பளீரிடும் புன்னகைக்கும், பச்சரிசிப் பல் அழகுக்கும்!  

சிரிக்கும் போது பற்கள் வெண்மையாக பளீரிட வேண்டும் என்ற ஆசை யாருக்குத் தான் இருக்காது!
பளீரிடும் புன்னகைக்கும், பச்சரிசிப் பல் அழகுக்கும்!  

சிரிக்கும் போது பற்கள் வெண்மையாக பளீரிட வேண்டும் என்ற ஆசை யாருக்குத் தான் இருக்காது! ஆனால் பெரும்பாலனவர்களுக்கு பற்கள் வெண்மையாக இருப்பதில்லை. இயற்கையில் பல் மருத்துவத்தின் அடிப்படையில் பார்த்தால் மனிதப் பற்களின் நிறம் எப்போதுமே, யாருக்குமே பளீரிடும் வெண்மை நிறத்தில் இருப்பதில்லை என்பதே நிஜம். அவரவர் சார்ந்துள்ள நிலப்பகுதி, சீதோஷ்ண நிலை, அவர்கள் பயன்படுத்தும் குடிநீரில் கரைந்துள்ள மினரல்கள் அடிப்படையில் மனிதர்களுக்கு பற்களின் நிறங்கள் அமைகின்றன. இயற்கை பற்களின் நிறம் போதாது, என்று நினைப்பவர்கள் உடனடியாக பளீரிடும் பற்களைப் பெற வேண்டுமானால் என்ன செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம். இது மிக மிக எளிமையான முறை தான்.

தேவையான பொருட்கள்:

எலுமிச்சை சாறு: 1/2 டீஸ் பூன்
பேக்கிங் சோடா: 1/2 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு வேண்டாமென்பவர்கள் அதற்கு பதிலாக அதே அளவு தண்ணீரும் பயன்படுத்தலாம்.

செய்முறை:

1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு சின்ன கப்பில் எடுத்துக் கொண்டு, அதனுடன் அதே அளவு 1/2 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலக்க வேண்டும். பேக்கிங் சோடாவில் எலுமிச்சை சாறு கலந்ததும் அது இரண்டும் வினைபுரிந்து குமிழிகளாக வரும். குமிழ்கள் அடங்கி கலவை நன்கு கெட்டியானதும். அவற்றை மோதிர விரலால் ஒற்றி எடுத்து பற்களில் அப்ளை செய்ய வேண்டும். மூன்றே நிமிடங்கள் மட்டும் தான். அதற்கு மேல் வேண்டாம். பிறகு நன்றாக வாய் கொப்பளித்து கழுவ வேண்டும். இந்த முறை உடனடிப் பலன் தரும்.

ஆனால் சிலருக்கு எலுமிச்சை சாறு வேண்டாம் என்று நினைத்தால் அதற்கு பதிலாக அதே அளவு தண்ணீர் கலந்து, கலவை நன்கு கெட்டியானதும் பேஸ்ட் போல பாவித்து பிரஸ்ஸில் தடவி பற்களை நன்கு தேய்த்துக் கழுவினால் போதும். இந்த முறையில் பற்கள் வெண்மையாக 1 முதல் 2 வாரங்கள் ஆகும். எப்படியானாலும் இரண்டு முறைகளுமே பயனளிக்கக் கூடியவையே!

பேக்கிங் சோடாவின் நன்மை: இது பற்குழிகளை உண்டாக்க வல்ல ‘ஸ்ட்ரெப்டோ காக்கஸ் மியூட்டன்’ எனும் பாக்டீரியாக்களை அழித்து விடுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com