எனது அலுவலகத்தில் பெண்கள் பெண்களைப் போல உடையணிய வேண்டும்: டிரம்ப்

நீங்கள் டிரம்பிடம் பணி புரிந்தால் மட்டும் தான் இந்தக் ஆடை, தோற்றக் கட்டுப்பாடுகள் என்பதில்லை, அதிபர் டிரம்ப் சார்பாக, அவரது பிரதிநியாக நீங்கள் கலந்து கொள்ளப் போகும்
எனது அலுவலகத்தில் பெண்கள் பெண்களைப் போல உடையணிய வேண்டும்: டிரம்ப்

அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டிரம்ப் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொள்வதற்கு முன்பிருந்தே மீடியாக்களின் பற்சக்கரங்களில் மாட்டிக்கொ கொண்டு அடிக்கடி அரைபட்டுக் கொண்டே தான் இருக்கிறார். அதிலும் அதிபராகப் பதவியேற்றுக் கொண்ட இந்த 15 நாட்களுக்குள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக டிரம்ப்பின் அதிகாரங்கள் தூள் பறக்கின்றன.

இப்போதென்ன புதிதாகச் சொல்லி இருக்கிறார்? என்று தெரிந்து கொள்ள வேண்டுமே நீங்கள்! டிரம்ப் தன்னிடம் அதிபர் மாளிகையில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் மிக அருமையாக உடை அணிந்து வருவதோடு தங்களது தோற்றத்தையும் பொலிவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறாராம். இன்னும் சற்று புரியும்படியாகச் சொல்ல வேண்டுமானால். “பெண்கள் பெண்களைப் போலவும், ஆண்கள் ஆண்களைப் போலவும்”  நேர்த்தியாக உடையணிய வேண்டும், என்று டிரம்ப்பின் அதிகார வட்டத்தைச் சார்ந்த அதிகாரி ஒருவர் திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார்.


நீங்கள் டிரம்பிடம் பணி புரிந்தால் மட்டும் தான் இந்தக் ஆடை, தோற்றக் கட்டுப்பாடுகள் என்பதில்லை, அதிபர் டிரம்ப் சார்பாக, அவரது பிரதிநியாக நீங்கள் கலந்து கொள்ளப் போகும் அனைத்து இடங்களிலும் கடுமையான உடைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அவற்றை செயல்படுத்தி வருகின்றனர் அதிபர் சார்பாக இயங்கும் குழுவினர்.

டிரம்ப் உத்தரவிட்டுள்ளதைப் பார்த்தால் அவருக்கு கீழ் பணியாற்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகளும், ஊழியர்களும் இனி டிரம்பின் ராணுவக் கட்டுப்பாட்டில் சிக்கித் திணறும் நிலை தான் போல!

முன்பொருமுறை பிரிட்டிஷ் இளவரசி டயானாவின் சுயசரிதையில் வாசித்த ஒரு விசயம் நினைவுக்கு வருகிறது. அரச குடும்பத்தினர் மறந்தும் கூட ஜீன்ஸ் தைத்துப் போட்டுக் கொள்ளக் கூடாதாம். ஜீன்ஸ் என்பது அங்கெல்லாம் கடைநிலைப் பணியாளர்கள் அணியும் உடை என்பதாக ஒரு மனப்பான்மை அன்று பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் இருந்திருக்கிறது. 

டிரம்ப் ஜீன்ஸுக்குத் தடை போடவில்லை. ஆனால் பெண்கள் ஜீன்ஸ் அணிந்து கொண்டு அலுவலகம் வந்தாலும் அவர்களது தோற்றம் நேர்த்தியாகவும், கண்ணியமாகவும் இருந்தாக வேண்டும். பெண்கள், பெண்களைப் போல உடையணிந்து அலுவலகம் வர வேண்டும். என்று உத்திரவிட்டுள்ளதாக டிரம்பின் அதிகாரப் பூர்வ மையங்களில் இருந்து செய்திகள் பரவுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com