போட்டியில் ஜெயிப்பவர்களுக்கு 6.5 கோடி ரூபாய் பரிசு!

போட்டிகளுக்காக $1.75 மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்துள்ளது டாட்டா குழுமம். இந்த நல்ல முயற்சியில் ஆஸ்திரேலிய சேவை நிறுவனம் ஒன்று டாட்டாவுடன் கைகோர்த்துள்ளது.
போட்டியில் ஜெயிப்பவர்களுக்கு 6.5 கோடி ரூபாய் பரிசு!

அனு மற்றும் நவீன் ஜெயின் பெண்கள் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை அமைப்பு அக்டோபர் 2016 ல் இந்தியாவில் XPRIZE ஆல் தொடங்கப் பட்டது. உலக அளவில் புதுமையான, சிறந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை அறிந்து அவற்றை ஊக்கப்படுத்தி முன்னெடுத்துச் செல்வதில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் இந்த அமைப்பானது, தற்போது உலக அளவில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை சார்ந்து குறிப்பிடத்தக்க தொழில்நுட்பத் தீர்வுகளைத் தரும் ஆய்வுகளை முன்னெடுத்துள்ளது. அதற்கான ஊக்கப் பரிசு போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது அதன் முதல் படியாக ஆர்வமுள்ள மாணவர் குழுக்கள் போட்டியில் பங்கு பெற தங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது. 

பெண்கள் பாதுகாப்பு எனும் அடிப்படையில் தற்போதுள்ள தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக முக்கியமான கண்டுபிடிப்புகளை உருவாக்கி அவற்றுக்கு ஊக்கப் பரிசாக 1 மில்லியன் டாலர்களை அறிவித்திருக்கிறார்கள் அனு மற்றும் நவீன் ஜெயின் அமைப்பினர். அதே போல தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் மறுமொரு முக்கியப் பிரச்சினையான தண்ணீர் பற்றாக்குறையை மையப்படுத்தி அதற்கு தீர்வு காணும் விதத்தில் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி முக்கியமான கண்டுபிடிப்புகள் வெளிவரவும் இந்த அமைப்பு உதவுகிறது.

அதற்காக இந்த அமைப்பு அறிவித்துள்ள போட்டிகளில் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க உதவும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் வெற்றிபெறும் பட்சத்தில் அவற்றின் அடக்க விலை $ 40 மிஞ்சக் கூடாது என்பது போட்டிக்கான விதிகளில் ஒன்றாகக் கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட இந்தப் போட்டிகளுக்காக $1.75 மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்துள்ளது டாட்டா குழுமம். இந்த நல்ல முயற்சியில் ஆஸ்திரேலிய சேவை நிறுவனம் ஒன்று டாட்டாவுடன் கைகோர்த்துள்ளது.

இந்தியக் கரன்ஸி மதிப்பீட்டில் $1 மதிப்பு 65 ரூபாய் என்று கணக்கிட்டால் 1 மில்லியன் டாலர்களின் இன்றைய இந்திய மதிப்பு சுமார் 6.5 கோடி ரூபாய்கள். யாருக்கு போட்டியில் வெல்லும் திறம் உண்டோ! யாருக்கு அதிர்ஷ்டம் வாய்த்திருக்கிறதோ? இந்தத் தொகையைப் பெற என்பது போட்டியின் முடிவில் தெரியும்.

போட்டியில் பங்கு பெறும் குழுக்கள் அவற்றின் செயல் திறன், முன் வைக்கும் தீர்வுகளின் தரம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.

போட்டிக்காகப் பதிவு செய்து கொள்ள கடைசி நாள்: ஏப்ரல் 28

மேலதிக விவரங்களுக்கு: safety.xprize.org எனும் இணையதள முகவரியை அணுகலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com