ஷோலே மற்றும் தீவார் உள்ளிட்ட அமிதாப் பச்சனின் திரைப்படக் காட்சிகள் மூலம் ஸ்வச் பாரத் பாடம் புகட்டும் முயற்சி!

இந்த ஒரு படம் மட்டும் தான் என்றில்லை, அமிதாப் பச்சன் நடிப்பில் வெற்றி பெற்ற ‘சோட்டி சதிரி மற்றும் தீவார்’ உள்ளிட்ட திரைப்படங்களில் இருந்தும் கூட காட்சிகள் உருவப்பட்டு இம்மாதிரி பிரச்சாரங்களுக்குப் 
ஷோலே மற்றும் தீவார் உள்ளிட்ட அமிதாப் பச்சனின் திரைப்படக் காட்சிகள் மூலம் ஸ்வச் பாரத் பாடம் புகட்டும் முயற்சி!

ஷோலே திரைப்படத்தில் ஒரு காட்சி;

அடிபட்டு காயங்களுடன் இருக்கும் அமிதாப்பிடம், தர்மேந்திரா;
உனக்கு எப்படி அடிபட்டது? என்று கேட்கிறார்;
அதற்கு அப்படத்தில் ஜெய் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அமிதாப்; 

'என் வீட்டில் டாய்லெட் இல்லாததால் நான் இருட்டில், திறந்த வெளியில் இயற்கைக் கடன் கழிக்கையில் எதிர்பாராமல் கீழே விழுந்ததில் அடிபட்டு காயமாகி விட்டது’ என்று கூறும் அந்தக் காட்சி உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா?

இல்லாவிட்டால் குற்றமில்லை!

அந்தக் காட்சியை அப்படியே எடுத்து மீட்டுருவாக்கம் செய்து தற்போது ‘திறந்த வெளியில் மலம் கழித்தால் இப்படித்தான் அடிபட்டு, காயமடைவீர்கள்’ எனும் ரீதியில் ராஜஸ்தானின் பிரதாப்கார்க் மாவட்டக் கிராமங்களில் ஸ்வச் பாரத் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. திறந்த வெளியில் மலம் கழிக்கும் வழக்கம் இன்றளவும் வட மாநிலங்கள் பலவற்றிலும் முற்றிலும் தவிர்க்க முடியாத அம்சங்களுள் ஒன்றாகவே இருந்து வருவதால், அப்பழக்கத்தை மக்கள் மனங்களில் இருந்து முறியடிக்கும் விதமாக இப்படி வெற்றி பெற்ற திரைப்படங்களில் இருந்து காட்சிகளை உருவி அவற்றின் மூலமாக ஸ்வச் பாரத் விளம்பரங்கள் வலுவூட்டப்படுகின்றன. ராஜஸ்தானில் இம்முயற்சியைத் துவக்கி வைத்தவர் முனிஸிபாலிட்டி எக்ஸிகியூட்டிவ் அதிகாரியான ஹிமான்சுல் அகர்வால்.

இந்த ஒரு படம் மட்டும் தான் என்றில்லை, அமிதாப் பச்சன் நடிப்பில் வெற்றி பெற்ற ‘சோட்டி சதிரி மற்றும் தீவார்’ உள்ளிட்ட திரைப்படங்களில் இருந்தும் கூட காட்சிகள் உருவப்பட்டு இம்மாதிரி பிரச்சாரங்களுக்குப் பயன்படுத்தப் பட்டு வருகின்றன.

‘தீவார்’ திரைப்படத்தில் சசி கபூரும், அமிதாப்பும் தங்களது அம்மாவை தங்களிருவரில் யாருடைய வீட்டில் வைத்துக் கொள்வது? என்று சண்டையிட்டுக் கொள்வார்கள். அப்போது அந்தச் சண்டையை விலக்கும் அவர்களது அம்மா... ‘யார் வீட்டில் டாய்லெட் இருக்கிறதோ அங்கே தான் அம்மா இருப்பார்’ என்று கூறுவதாக ஒரு காட்சி. தற்போது அந்தக் காட்சியும் ஸ்வச் பாரத் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com