காட்டுப்பன்றி இறைச்சி உண்டதால் கோமா ஸ்டேஜுக்குப் போன நியூசிலாந்து இந்தியக் குடும்பம்!

பாக்டீரியம் கிளாஸ்டிரிடியம் பாட்டுலினம் எனும் நச்சுத்தன்மை வாய்ந்த பாக்டீரியாவால் பரவக்கூடிய நோய்த்தன்மை பாட்டுலிஸம் என்று வகைப்படுத்தப் படுகிறது.
காட்டுப்பன்றி இறைச்சி உண்டதால் கோமா ஸ்டேஜுக்குப் போன நியூசிலாந்து இந்தியக் குடும்பம்!

நியூஸிலாந்தில்  வசிக்கும் இந்தியக் குடும்பம் ஒன்று சமீபத்தில் காட்டுப்பன்றி ஒன்றை வேட்டையாடியது. வேட்டையாடியதோடு நில்லாமல் அவர்கள் அந்தப் பன்றியை பதப்படுத்தி வெகு ஆசையாக சமைத்தும் உண்டனர். உண்ட சில மணிநேரங்களிலேயே ஒவ்வொருவராக மயக்கநிலைக்குச் சென்றனர். அவர்களை மருத்துவமனையில் சேர்ப்பிக்கும் போது அவர்கள் கோமா ஸ்டேஜுக்குச் சென்று விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தார்கள். கோமா ஸ்டேஜுக்குச் செல்லத் தக்க அளவில் அவர்களுக்கு அப்படி என்ன பாதிப்பு? என மருத்துவர்கள் திகைக்க அவர்கள் உண்ட காட்டுப்பன்றி இறைச்சியால் தான் அவர்களுக்கு இந்த நிலை என்று பிறகு கண்டறிந்துள்ளனர். காட்டுப்பன்றி இறைச்சியால் பாட்டுலிஸம் எனும் அரிய வகை நோய்த்தாக்குதலுக்கு இவர்கள் உள்ளாகியிருக்கலாம், அதனால் தான் இவர்கள் கோமா ஸ்டேஜுக்குச் சென்றிருக்கக் கூடும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பாட்டுலிஸம் பாதிப்பு என்பது கூட ஒருவித சந்தேக அனுமானம் தான். பாதிக்கப்பட்டவர்களுக்கு பாட்டுலிஸத்தால் ஏற்படக்கூடிய விஷத்தன்மையை முறிக்கும் மருந்துகள் அளிக்கப்படுகையில் அது நன்கு வேலை செய்து அவர்களில் இருவரிடம் நல்ல முன்னேற்றம் தெரிந்ததால் மருத்துவர்கள் அந்த முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. முன்னேற்றம் என்றால் கண்களைத் திறந்து பார்த்திருக்கிறார்களே தவிர மற்றபடி இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பியபாடில்லை. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் குழந்தைகள் அந்த இறைச்சியை உண்ணவில்லை என்பதால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. 

பாதிக்கப்பட்ட இந்தியரின் பெயர் சிபு கொச்சுமென், அவரது மனைவி சுபி பாபு, மற்றும் அவரது மாமியார் அலிக்குட்டி டேனியல் இவர்கள் மூவருமே காட்டுப்பன்றி இறைச்சியை உண்ட பின் மயக்கமாகி விட கொஞ்சம் சுதாரித்துக் கொண்ட கொச்சுமென் தான் மயக்கத்திலிருக்கும் போதே ஆம்புலன்ஸுக்கும் தகவல் அளித்தாரென்று சொல்லப்படுகிறது.

பாட்டுலிஸம் என்றால் என்ன?

பாக்டீரியம் கிளாஸ்டிரிடியம் பாட்டுலினம் எனும் நச்சுத்தன்மை வாய்ந்த பாக்டீரியாவால் பரவக்கூடிய நோய்த்தன்மை பாட்டுலிஸம் என்று வகைப்படுத்தப் படுகிறது. இந்த வகை பாக்டீரியா அவர்கள் உண்ட காட்டுப்பன்றி இறைச்சியில் இருந்த காரணத்தால் தான் அவர்களுக்கு இந்த நிலை. இந்த பாக்டீரியாத் தொற்று ஏற்பட்டால் முதலில் சோர்வாக உணர்வார்கள், பிறகு கை, கால்களை அசைக்கக் கூட முடியாது, கண்கள் மங்கலாகத் தெரியும். பேச்சு வராது. போன்ற மாறுதல்கள் எல்லாம் ஒவ்வொன்றாக ஏற்படும். சில சீரியஸான கேஸ்களில் கோமா ஸ்டேஜ் வரை சென்று பின்பு உயிருக்கே ஆபத்தாகக் கூட முடிய வாய்ப்பிருக்கக் கூடிய ஒருவித நோய்த்தொற்று இது. பெரும்பாலும் ஸ்டோர் செய்யப்படும் அசைவ உணவு வகைகள், பாட்டிலில் அல்லது ஜார்களில் நெடுநாட்களுக்கு ஸ்டோர் செய்யப்பட்டு தாமதமாகப் பயன்படுத்தும் விதை உணவுப் பொருட்கள் போன்றவற்றில் இந்த பாக்டீரியாக்கள் எளிதில் தொற்றி அதை உண்பவர்களை மேற்கண்ட சங்கடத்தில் ஆழ்த்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com