ஜெ நிரபராதியாகவே மறைந்ததில் ‘அம்மா’ அபிமானிகளுக்கு ஆறுதல்! 

மேற்கண்ட வழக்கு விவரப்படி நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பில் ஜெயலலிதா குற்றவாளி இல்லை எனத் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் ஜெ செப்டம்பர் 22 2016 அன்று நோய் தொற்று காரணமாக உடல்நிலை மோசமாகி சென்னை 
ஜெ நிரபராதியாகவே மறைந்ததில் ‘அம்மா’ அபிமானிகளுக்கு ஆறுதல்! 

சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இன்று வெளியிடப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி மறைந்த முதல்வர் ஜெயலலிதா இறந்து விட்டதால் அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். குற்றம் சுமத்தப் பட்டவர்களில் மீதமுள்ள மூவருக்கும் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் முன்னதாக கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் 2014 செப்டம்பர் 27 அன்று விசாரணை முடிந்து, ஜெயலலிதா குற்றவாளி என நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பு வழங்கினார்.


செப்டம்பர் 29, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் மேலும் இவ்வழக்கின் தண்டனையிலிருந்து "பிணை" வழங்க வேண்டும் எனவும் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் செயலலிதா தனது வழக்கறிஞர் மூலம் மனு தாக்கல் செய்தார். மேல் முறையீட்டில் நீதிபதி குமாரசாமி செயலலிதா மீதான குற்றச்சாட்டை அரசு தரப்பு வழக்கறிஞர் நிரூபிக்கவில்லை எனக்கூறி ஜெயலலிதா உட்பட நால்வரையும் விடுதலை செய்தார். நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. 

மேற்கண்ட வழக்கு விவரப்படி நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பில் ஜெயலலிதா குற்றவாளி இல்லை எனத் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் ஜெ செப்டம்பர் 22 2016 அன்று நோய் தொற்று காரணமாக உடல்நிலை மோசமாகி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கிட்டத்தட்ட 75 நாட்களுக்குப் பின் அவரது உடல்நிலை குறித்து ஊடகங்களில் வெளியான பல்வேறு சர்ச்சைகளின் பின் டிசம்பர் 6 அன்று உடனடி இருதய அடைப்பு காரணமாக மரணமடைந்தார். அப்பல்லோவில் இருந்த காலங்களில் சுயநினைவு அற்றவராக இருந்தாலும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கியிருந்தார். ஆனாலும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு காலதாமதம் ஆன நிலையில் ஜெ இறந்த அன்று கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பின் படி ஜெ மரணத்தின் போது குற்றவாளி இல்லை என்பதாகவே ஆகிறது.

இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றம் சாட்டப்பட்ட நபர் மரணமடையும் தறுவாயில் அவர் தண்டனையில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்பது பொது நியதியாக இருந்தாலும் ஜெ அபிமானிகளுக்கு தங்களது மாண்பு மிகு ‘அம்மா’ நிரபராதியாகவே மரணித்து விட்டார் என்பது மிகுந்த ஆறுதலான விசயமே என்பதாக மக்களிடையே ஒரு கருத்து நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com