25 நொடிகளே போதுமாம்... நமது சாக்லேட் ஏக்கத்தை காணாமல் போக வைக்க!

பெரும்பாலும் மனித சுபாவம் காத்திருக்க விரும்புவதில்லை, மக்கள் உடனடியாக எது ருசிக்க கிடைக்கிறதோ? அதற்கு மனம் மாறி விடுகிறார்கள். என்கிறது இப்படி ஒரு ஐடியாவை செயல்படுத்திய அமெரிக்க விஞ்ஞானிகள் குழு.
25 நொடிகளே போதுமாம்... நமது சாக்லேட் ஏக்கத்தை காணாமல் போக வைக்க!

உங்களுக்கு சாக்லேட் பிடிக்குமா? சாக்லேட்டுக்காக ஏங்குபவரா நீங்கள்?

அமெரிக்காவில் சாக்லேட் பிரியர்களுக்குப் பஞ்சமில்லை. அந்நாட்டு மக்களில் பாதிப்பேர் இதனால் உடல்நலக் கோளாறுகளுக்கு ஆளாவதைக் கண்ட விஞ்ஞானிகள் குழு ஒன்று இதற்கு என்ன தான் தீர்வு என்று யோசித்தது. கிடைத்தது வழி. பெரிய ஷாப்பிங் மால்கள் மற்றும் இனிப்பகங்களில் சாக்லேட் விரும்பி ஆர்டர் செய்யும் நபர்களுக்கு... உடனடியாக 25 நொடிகள் காத்திருக்கச் சொல்லு பதில் வருமாம். அப்படி காத்திருக்கும் நேரத்தில் சாக்லேட் ஆர்டர் செய்தவர்கள் மனம் மாறி, ஆர்டர் செய்ததும் உடனடியாகக் கையில் கிடைக்கிறதோ, அதைத் தேடத் துவங்கி விடுவார்களாம். ஆர்டர் செய்த உடன் கையில் கிடைக்கக் கூடிய உணவுப் பொருட்களாக இருப்பவை உடல் நலனுக்கு உகந்த ஹெல்தி உணவுப் பொருட்கள் மட்டும் தானாம்!. இதற்காக இனிப்பகங்கள், உனவு விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் வெண்டிங் மெஷினுடன் ஒரு டைமர் இணைத்திருக்கிறார்களாம். அந்த டைமர்கள் யார் வந்து எப்போது சாக்லேட் போன்ற அன்ஹெல்த்தி உணவுப் பொருட்களை ஆர்டர் செய்தாலும் 25 நொடிகள் காத்திருங்கள் என்றே பதில் வருமாம். பெரும்பாலும் மனித சுபாவம் காத்திருக்க விரும்புவதில்லை, மக்கள் உடனடியாக எது ருசிக்க கிடைக்கிறதோ? அதற்கு மனம் மாறி விடுகிறார்கள். என்கிறது இப்படி ஒரு ஐடியாவை செயல்படுத்திய அமெரிக்க விஞ்ஞானிகள் குழு.

இதற்கு பலன் உண்டா என்கிறீர்களா? நிச்சயம் உண்டாம். இதுவரை இப்படி விற்பனை நடைபெற்றதில் அன்ஹெல்த்திக்கு மாற்றாக விற்கப் பட்ட ஹெல்த்தி உணவுப் பொருட்களின் விற்பனை 5 % அதிகரித்திருக்கிறதாம். சாக்லேட் உள்ளிட்ட சர்க்கரை அதிகமான உனவுப் பொருட்கள் எளிதில் கிடைக்கும் நிலையைக் குறைத்து, படிப்படியாக இந்த முறையைச் செயல்படுத்தினால் ஒரு நாள் முற்றிலுமாக இந்த அன்ஹெல்த்தி உணவுப் பொருட்களை, உணவுப் பொருட்கள் சந்தையிலிருந்து விரட்டி விட முடியும் என்கிறது நிபுணர் குழு. சரி தானே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com