தி ரைஸ் ஆஃப் சிவகாமி: பாகுபலி 1 லிருந்து கிளர்ந்தெழும் கதைகள்!

சிவகாமியின் பிறப்பையும், தனது அப்பாவித் தந்தைக்காக அவள் பழி வாங்கக் துடிக்கும் நீண்ட கால காத்திருப்பையும் முன்னெடுக்கிறது இந்த நாவல். சிவகாமி யாரை பலி கொள்ள காத்திருக்கிறாள் என்றால்? அது சாட்ஷாத் 
தி ரைஸ் ஆஃப் சிவகாமி: பாகுபலி 1 லிருந்து கிளர்ந்தெழும் கதைகள்!

பாகுபலி-2 வெளிவர இன்னும் முழுதாக 2 மாதங்களும் 20 சொச்ச நாட்களும் இருக்கின்றன. ஆனால் பாகுபலி- 1 வெளிவந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தப் படம் குறித்து நாம் பேசிக் கொண்டேயிருப்பதற்கு அதற்கு கிடைத்த விளம்பரம் மற்றும் வியாபார வாய்ப்புகளும் ஒரு காரணம் எனலாம். ‘பாகுபலி தி பிகினிங்’ திரைப்படத்தைப் பொறுத்தவரை அதற்கு கிடைத்த வரவேற்பு என்பது ஹிந்தித் திரைப்படங்களின் வசூல் எல்லைகளையும் கூட தகர்த்தெறிந்த மாபெரும் வெற்றி வாய்ப்பு.

பாகுபலி வெறும் திரைப்பட நோக்கில் மட்டுமே படமாக்கப்பட்டிருந்தால் மக்கள் இந்தப் படத்தையும் முந்தைய வெற்றிப்படங்களைப் போலவே மறந்து போயிருக்க கூடும். ஆனால் பாகுபலி தனது திரைப்படம் என்ற எல்லையை வெகு எளிதாகத் தாண்டி சிறுவர்களுக்கான கதையாடலாகவும் பரந்து விரிந்ததில் அதற்கான வியாபார வாய்ப்புகளும் விரிவடைந்து கொண்டே செல்கின்றன. முதலில் சர்வதேச அளவில் படத்தைக் கொண்டு செல்ல தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பிரதான இந்திய பிராந்திய மொழிகள் தாண்டி சீனாவில் படம் வெளியிடப்பட்டது. உலகில் அதிக மக்கள் தொகை நாடுகளில் முதலிடம் சீனாவுக்கே. அங்கே படம் வெற்றியடைந்தது.

பிறகு பாகுபலி- 1 கிராபிக் நாவலாக கொண்டு வரப்பட்டது. படமே விஷூவல் டிரீட் வகையில் அமைந்ததால் இந்தத் திரைப்படத்தை சிறுவர்கள் விரும்பிப் படிக்கும் கிராபிக் நாவலாக உருவாக்குவதில் சிரமம் ஏதும் இருக்கவில்லை. அந்த வகையிலும் பாகுபலிக்கு வெற்றியே கிட்டியது.

தொடர்ந்து படத்தின் பிரதான கதாபாத்திரங்களை முன்வைத்து தனித் தனியாக காமிக்ஸ் புத்தகங்களும், நாவல்களும் எழுதும் முயற்சியும் வெற்றியடைந்துள்ளது. இதோ இது சிவகாமி தேவியின் கதை. தி ரைஸ் ஆஃப் சிவகாமி, ஆனந்த் நீலகண்டன் எழுதியுள்ள இந்த நாவல் பாகுபலியின் ராஜமாதா சிவகாமி தேவியின் இளமைக்காலங்களை நம் கண் முன்னே நடமாட விடுகிறது. பாகுபலி தி பிகினிங் முதல் பாகத்துக்கும் முந்தைய கற்பனை இது.

சிவகாமியின் பிறப்பையும், தனது அப்பாவித் தந்தைக்காக அவள் பழி வாங்கக் துடிக்கும் நீண்ட கால காத்திருப்பையும் முன்னெடுக்கிறது இந்த நாவல். சிவகாமி யாரை பலி கொள்ள காத்திருக்கிறாள் என்றால்? அது சாட்ஷாத் மாஹிஷ்மதியின் சக்ரவர்த்தியான வீரேந்திர பாகுபலியாகத் தான் இருக்க முடியும்... எனக் கதை நகர்கிறது. முன்னுரையே இத்தனை ஆர்வத்தை தூண்டும் வண்ணம் இருந்தால் முழுக்கதை இன்னமும் அருமையாகத் தான் விஸ்தரிக்கப்பட்டிருக்கும்.

விருப்பமிருப்பவர்கள் புத்தகம் வாங்கி வாசிக்கலாம், அல்லது கிண்டிலில் பதிவிறக்கம் செய்தும் படிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com