நம்புங்க பாஸ் நம்புங்க; சிவப்பா இருக்கறது எல்லாமே ரத்தமில்லை... இது நிஜமாவே தக்காளி கெச் அப்!

கெச் அப்களை வெறுக்கும் அல்லது கெச் அப் வியாபாரத்தை கெடுக்க நினைக்கும் எவரோ தான் இம்மாதிரியான ஒரு போலி வீடியோவை உருவாக்கி இணையத்தில் உலவ விட்டிருப்பதாக கூறப்படுகிறது.
நம்புங்க பாஸ் நம்புங்க; சிவப்பா இருக்கறது எல்லாமே ரத்தமில்லை... இது நிஜமாவே தக்காளி கெச் அப்!

சமீப நாட்களில் நமக்கு நன்கு பரிச்சயமான தக்காளி கெச் அப்பை அடைப்படையாகக் கொண்டு வெளியான யூ டியூப் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது. அந்த வீடியோவில் என்ன விசேஷம்? என்றால். ஃப்ரெஞ்சு ஃப்ரைஸ், பாப் கார்ன் சிக்கன், பார்பிக்யூ, தந்தூரி உணவுகள், நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ் உள்ளிட்ட ஜங்க் ஃபுட் வகை உணவுகளை தோய்த்து உண்ண மிகச் சிறந்த தொடு கறியாக நாம் கருதும் தக்காளி (டொமேட்டோ) கெச் அப்கள் நிஜத்தில் தக்காளிப் பழங்களில் இருந்து தயாரிக்கப் படவில்லை என்றும், எந்திர மயமான ஹை டெக் உணவுப் பொருள் தயாரிப்பு கூடங்களில், உறைந்த ரத்தம், கொகெய்ன், யூரின், ஜாதிக்காய் மற்றும் புளித்த ஆல்கஹால் உள்ளிட்ட பொருட்களை குறிப்பிட்ட சேர்மானத்தில் கலந்து தான் இம்மாதிரியான கெச் அப்கள் தயாராகின்றன என்று காட்டும் அந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகப் பரவிக் கொண்டிருக்கிறது. 

இது தான் அந்த யூடியூப் வீடியோ...

உண்மையில் இப்படித் தான் தக்காளி கெச் அப்கள் தயாராகின்றனவா? 

என்று பலர் அதிர்ந்து போக... தற்போது அந்த வீடியோ பொய்யானது என்று நிரூபிக்கப் பட்டுள்ளது. அறிவியல் ஊடகம் ஒன்றின் முத்திரை தாங்கி வெளிவந்துள்ள இந்த வீடியோ போலியானது. நிஜத்தில் தக்காளி கெச் அப்கள் எவ்வாறு தயாராகின்றன என்று காட்டும் வீடியோ ஒன்றில் வாய்ஸ் ஓவர் முறையில் இடு பொருட்கள் மாற்றிச் சொல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இறைச்சிக் கூடங்களின் மிக முக்கியமான உபரிப் பொருளான உறைந்த ரத்தம், பார்க்க தக்காளி கெச் அப் போன்றே தோற்றமளிப்பதால் போலி விடியோ தயாரிப்பாளர்களுக்கு மிக வசதியாகப் போய் விட்டது. இதே போல கார்ன் பவுடரும், கொகெய்னும் பார்க்க ஒரே மாதிரியாகத் தோற்றமளிக்கும், வினிகர் பார்க்க யூரின் போல இருப்பதால் ஒரிஜினல் வீடியோவில் சொல்லப்பட்ட இடுபொருட்களை மாற்றிச் சொல்லி இந்த போலி வீடியோ உருவாக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஒரிஜினல் வீடியோவில் தக்காளி கெச் அப் தயாரிக்க நன்கு பழுத்துச் சிவந்த தக்காளிப் பழங்கள், காய்ச்சி வடிகட்டிய வினிகர், ஹை ஃப்ரக்டோஸ் கார்ன் சிரப், உப்பு, ஆனியன் பவுடர், குறிப்பிட்ட சில மசாலாக்கள் மற்றும் இயற்கை வாசமூட்டிகள் மட்டுமே பயன்படுத்தப் படுவதாக காட்டுகிறார்கள். நிஜத்தில் தக்காளி கெச் அப்கள் தயாரிக்கப் படும் முறை இது தான். ஆனால் கெச் அப்களை வெறுக்கும் அல்லது கெச் அப் வியாபாரத்தை கெடுக்க நினைக்கும் எவரோ தான் இம்மாதிரியான ஒரு போலி வீடியோவை உருவாக்கி இணையத்தில் உலவ விட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Image courtsy: google

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com