அம்மாவுக்கு என்ன ஆச்சு?

இன்று தமிழ்நாடு முழுக்க ஒவ்வொருவருக்குள்ளும் குடைந்து கொண்டிருக்கும் ஒரே கேள்வி இது ஒன்று தான்!
அம்மாவுக்கு என்ன ஆச்சு?

இன்று தமிழ்நாடு முழுக்க ஒவ்வொருவருக்குள்ளும் குடைந்து கொண்டிருக்கும் ஒரே கேள்வி இது ஒன்று தான்! நாளிதழ்களிலும், தொலைக்காட்சி செய்திகளிலும் உடனுக்குடன் வெளிப்படுத்தப் படும் தகவல்களை எல்லோரும் தெரிந்து கொண்டு தான் இருக்கிறார்கள், எனினும் ‘அம்மாவுக்கு என்ன ஆச்சு?’ என்பது பலராலும் இன்னமும் அறிந்து கொள்ள முடியாத புதிராகத் தான் நீடிக்கிறது. கடந்த செப்டம்பர் மாத 22 ஆம் தேதி முதல் கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கும் மேலாக அப்பல்லோ மருத்துவமனை வாசம். இடையில் ஒருமுறை கூட அமைச்சர்களுடனோ, அரசு உயரதிகாரிகளுடனோ கூட நேரிடையாக உரையாட முடியாத நிலை. அப்பல்லோ ‘பிரதாப் ரெட்டியே’ நேரடியாக பிரஸ் மீட்டில் தோன்றி அம்மா பூரண நலத்துடன் இருக்கிறார். இனி வீடு திரும்பலாம் என கடந்த வாரம் அறிவித்த பின்னும் கூட இப்போதும் நீடிக்கும் அம்மாவின் தீவிர உடல்நலமின்மை. இதெல்லாம் பார்க்கும் போது சாமானியர்கள் மனதில் அரித்துக் கொண்டிருக்கும் கேள்வி இது ஒன்றாகவே இருக்கிறது. நீர் சத்து குறைபாடு, நுரையீரல் நோய் தொற்று, தொடரும் சிறுநீரகக் கோளாறுகள், திடீரென வந்துள்ள மாரடைப்பு என எல்லா சவால்களையும் முறியடித்து அம்மா பூரண உடல்நலத்துடன் மீள வேண்டும் என்பதே இன்று தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த விருப்பமாக மாறி விட்டது. 
அம்மா மீள்வாரா?
மீள வேண்டும் என்பது தான்  முந்தைய ஆட்சிகாலத்தில் அவரது பல உத்திரவுகளால் பாதிப்படைந்து விட்டோம் என நினைக்கும் மக்களது விருப்பமாகவும் இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com