‘சிஸோஃபெரினியா’ தாக்காமலிருக்க பிளஸ் டூ மாணவர்களுக்கு நீர்மோர் கொடுங்கள்!

பள்ளிகளும், ஊடகங்களும், உறவினர்களும், பெற்றோரும், அக்கம் பக்கத்தினரும் இந்த தேர்வினை வாழ்வின் கடைசி படி என்றும், இதில் தேறா விட்டால் வாழ்க்கையே போனது என்றும் சொல்லி சொல்லியே அவர்களுக்கு பேயைக்  கண்டால
‘சிஸோஃபெரினியா’ தாக்காமலிருக்க பிளஸ் டூ மாணவர்களுக்கு நீர்மோர் கொடுங்கள்!

'சிஸோஃபெரினியா' என்பது நடக்காத சம்பவத்தினை நடந்து விட்டது போல் எண்ணி எப்போதும் அதன் தாக்கத்தில் இருப்பது, இந்த மன நோய்க்கான காரணி மூளையில் ஏற்ப்படும் கெமிக்கல் இம்பேலன்ஸ்.
 
குறிப்பாக  பிளஸ் டூ  மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். 
 
பள்ளிகளும், ஊடகங்களும், உறவினர்களும், பெற்றோரும், அக்கம் பக்கத்தினரும் இந்த தேர்வினை வாழ்வின் கடைசி படி என்றும், இதில் தேறா விட்டால் வாழ்க்கையே போனது என்றும் சொல்லி சொல்லியே அவர்களுக்கு பேயைக்  கண்டால் எவ்வளவு  பயம் வரக்கூடுமோ அவ்வளவு பயம் இந்த தேர்வினைக் கண்டும் வரச் செய்து விடுகிறார்கள். 
 
இந்த  மன அழுத்தத்தால் மாணவர்களின் மூளையில் உள்ள ட்ரான்ஸ்மிட்டர்கள் உஷ்ணம் அடைந்து பீனியல் சுரப்பிகள் தடுமாறுகின்றன. 
 
கேள்வித்தாளை பார்க்கும்போது எதிர்கால உலகின் ஒட்டு மொத்த அழுத்தங்கள் ஒரு சேர அழுத்த மூளை செயலற்றதாகி விடுகிறது,  அது மாதிரியான சமயங்களில் உடல் வேர்க்கும், உடல் சூடாவது போல் உணர்வார்கள், படபடப்பு வரும், (குறிப்பாக உள்ளங்கைகள் வேர்க்கும்) தேர்வு பயம் கொண்ட பெரும்பாலான மாணவர்களுக்கு இது நடக்கிறது. 
 
சரி இதை எப்படி போக்குவது? இதிலிருந்து மாணவர்களை எப்படி விடுவிப்பது என்று பார்க்கும் போது அலோபதியை விடை நாட்டு மருத்துவம் இதற்கான சிறப்பானதொரு தீர்வை தருகிறதாம். 


 
நாட்டு மாட்டு பசும்பாலில் கிடைக்கும் தயிரினை எடுத்து கடைந்து நீர்மோராக ஆற்றி வடிகட்டியபின் இரண்டு டம்ளர் பருகிவிட்டு சென்றால் அதிகப்படி வேர்த்தல் படபடப்பு குறையும். மூளை உஷ்ணமடைவது தடுக்கப்படும் என நாட்டு மருத்துவர்கள் கூறுகின்றனர்.
 
அதிகப்படியான அலுவலக பணிச்சுமை, நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் நண்பர்கள் கூட இதனைச் செய்யலாம். இதனை உங்களுக்கு தெரிந்த +2மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் தெரியப்படுத்தி பகிர்ந்து கொள்ளலாம் ஏனெனில் மோர், நீர் மோர் போன்றவற்றைக் குடிப்பதனால் எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படப் போவதில்லை. மோர் குடிப்பதை உடலுக்கு ஆரோக்கியமான ஒன்றாகவே அலோபதி மருத்துவர்களும் கூட ஒத்துக் கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com