கனடாவில் கண்டறியப்பட்டது உலகின் மிகப் பழமையான நீர்!

கடல் நீரை விட இந்த நீர் அதிக உப்புத் தன்மையுடன் இருந்தாலும் சோதனையில் அருந்துவதற்குத் தகுந்த நல்ல நீராகவே கண்டறியப் பட்டுள்ளது.
கனடாவில் கண்டறியப்பட்டது உலகின் மிகப் பழமையான நீர்!

உலகின் மிக பழமையான நீர் கனடாவில் உள்ள ஒர் சுரங்கத்தில் இருப்பதை கனடாவில் உள்ள டொராண்டோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். முதன் முதலில் 2013 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட பழமையான நீர் மாதிரிகள் 2.4 கிலோமீட்டர் ஆழத்திலும், 1.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவும் இருந்தது. ஆனால் இப்போது சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும், 2 பில்லியன் அதாவது 200 கோடி ஆண்டுகளுக்குமுற்பட்ட இந்த நீர் மாதிரியானது தோராயமாக மூன்று கிலோமீட்டர் ஆழத்தில் இருக்கிறது. இந்த நீர் மாதிரியில் அதிக அளவில் சிறு உயிரினங்கள் வாழ்ந்ததற்கான ரசாயன சுவடுகள் கிடைத்துள்ளன. கடல் நீரை விட இந்த நீர் அதிக உப்புத் தன்மையுடன் இருந்தாலும் சோதனையில் அருந்துவதற்குத் தகுந்த நல்ல நீராகவே கண்டறியப் பட்டுள்ளது.

உலகில் இதுவரை கண்டறியப் பட்ட நீர் மாதிரிகளில் இது தான் மிகப் பழமையானதாக கருதப் படுகிறது. கண்டறியப்பட்ட நீரில் கிடைத்த ரசாயனச் சுவடுகளின் அடிப்படையில் டொராண்டோ விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆய்வு முடிவில் அன்று வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை குறித்தும் தகவல்கள் அறியப்படலாம்.

Source: private t.v chanel 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com