2017 ல் விற்பனையில் சாதனை படைத்த சிறந்த ஸ்கூட்டர்கள் லிஸ்ட்!

2017 ல் விற்பனையில் சாதனை படைந்த பெஸ்ட் ஸ்கூட்டர்கள்  லிஸ்ட் உங்களுக்காக இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன...
2017 ல் விற்பனையில் சாதனை படைத்த சிறந்த ஸ்கூட்டர்கள் லிஸ்ட்!

2017 ஆம் ஆண்டு லாஞ்ச் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களில் எந்தெந்த பிராண்டுகள் சிறந்தவை என வாடிக்கையாளர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்ள அந்தந்த பிராண்டுகளின் விற்பனை லிஸ்டைப் பார்த்தால் தெரிந்து விடும் தானே! இதோ அந்த வகையில் 2017 ல் விற்பனையில் சாதனை படைந்த பெஸ்ட் ஸ்கூட்டர்கள்  லிஸ்ட் உங்களுக்காக இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன...


ஹோண்டா ஆக்டிவா 4G

2017 ல் லாஞ்ச் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களில் இந்தியாவில் அதிக அளவில் விற்பனையாகி முதலிடம் பிடித்தது ஹோண்டா ஆக்டிவா 4G. 109 CC, சிங்கிள் சிலிண்டர் எஞ்சின், 8bhp உள்ளிட்ட ஈர்க்கத்தக்க அம்சங்களுடன் சீட்டுக்கு அடியில் மொபைல் சார்ஜ் செய்துகொள்ளும் வசதியுடனும் வடிவமைக்கப் பட்டுள்ள இந்த ஸ்கூட்டி கடந்தாண்டு விற்பனையில் சாதனை படைத்தது. பெண்களுக்கு ஏற்ற இருசக்கர வாகனங்களில் ஹோண்டா 4G யை அடித்துக் கொள்ள வேறு வாகனம் இல்லை. இதன் ஷோரூம் விலை  ₹ 51,324

டிவிஎஸ் ஜூப்பிடர் கிளாஸிக் எடிசன்

டிவிஎஸ்ஸின் புதிய அறிமுகங்களில் ஜூபிடருக்கு எப்போதுமே முதலிடம் தான். பெண் வாடிக்கையாளர்களுக்கு என்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இதை ஆண்களும் ஓட்டலாம் என்பதால் இதற்கான வரவேற்பு அமோகமாக இருந்தது. அதிலும் கடந்தாண்டு லாஞ்ச் செய்யப்பட்ட ஜூபிடர் கிளாஸிக் எடிசன் வகை தோற்றத்தில் செம லுக்! சூப்பர் மெட்டாலிக் டபிள் கலர் ஷீட் முதல் பெட்ரோல் டேங்குக்கான திறப்பை வெளியில் வடிவமைத்தது, மொபைல் சார்ஜர் வசதி, 110cc, சிங்கிள் சிலிண்டர் எஞ்சின், 7.9bhp உள்ளிட்ட அம்சங்களுடன் 10 வைப்ரண்ட் வண்ணங்களிலும் கிடைக்கக் கூடியது ஜூபிடர் கிளாஸிக். இதன் ஷோரூம் விலை ₹ 55,466.

ஹோண்டா கிளிக்

கிராமப்புற மற்றும் செமி டவுன் தோற்றம் கொண்ட புறநகர்ப் பகுதி வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகவே உருவாக்கப்பட்ட இருசக்கர வாகன வடிவமைப்பு இது. பார்ப்பதற்கு பெரிதாகத் தோற்றமளித்தாலும் இது ஹோண்டா ஆக்டிவா 4G யை விடவும் எடைகுறைவானதே. அதனால் இதன் பெட்ரோல் டேங்கின் கொள்ளளவு 3.5 லிட்டர் மட்டுமே. இதன் ஷோரூம் விலை  ₹ 42,384 

ஹோண்டா கிரேஸியா


நகர்ப்புறத்தைச் சேர்ந்த இளைஞர்களை மையமாக வைத்து அவர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப் பட்ட ஹோண்டா கிரேஸியா ஹோண்டா ஆக்டிவா 125 க்கு ஈடாக 125cc எஞ்சின் கொண்டது. இரட்டை மெட்டாலிக் டோன் கலர்கள், குரோம் டிசைன் எலிமெண்டுகள், பிரீமியம் குவாலிட்டி ஸ்விட்ச் கியர்கள், புத்தம் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல்களுடன் கூடிய கையடக்கமான விஸர் பகுதி என அட்டகாசமாகக் களமிறக்கப்பட்டுள்ளது. சிங்கிள் சிலிண்டர் எஞ்சின், 8.52 bhp பவர் கொண்ட இந்த வண்டி இதுவரையிலான ஹோண்டா வாகனங்களில் அதிக விலை எனக் கூறப்படுகிறது. இதன் ஷோரூம் விலை ₹ 57,897

ஒகினாவா பிரைஸ்

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர்களான ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனத்தார் கடந்த ஆண்டு வடிவமைத்த பிராண்ட் நியூ மாடல் தான் ஒகினாவா பிரைஸ். LED ஹெட் லைட்டுகள் DRL & LED டெயில் லைட்டுகளுடனான இண்டிகேட்டர்கள் எனத் தயாராகும் ஒகினாவா பிரைஸ் 1000 வாட் எலெக்ட்ரிக் மோட்டார் பவருடன் மணிக்கு 75 கிலோமீட்டர்கள் வரை செல்லக்கூடிய திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பேட்டரி பவரானது ஒருமுறை சார்ஜ் செய்யப்பட்டால் போதும் 175 முதல் 200 கிலோமீட்டர்கள் வரை செல்லக்கூடிய திறன் கொண்டது. முபுற சக்கரங்கள் 12 இஞ்ச் விட்டம் கொண்டவை 2 ஷாக்குகள் இருப்பதால் முதுகுத் தண்டுவடங்களைப் பாதுகாக்கும் தன்மை உண்டு. முன்புற சக்கரத்தில் இரண்டு டிஸ்க் பிரேக்குகளும் பின்புற சக்கரத்தில் சிங்கிள் டிஸ்க் பிரேக்கும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் இன்ஸ்ட்ருமெண்ட் பேனல், 19.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட அண்டட் ஷீட் ஸ்டோரேஜ் வசதி கொண்டது. அது மட்டுமல்ல, சைட் ஸ்டாண்ட் சென்ஸார், கீலெஸ் இக்னிஷன் ஸ்டார்ட் வசதி, ஃபைன்ட் மை ஸ்கூட்டர் ஆப்சன் என இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அத்தனை அம்சங்களும் வாடிக்கையாளர்களைப் பெரிதும் ஈர்க்கும் விதத்தில் அமைந்திருப்பதால் கடந்த ஆண்டின் மிகச்சிறந்த ஸ்கூட்டர் என்ற பெருமையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com