தங்களுக்கு நேரும் அவலங்களை வெளிப்படையாக தெரிவிக்க மறுக்கும் பெண்களிடையே  அன்னபூர்ணா ஒரு ஆச்சரியமே!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உடல்நலக்குறைவால் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தன்னை பேருந்து நிலையக் காவல்பணியில் ஈடுபட்டிருந்த ஆண் காவலர்கள் சந்தேகத்தின் பேரில் துன்புறுத்தியதாக
தங்களுக்கு நேரும் அவலங்களை வெளிப்படையாக தெரிவிக்க மறுக்கும் பெண்களிடையே  அன்னபூர்ணா ஒரு ஆச்சரியமே!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உடல்நலக்குறைவால் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தன்னை பேருந்து நிலையக் காவல்பணியில் ஈடுபட்டிருந்த ஆண் காவலர்கள் சந்தேகத்தின் பேரில் துன்புறுத்தியதாக  புகார் அளித்து பெங்களூரைச் சேர்ந்த ஆய்வு மாணவியான அன்னபூர்ணா இரு தினங்களுக்கு முன் ஊடகங்களில் பரபரப்புச் செய்தியானார். மாணவி அன்னபூர்ணா, அச்சமயத்தில் அங்கு செய்தியாளர்களுடன் பேசிக்கொண்டிருந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இது குறித்து நேரடியாகப் புகார் தெரிவித்திருந்தார். அமைச்சரிடம் மட்டுமல்ல அப்போது அங்கிருந்த செய்தியாளர்களிடமும் அன்னபூர்ணா, தனக்கு நேர்ந்த அவலம் குறித்து ஆவேசத்துடன் கண்ணீர் மல்க விளக்கமாகப் புகார் அளித்தார். 

மேலும் அமைச்சர் விஜய பாஸ்கர் அறிவுறுத்தலின் படி கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்திலும் அன்னபூர்ணா புகார் அளித்திருந்தார். அமைச்சரே நேரடியாகத் தலையிட்டிருந்தாலும் இரண்டு தினங்களாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த அன்னபூர்ணாவின் புகாரைப் பற்றி ஊடகங்கள் மூலமாக அறிந்த 
மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ததோடு, மாணவியின் புகார் குறித்து உரிய விளக்கம் அளிக்கும் படியும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. உதவி ஆணையர் நிலைக்கு குறையாத அதிகாரம் உள்ள அதிகாரி ஒருவர் மூலம் விசாரணை நடத்தி 8 வாரத்துக்குள் இந்த வழக்கு குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மாநில மனித உரிமை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மாணவியின் கண்ணீர் மல்கும் புகார் குறித்த யூ டியூப் விடியோ இணைப்பு காண ...

video courtsy: you tube, thanthi tv.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com