைத்து விட்டுப் பிறகு பூண்டு + இஞ்சித் துண்டுகளை தோல் நீக்கி சுத்தம் செய்து சிறு கல்லுரலில் இட்டு நன்கு இடித்து பேஸ்ட் போல மசித்து எடுத்து வைத்துக் கொண்டு இரும்பு வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு விழுதை பொன்னிறத்தில் வதக்கி எடுத்துக் கொள்ளவும். பிறகு மீண்டும் குளிரக் குளிர கோழிக்கறி முங்கும் அளவுக்கு நல்லெண்ணெய் விட்டு தண்ணீரில் வேக வைத்து எடுத்து வைத்த கோழிக்கறித் துண்டங்களை அதில் போட்டு நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்து ஒரு பீங்கான் ஜாடி அல்லது மண் பானையில் எடுத்து வைக்கவும்.

இந்த வறுத்த கோழிக்கறியுடன் நன்கு கெட்டியாகக் கரைந்து மிதமான சூட்டிலிருக்கும் புளிக்கரைசலுடன் சேர்த்து மீண்டும் வாணலியில் இட்டு ஒன்றுடன் ஒன்று நன்கு கலக்குமாறு கிளறி விட்டு இறக்கி மேலே சொல்லப்பட்ட அளவுகள் கைப்பிடி கடுகுத்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள் எல்லாம் கலந்து தேவையான அளவு உப்பும் சேர்த்து கோழிக்கறியை வதக்கியது போக மிஞ்சியிருக்கும் நல்லெண்ணெயும் சேர்த்துக் கிளறி ஒரு மண் ஜாடியில் எடுத்து வைக்கவும். இப்போது அருமையான ஆந்திரா ஸ்பெஷல் சிக்கன் ஊறுகாய் ரெடி.

இதை சாதத்துக்கும் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம் அல்லது இட்லி, தோசை, சப்பாத்தி, ப்ரெட், ரொட்டி என எல்லாவற்றுக்கும் தொட்டுக் கொண்டோ, ஸ்டஃப் செய்து வைத்தோ சாப்பிடலாம். காரம், சாரமாக அபார ருசியுடன் இருக்கும். என்ன கைப்பக்குவம் சரியாக அமைய வேண்டும். அது ஒன்று தான் எல்லாவற்றையும் விட முக்கியம்.

ஆந்திராவில் ஒரு பாட்டி இந்த சிக்கன் ஊறூகாயை எப்படி அருமையாகச் செய்து அசத்துகிறார் என்று இந்த காணொளியில் பாருங்கள். சிக்கன் ஊறுகாய் தயாராகும் விதத்தைப் பார்த்தால் பார்த்துக் கொண்டிருக்கும் போதே நாவூறும்.
 

Video courtesy: myna street foods in you tube...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com