தமிழில் ‘குற்றப் பரம்பரை’ வருகிறதோ? இல்லையோ! இந்தியில் அமீர்கான் நடிப்பில்...

அமீர்கான் குற்றப் பரம்பரை கதையில் நடித்து அது தமிழில் ‘டப்’ செய்யப்பட்டு உலகளாவிய பாராட்டுகளைக் குவிக்கும் முன்பாகவாவது, நமது தமிழ் இயக்குனர்கள் தங்களது பகையை மறந்து குற்றப் பரம்பரை குறித்த நமது தமிழக
தமிழில் ‘குற்றப் பரம்பரை’ வருகிறதோ? இல்லையோ! இந்தியில் அமீர்கான் நடிப்பில்...

தமிழில் ‘குற்றப் பரம்பரை’ திரைப்படத்தை எடுக்க பாலாவும், பாரதிராஜாவும் சண்டை போட்டுக் கொண்டது பழங்கதை. இப்போது வரை அந்தப் படத்தை யார் எடுக்கப் போகிறார்கள்? எனத் தெரியாத நிலை தான். இடையில் தனது குற்றப் பரம்பரை கதையை திரைப்படமாக்கும் தகுதி பாலா ஒருவருக்கே உள்ளது என அக்கதையின் ஆசிரியரான வேல.ராம மூர்த்தி தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் சில மாதங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். எழுத்தாளர் ரத்னகுமார் என்பவர் ‘குற்றப் பரம்பரை’ என்பது தனது கதைக்காக தான் பதிவு செய்து வைத்த டைட்டில் எனக் கூறி கதைக்கு உரிமை கொண்டாடினார். குற்றப்பரம்பரைக்காக நடந்த சண்டைகள் அனைத்தும் என்ன ஆயினவோ? ஆனால் இந்திய வரலாற்றில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாய வகுப்பினர் குற்றப் பரம்பரை என முத்திரை குத்தப் பட்டு கொலைகாரர்களாகவும், கொள்ளைக்காரர்களாகவும் குற்றம் சாட்டப்பட்டு  மிகுந்த கொடுமைகளை அனுபவித்து வந்தனர் என்பது அப்பட்டமான உண்மை. இது நிஜ வரலாறு. 

இப்போது விசயம் அதுவல்ல, தமிழகம் மட்டுமல்ல வட இந்தியாவிலும் கூட இப்படியான ஒரு குற்றச்சாட்டு முறையை பிரிட்டிஷார் கையாண்டிருக்கின்றனர். வட இந்தியாவில் நிகழ்ந்த குற்றப் பரம்பரை வரலாற்றை ஆவணப் படுத்தி எழுதப்பட்டது தான் ‘கன்ஃபெஷன்ஸ் ஆஃப் ஏ தக்’ கதை. பிரிட்டிஷ் ஆட்சியில் வட இந்தியாவில் கொள்ளைக்காரர்களாக, கொலைக்காரர்களாக சித்தரிக்கப் பட்டவர்களைப் பற்றியதான இந்தக் கதையில் அமீர்கான் கொள்ளைக்கார நாயகனாக நடிக்கவிருக்கிறாராம். கொள்ளைக் கூட்டத் தலைவனாக நடிக்கவிருப்பது ‘பிக் பி’ அமிதாப் பச்சன். வரலாற்றை ஆவணப் படுத்தும் வகையிலான லகான், டங்கல், அமீர்கானின் முந்தைய படங்கள் எப்போதுமே அதிரடி வெற்றிகளை அள்ளிக்குவித்தவை. என்பதோடு அமீர்கானின் ‘டங்கல்’ தமிநாட்டில் ஏற்படுத்திய அதிர்வு இன்னும் ஓயவில்லை. மக்கள் குடும்பம், குடும்பமாகச் சென்று அந்தப் படத்தை பார்த்தார்கள். இந்திய அளவில் படத்திற்கு பெயரளவுக்கு மட்டுமல்ல வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றி கிடைத்தது. அப்படிப் பட்ட அருமையான திரைக்கதை அமைப்புடன் அமீர்கான் குற்றப் பரம்பரை கதையில் நடித்து அது தமிழில் ‘டப்’ செய்யப்பட்டு உலகளாவிய பாராட்டுகளைக் குவிக்கும் முன்பாகவாவது, நமது தமிழ் இயக்குனர்கள் தங்களது பகையை மறந்து குற்றப் பரம்பரை குறித்த நமது தமிழக வரலாற்றை திரைப்படமாக பதிவு செய்து முடிப்பார்களா? எனத் தெரியவில்லை.

அமீர்கானும், அமிதாப் பச்சனும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ள ‘கன்ஃபெஷன்ஸ் ஆஃப் ஏ தக்’ இந்தித் திரைப்படம் அடுத்த ஆண்டு தீபாவளி அன்று வெளியிடப் படும் வகையில் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறதாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com