பூமிக்கு வெளியே ஜூபிட்டரைப் போன்றே மிகச்சூடான புதிய கிரகம் ஒன்று கண்டறியப்பட்டது: நாசா அறிவிப்பு!

இந்த கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகள் செயற்கைக்கோள் புகைப்படங்களில் தெரிகின்றன. ஆனால் அந்த நீரானது இரும்பைக் கொதிக்க வைக்கும் அளவுக்கு திறனுடையது அல்ல
பூமிக்கு வெளியே ஜூபிட்டரைப் போன்றே மிகச்சூடான புதிய கிரகம் ஒன்று கண்டறியப்பட்டது: நாசா அறிவிப்பு!

வாஷிங்டன்: பூமியிலிருந்து 900 ஒளி ஆண்டுகள் தூரத்தில் முதல்முறையாக வியாழன்( ஜுபிடர்) கிரகத்தைப் போன்றே மிகப்பெரிய புதிய கிரகம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகள் செயற்கைக்கோள் புகைப்படங்களில் தெரிகின்றன. ஆனால் அந்த நீரானது இரும்பைக் கொதிக்க வைக்கும் அளவுக்கு திறனுடையது அல்ல என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்து கூறியுள்ளனர். பூமிக்கு வெளியே வியாழனைப் போன்று பிறிதொரு பிரமாண்டமான கிரகத்தை, அதன் வளிமண்டலத்தில் ஒளிரும் நீர்மூலக்கூறுகளுடன் விஞ்ஞானிகள் கண்டறிவது இதுவே முதல் முறை எனக் கருதப்படுகிறது. 

அந்த கிரகத்திலும்கடந்த பத்தாண்டுகளாக நடைபெற்று வரும் பல்வேறு வானியல் ஆராய்ச்சிகள் மூலமாக பூமியைத் தாண்டியுள்ள பிற கோள்களிலும் வளிமண்டலம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை விஞ்ஞானிகள் சான்றுகளுடன் நிரூபித்துக் காட்டியிருந்தனர். தற்போது கண்டறியப்பட்டுள்ள வாயு நிறைந்த மிகப்பிரமாண்டமான புதியகோளான WASP- 121b ஐ அதை முதன் முதலாகக் கண்டறிந்தவர்களான நாசா விஞ்ஞானிகள் அதை ‘சூடான வியாழன்’ என்று குறிப்பிடுகின்றனர். இந்தக் கோள் முதன்முறையாக நாசாவின் ‘ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப்’ மூலமாகத் தான் அடையாளம் காணப்பட்டது. 

இந்தக் கண்டுபிடிப்பு குறித்துப் பேசும் போது; "நமது சொந்த சூரிய மண்டலத்தில் இருக்கும் மற்ற கிரகங்களைப் போலவே, அதே தொலைவில் இருக்கும் தொலைதூர பால்வெளிப் பகுதிகளை நாம் பார்க்கமுடியாத போது, அதன் கட்டமைப்பை வெளிப்படுத்த பிராக்ஸி நுட்பங்களை நாம் நம்பத் தொடங்க வேண்டும்" என்று அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைக்கழகப் பேராசிரியரும், வானியல் விஞ்ஞானியுமான டிரேக் டெமிங் கூறுகிறார்.

"WASP-121b மிகச் சூடான கிரகம் என்பதால் அதன் வளிமண்டல அடுக்கிலிருக்கும் நீராவி உருகி பளபளப்புடன் தோற்றம் தரலாம். ஆனால் அங்கிருக்கும் நீரானது தற்போது அங்கே உயிர்கள் வாழப் போதுமான அளவில் இல்லை என்பதே இப்போதைய நிஜம்.

விஞ்ஞானிகள் ஸ்பெக்ட்ரோகோபி ஆய்வு மூலமாக தொடர்ந்து புதிய கோளின் வளிமண்டல அடுக்குகளில் விதம் விதமான ஒளி அலைகளைப் பாய்ச்சி அதன் விளைவாக கோளின் பிரகாசத்தில் ஏற்படும் மாறுதல்களை உற்றுக் கவனித்து வருகின்றனர். புதிய கண்டுபிடிப்பான அந்தக் கோளின் வளிமண்டலத்தில் ஒளியைப் பாய்ச்சும் போது அங்கு உட்புறத்தில் வெப்பநிலை அதிகமிருப்பின் வாயு மூலக்கூறுகள் நீராவியாக மாறு கோளைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தில் பள பளப்பை ஏற்படுத்துகிறது. அதுவே கோளின் உள்ளே வெப்பநிலை குறைவாக இருப்பின் ஒளியைப் பாய்ச்சும் போது வெயிலின் தாக்கம் குறைவு எனில் ஒளியால் வளிமண்டல அடுக்குகளை ஊருவிச் செல்ல முடிவதில்லை.

எனவே புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் கோளின் வளிமண்டல அடுக்குகளின் மீது ஒளியின் தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மேலும் ஆராய்ச்சிகள் நிகழந்த வண்ணம் உள்ளன. இதுவரை நடைபெற்றிருந்த வானியல் ஆய்வுகளோடு ஒப்பிடும் போது இந்தப் புதிய கோளில் வளிமண்டலமும், நீரும் இருப்பதைக் கண்டறிந்து சொல்ல முடிந்ததே நாசாவின் விண்வெளிஆராய்ச்சி வெற்றிகளில் ஒரு பெஞ்ச் மார்க்காகக் கருதப்படுகிறது’ என நாசா, விஞ்ஞானிகள் குழுவினரில் ஒருவரான ஹன்னா வேக்ஃபோர்ட் கூறுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com