பெங்களூரு மக்களின் உள்ளத்தை கொள்ளையடிக்க, என்ன செய்தார் விராட் கோலி?!

திடீரென்று தான் கோலி இங்கே வந்தார், வந்தவர் உடனே அங்கக் குறைபாடுகள் உள்ள 15 நாய்களை தன் பொறுப்பில் வளர்ப்பதாக ஏற்றுக் கொண்டார்.
பெங்களூரு மக்களின் உள்ளத்தை கொள்ளையடிக்க, என்ன செய்தார் விராட் கோலி?!

ஐபிஎல் மேட்ச்சில் கலந்து கொள்வதற்காக தற்போது பெங்களூருவில் தங்கி இருக்கும் விராட் கோலி ஈஸ்டர் சண்டே அன்று அங்கிருக்கும் கைவிடப்பட்ட விலங்குகள் நல அமைப்பான CARE க்கு சென்றார். இதில் விளம்பர நோக்கம் ஏதுமில்லை, தனக்கிருந்த தனிப்பட்ட ஆர்வத்தின் காரணமாகவே கோலி அங்கு சென்றார். சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே திட்டமிடப்பட்டிருந்த அந்த வருகை... கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீண்டது. அங்கிருந்த நேரத்தில் கோலி 15 கைவிடப்பட்ட நாய்களை தன் பொறுப்பில் வளர்ப்பதாக ஏற்றுக் கொண்டார். ஆரோக்கியமாக இருக்கும் நாய்களை யார் வேண்டுமானாலும் வளர்க்க முன் வருவார்கள். ஆனால் அங்கங்களில் குறைகளுடன் கூடிய இந்த கைவிடப்பட்ட நாய்களைத் வளர்ப்புப் பிராணிகளாக தத்தெடுக்கத் தான் ஆட்கள் குறைவு. எனவே இவற்றை நான் வளர்க்கிறேன் என கோலி அறிவித்திருப்பது தான் பெங்களூரு மக்களை அசத்தி இருக்கிறது.

CARE பிராணிகள் நல அமைப்பின் நிறுவனரும், ட்ரஸ்டியுமான சுதா நாராயாணன் இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில்; இங்கே உடல் குறைபாடுகளால் கைவிடப்பட்ட 50 நாய்கள் இருக்கின்றன. நாங்கள அவற்றுக்கு இங்கே வாழ்நாள் பாதுகாப்பளித்து காப்பாற்றி வருகிறோம். திடீரென்று தான் கோலி இங்கே வந்தார், வந்தவர் உடனே அங்கக் குறைபாடுகள் உள்ள 15 நாய்களை தன் பொறுப்பில் வளர்ப்பதாக ஏற்றுக் கொண்டார். பெரும்பாலான மக்கள் பிராணிகள் மீது ஆர்வமிருந்தாலும் கூட நல்ல உடல் ஆரோக்கியமுள்ள அழகான நாய்களைத் தான் வளர்க்க விரும்புவார்கள். ஆனால் விராட் கோலி தாமே முன் வந்து முடமான, கண் பார்வைக் குறைபாடுகள் கொண்ட நாய்களை வளர்ப்பதாகச் சொல்லி வாங்கிச் சென்றது பாராட்டுதலுக்குரியது” என்றார்.

இப்போ தெரிகிறதா பெங்களூரு மக்களின் உள்ளத்தை கொள்ளையடிக்க கோலி என்ன செய்தார் என்று!

Image courtsy: google, the better india.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com